8 லட்ச ரூபாய் கார்னு சொல்லி அறிமுகம் செஞ்சாங்க... இப்போது விலை எவ்வளவு தெரியுமா?
சிட்ரோன் (Citroen) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டில் பசால்ட் (Basalt) என்கிற கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா கர்வ் (Tata Curvv) காருக்கு போட்டியாக இதனை சிட்ரோன் நிறுவனம் அறிமுகம் செய்தது. மேலும், இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்துக்கு அதிக எண்ணிக்கையில் கஸ்டமர்களை பெற்றுத்தரக்கூடிய காராகவும் பசால்ட் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய காரின் விலையில் சில திருத்தங்களை புதிய 2025ஆம் ஆண்டை முன்னிட்டு சிட்ரோன் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
2025ஆம் ஆண்டை நிறைய கார் நிறுவனங்கள் விலை அதிகரிப்புடன் துவங்கியுள்ளன. ஏனெனில், தொடர்ந்து அதிகரித்துவரும் உற்பத்தி செலவுக்கு கார்களின் விலையை அதிகரித்தால்தான், அவற்றால் இலாபம் பார்க்க முடியும். அந்த வரிசையில், சிட்ரோனும் அதன் லேட்டஸ்ட் அறிமுகமான பசால்ட்டின் விலையை அதிகரித்துள்ளது. இதன்படி, பசால்ட் எஸ்யூவி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை இனி ரூ.8.25 லட்சம் ஆகும்.

இந்தியாவில் 2024 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோன் பசால்ட் காரின் விலை ஆனது ரூ.28 ஆயிரம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மேனுவல் பிளஸ் மற்றும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆட்டோமேட்டிக் பிளஸ் வேரியண்ட்களில் சிட்ரோன் பசால்ட் கார் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எண்ட்ரீ-லெவல் 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் யு வேரியண்ட் ஆனது ரூ.26,000 விலை அதிகரிப்பை பெற்றுள்ளது. மறுப்பக்கம், ட்யூயல்-டோன் (Dual-tone) பெயிண்ட் உடன் கிடைக்கும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மேனுவல் மேக்ஸ் வேரியண்ட்டின் விலை ரூ.21,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுவே, 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மேக்ஸ் வேரியண்ட்டை சிங்கிள்-டோன் பெயிண்ட்டில் வாங்குவதாக இருந்தாலும் சரி, ட்யூயல்-டோனில் வாங்குவதாக இருந்தாலும் சரி காரின் விலை ரூ.17,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 1.2 லிட்டர் மேனுவல் பிளஸ் வேரியண்ட்டின் விலையில் மட்டும் மாற்றமில்லை. அறிமுகம் செய்யப்பட்ட போது அறிவிக்கப்பட்டதுபோல் ரூ.9.99 லட்சத்தில் அப்படியே தொடர்கிறது. இந்த விலை திருத்தங்களுக்கு பிறகு சிட்ரோன் பசால்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.25 லட்சத்தில் இருந்து ரூ.14 லட்சம் வரையில் உள்ளன.
சிட்ரோன் பசால்ட் காரிலும் சிட்ரோன் சி3 ஹேட்ச்பேக் காரில் வழங்கப்பட்ட அதே என்ஜின் ஆப்ஷன்கள் தான் வழங்கப்பட்டுள்ளன. அதில், 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே பெற முடியும். ஆனால், 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம்.

இந்த விலை திருத்தங்களுக்கு மத்தியில், சிட்ரோன் பசால்ட் காரின் எலக்ட்ரிக் வெர்சனை அறிமுகம் செய்யும் பணியிலும் சிட்ரோன் ஈடுப்பட்டு வருகிறது. பசால்ட் இவி எலக்ட்ரிக் கார் குறித்த அப்டேட்களுக்கு தொடர்ந்து நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தை காணவும். டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக பசால்ட் இவி எலக்ட்ரிக் காரை சிட்ரோன் உருவாக்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா கர்வ் காருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டதினாலேயே சிட்ரோன் பசால்ட் கார் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. அதனால், இவ்வாறான சிறிய விலை அதிகரிப்புகள் பசால்ட் காரின் விற்பனையை பெரியதாக பாதிக்காது என நினைக்கிறோம். இதேபோல், கர்வ் காரின் விலையையும் டாடா மோட்டார்ஸ் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









