ஷோரூமுக்கு வரும் எல்லாரும் இந்த காரை ஒரு நிமிஷம் நின்னு பார்த்துட்டு போறாங்க! ரூ.6.23 லட்சம் தான் விலையாம்!!
சிட்ரோன் (Citroen) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று, சி3 (C3) ஆகும். விலை குறைவான சிட்ரோன் காராக சி3 விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த காரில் புதியதாக 'ஸ்போர்ட்' (Sport) எடிசன் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. வழக்கமான சி3 கார்களை காட்டிலும் சற்று விலைமிக்கதாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கும் புதிய சி3 ஸ்போர்ட் கார் அந்த அளவிற்கு அழகானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சி3 ஸ்போர்ட் எடிசன் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிட்ரோன் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் சி3 ஸ்போர்ட் காரை நெருக்கமாக காட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.
பொதுவாகவே, பிரெஞ்சு ஸ்டைலிலான சிட்ரோன் கார்கள் என்றாலே அழகானவை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் சிட்ரோன் சி3 காரும் பார்க்க மிகவும் ஸ்டைலானவை ஆகும். ஆனால், புதிய சி3 ஸ்போர்ட் கார் அதனை காட்டிலும் ஸ்டைலிஷானதாக தோற்றத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதனை, தற்போது சிட்ரோன் ஷோரூமில் காட்சி தந்துள்ள சி3 ஸ்போர்ட் காரின் வீடியோவின் மூலம் அறியலாம். பளிச்சிடும் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஷோரூமின் உள்ளே தனியாக தெரியும் அளவிற்கு சிவப்பு நிறத்தில் சி3 ஸ்போர்ட் கார் நிற்கிறது. சி3 ஸ்போர்ட் காரின் தோற்றத்தில் முக்கிய சிறப்பம்சமே, ஸ்போர்ட் கார் போன்றதான அதன் கிராஃபிக்ஸ் (Graphics) ஆகும்.
காரின் முன்பக்க பொனெட், பம்பர், கதவுகள் மற்றும் பின்பக்க கதவு மட்டுமின்றி, காரின் மேற்கூரையிலும் கிரே மற்றும் வெள்ளை நிறங்களில் கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய தோற்றத்தினால் இளம் தலைமுறையினர் சி3 ஸ்போர்ட்ஸ் காரை அதிகம் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சி3 ஸ்போர்ட் காருக்கு வழங்கியுள்ள பெயிண்ட்டை 'கார்னெட் சிவப்பு' (Garnet Red) என சிட்ரோன் நிறுவனம் அழைக்கிறது.

கிராஃபிக்ஸ் இல்லாமல், வெறுமனே கார்னெட் சிவப்பு சிறத்திலும் சிட்ரோன் சி3 காரை வாங்க முடியும். புதிய சி3 ஸ்போர்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.23 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது சி3 காரின் மற்ற வேரியண்ட்களை காட்டிலும் ஏறக்குறைய ரூ.21,000 அதிகமாகும். சி3 ஸ்போர்ட் காருடன் கூடுதலாக டேஸ்போர்டு கேமரா மற்றும் வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் பேட் உள்ளிட்டவற்றை பெற கூடுதலாக ரூ.15,000 செலுத்தினால் போதும்.
சி3 ஸ்போர்ட் காருக்கு உள்ளே இருக்கைகள் யாவும் ஸ்பெஷலான 'Sport' தீமை கொண்டுள்ளன. இருக்கைகளின் சீட்பெல்ட்களில் கூடுதலாக குஷின் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், காருக்கு உள்ளே தரையில் பிரத்யேகமான தரைப்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், டிரைவரின் பயன்பாட்டிற்கான ஆக்ஸலரேட்டர், பிரேக் & க்ளட்ச் பெடல்கள் அனைத்தும் அலுமினியத்தால் செய்யப்பட்டவை ஆக உள்ளன.

காரை ஸ்டார்ட் செய்ததும் கேபினுக்குள் ஒளிரும் விளக்குகள் நம்மை வசீகரிக்கின்றன. சி3 ஸ்போர்ட் காரை 1.2 லிட்டர் ப்யூர்டெக் 110 டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் சிட்ரோன் நிறுவனம் வழங்குகிறது. இதில், 110 என்பது என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய 110 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை குறிக்கிறது.
டார்க் திறனை பொறுத்தவரையில், 205 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சி3 காரின் விற்பனையை அதிகரிக்க ஸ்போர்ட் எடிசன் மூலமாக மீண்டும் ஒருமுறை சிட்ரோன் நிறுவனம் முயற்சி செய்து பார்க்கிறது. கடந்த மே மாதத்தில் வெறும் 110 சி3 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. தற்போது சி3 ஸ்போர்ட் எடிசன் கார்கள் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளதால், இவற்றின் டெலிவிரிகள் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
Source: Rushlane (https://www.rushlane.com/)


Click it and Unblock the Notifications









