வெறும் ரூ11,000 இருந்தா போதும்! இந்த காரை இப்பவே புக் பண்ணலாம்!

சிட்ரோன் நிறுவனம் தனது பசால்ட் எக்ஸ் காரின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த காருக்கான அதிகாரப்பூர்வமான புக்கிங்கையும் துவங்கியுள்ளது. இந்த காரை வாங்க நினைப்பவர்கள் தற்போதே இந்த காரை புக்கிங் செய்ய முடியும். அதன்படி இந்த காரின் விரிவான விபரங்கள் குறித்த தகவல்களை காணலாம் வாருங்கள்.

சிட்ரோன் நிறுவனம் கூபே ஸ்டைலில் பசால்ட் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்த காரின் புதிய வெர்னாக பசால்ட் எக்ஸ் என்ற காரை களம் இறக்க தயாராகி வருகிறது.இந்த காருக்கான டீசரும் தற்போது வெளியாகியுள்ளன. இந்த காருக்கான முன்பதிவையும் அந்நிறுவனம் துவங்கியுள்ளது.

Citroen Basalt X

ரூ11,000 முன்பணம் செலுத்தி இந்த காரை தற்போது புக்கிங் செய்ய முடியும். இந்நிலையில் சமீபத்தில் அந்நிறுவனம் தனது சி3 காரை அப்டேட் செய்து இசி3எக்ஸ் என்ற பெயரில் புதிய காரை வெளியிட்டது. அதன்படியே இந்த காரையும் வெளியிட்டுள்ளது. பசால்ட் எக்ஸ் காரின் டீசரில் உள்ள புகைப்படத்தை பார்க்கும் போது இந்த காரின் உட்புறம் டுயல் டோன் உட்புற கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சிட்ரோல் பசால்ட் கார் குளோபல் என்கேப் சோதனையில் 4 ஸ்டார்களை பெற்றுள்ளது.இந்த பசால்ட் எக்ஸ் காரும் அதே மாதிரியான புள்ளிகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க சிட்ரோன் 2.0 என்ற புதிய யுக்தியை தற்போது கையில் எடுத்தது. அதன் ஒரு பகுதியாக தான் தனது கார்களை அந்நிறுவனம் அப்டேட் செய்து வருகிறது.

Citroen Basalt X

இந்த சிட்ரோன் பசால்ட் எக்ஸ் காரை பொருத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு மற்றும் டர்போ பெட்ரோல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின்கள் உள்ளன. இது இந்த காரை 108 பிஎச்பி பவரையம் 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த வைக்கும் திறன் கொண்டதாக உருவாக்கியுள்ளது. மேலும் இந்த காரின் உட்புறம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பல அட்வாஸ்டு தொழிற்நுட்பத்தில் இயங்கும் வகையில் பல அம்சங்களை இந்த காரில் சேர்ந்துள்ளது.

இதனால் இந்த கார் தற்போது உள்ள பசால்ட் காரை விட அதிக வசதிமற்றும் சொகுசு நிறைந்ததாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்த காரின் இன்னும் பிரிமியம் ஃபீலில் மாற்றியுள்ளது. இந்த காரில் உள்ள அம்சங்கள் வேரியன்ட் விபரங்களை எல்லாம் அந்நிறவனம் இன்னும வெளியிடவில்லை. இந்த காரின் அறிமுகத்தின் போது இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Citroen Basalt X

இன்று கூபே ரக கார்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த கார்கள் மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் நிலையில் மக்கள் பலர் விருப்பத்திற்கு ஏற்ப சிட்ரோன் இந்த காரை மாற்றியமைத்து அப்டேட் செய்துள்ளது. இதனால் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல கூபே ஸ்டைல் காரை தயாரித்து வருகிறது. அதில் சிட்ரோன் நிறுவனமும் இணைந்துள்ளது. இந்த காரின் வருகைக்கு பிறகாவது சிட்ரோன் கார்களின் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் குறைவாக விற்பனை பெறுவதற்கு காரணம் சரியான ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் இல்லாதது தான் என சொல்லப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 23, 2025, 11:25 [IST]
English summary
Citroen basalt x pre booking starts reserve now rs 11000
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X