வெறும் ரூ5.25 லட்சம் தான்! மைலேஜ் இவ்வளவு ஜாஸ்தியா கிடைக்குமா? சிட்ரோனின் புதிய கார் வந்தது!
சிட்ரோன் நிறுவனம் தனது சி3 ஹேட்ச்பேக் காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனவை இன்று வெளியிட்டுள்ளது. இந்த காருக்கு அந்நிறுவனம் சி்டரோன் சி3எக்ஸ் என பெயர் வைத்துள்ளது. இந்த அப்டேட்டில் என்னென்ன விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் சிட்ரோன். இந்நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்ய கடந்த 2021ம் ஆண்டு களம் இறங்கியது. இந்த நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்நிறுவனம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் சி3 என்ற காரை விற்பனை செய்து வரும் நிலையில் அதன் அப்டேட்டட் வெர்ஷனை தற்போது உருவாக்கியுள்ளது.

இந்நிறுவனம் சமீபத்தில் தனது யுக்தியை மாற்றியமைத்தது. அதன்படி தற்போது இந்த சி3எக்ஸ் கார் அதே பாடி ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், 360 டிகிரி கேமரா செட்ப், எல்இடி லைட்டுகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்பக்க யூஎஸ்பி போர்ட், உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
இதில் 360 டிகிரி கேமரா சிடஸ்டம் மட்டும் கூடுதல் ஆப்ஷனாக வருகிறது. இதை வாங்க கூடுதலாக ரூ25,000 செலுத்த வேண்டும். இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக இஎஸ்பி, ஏபிஎஸ், இபிடி, ஐஎஸ்ஓ பிக்ஸ்மவுண்ட்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் இன்ஜின் மொபிலைஸர், ஸ்பீடு சென்சிங் டோ்ர லாக்குகள், பெரிமெட்ரிக் அலாரம் உள்ளிட்ட அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சி3எக்ஸ் காரில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அதே 1.2 லிட்டர் ப்யூர்டெக் 82 என்ஏ பெட்ரோல் இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 80.4 பிஎச்பி பவரையும் 115என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. மற்றொரு இன்ஜின் ஆப்ஷனாக 1.2 லிட்டர் ப்யூர்டெக் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொரத்தப்படுகிறது. இது 108.54 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின்கள் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக், அல்லது 5/6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனவைக்கு வருகிறது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 10 நொடிகளுக்குள்ளாகவே பிக்கப் செய்கிறது. இந்த கார் 19.3 கி.மீ மைலேஜை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த கார் 5 சிங்கிள் டோன் மற்றும் 2 டுயல் டோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் போலார் ஒயிட், ஸ்டீல் கிரே, காஸ்மோ ப்ளூ, பியர்லா நெரா பிளாக், கார்னெட் ரெட் ஆகிய சிங்கிள் டோன் நிறங்களில் கிடைக்கிறது. டுயல் டோன் கலர் ஆப்ஷன்களாக காஸ்மோ ப்ளூ உடன் போலார் ஒயிட் ரூஃப், கார்னெட் ரெட் உடன் பெர்லா நேரா பிளாக் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. உட்புறத்தில் சி3 லைவ் வேரியன்டடிற்கு இன்ஜெக்டட்ட கிரே நிறமு், சி3 ஃபீல் வேரியன்டிற்கு அனோடைஸ்டு கிரே நிறமும், சி3 ஃபீல் வேரியன்டிற்கு மெட்ரோபொலிடன் லெதரேட் விராப் செய்யப்பட்ட லுக்கில் விற்பனைக்கு வருகிறது.
இந்த காரின் விலைகளை பொருத்தவரை சி3எக்ஸ் ஷைன் டர்போ ஆட்டோமெட்டிக் ரூ9.89 லட்சம் என்ற விலையிலும், சி3எக்ஸ் ஷைன் டர்போ ரூ9.11 லட்சம் என்ற விலையிலும், சி3எக்ஸ் ஷைன் நேச்சுரலி அஸ்பயர்டு ரூ7.91 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கிறது. சி3எக்ஸ் நேச்சுரலி அஸ்பயர்டு டுயல் டோன் ரூ8.05 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது.
சி3 ஃபீல் நேச்சுரலி அஸ்பயர்டு ஓ வேரியன்ட் ரூ7.27 லட்சம் என்ற விலையிலும், சி3ஃபீல் நேச்சுரலி அஸ்பயர்டு ரூ6.23 லட்சம் என்ற விலையிலும், சி3 லைவ் நேச்சுரலி அஸ்பயர்டு ரூ5.25 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கிறது. இந்த காருக்கு சிஎன்ஜி ஆப்ஷன் ரெட்ரோ ஃபிட் ஆப்ஷனில் கிடைக்கிறது. அதன் விலை ரூ93 ஆயிரம் ஆகும்.
இந்த சி3எக்ஸ் காரை இந்தியா முழுவதும் உள்ள சிட்ரோன் டீலர் ஷிப்களில் புக் செய்யலாம். இந்த மாத மத்தியில் டீலர்களில் பார்வைக்காக இந்த கார் வைக்கப்படும். செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த காரின் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைந்த விலையில் அதிக ஆப்ஷன்களுடன் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என நம்பலாம். இந்தகாரின் விற்பனை சிறப்பாக இருந்தால் சிட்ரோனின் மாற்றுவழி யூக திட்டம் நிச்சயம் பலனை தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications









