30 நாளில் ஒருத்தர் கூட வாங்கல! 17 கி.மீ மைலேஜ் குடுத்தும் ஏன் விக்கல தெரியுமா?

சிட்ரோன் நிறுவனம் தனது நவம்பர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ஒரு சி5 ஏர்கிராஸ் காரை கூட விற்பனை செய்யாமல் 0 என பதிவு செய்துள்ளது. இந்த கார் விற்பனையில் திண்டாடி வருகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் தரமான வாகனங்களை விற்பனை செய்தாலும் விற்பனையில் தள்ளாட்டத்தை தான் சந்தித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் இந்நிறுவனத்திற்கு நல்ல விற்பனை கிடைத்துள்ளது.கடந்த நவம்பர் மாதம் 2வது அதிக விற்பனையை இந்நிறுவனம் பெற்றுள்ளது. மொத்தம் 1224 கார்களை விற்பனை செய்துள்ளது.

Citroen C5 Aircross Sales

ஜிஎஸ்டி வரிகுறைப்பால் இந்நிறுவனத்தின் பிரிமியம் காரின் விலை ரூ2.67 லட்சம் வரை குறைந்தததது. இதற்கு முன்னர் ரூ39.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்த கார் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு ரூ37.32 லட்சம் என்ற விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. சுமார் 6.68 சதவீதம் வரை இதன் விலை குறைந்துள்ளது.

இந்த சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் கார் ஒரே ஒரு வேரியன்டில் மட்டுமே விற்பனையாகி வருகிறது. கலர் ஆப்ஷன் மட்டும் சிங்கிள் மற்றும் டுயல் டோன் ஆகிய இரண்டு விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளன. சிங்கிள் டோன் மற்றும் டுயல் டோன் கலர் ஆப்ஷன்கள் உள்ளது.

Citroen C5 Aircross Sales

இந்த காரில் 1997 சிசி டிடபிள்யூ10 எஃப்சி 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 177 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 52.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி உள்ளது. இந்த கார் லிட்டருக்கு 17.5 கி.மீ மைலேஜை வழங்குகிறது.

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4500 மிமீ நீளம், 1969 மிமீ அகலம், 1710 மிமீ உயரம், 2730 மிமீ வீல் பேஸ் உள்ளது. இந்த காரில் எல்இடி விஷன் புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், 3டி எல்இடி பின்பக்க லைட்டுகள், எல்இடி டர்ன் இன்டிகேட்டர், எல்இடி ஓஆர்விஎம், 31.24 செ.மீ டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 25.4 செ.மீ கேபாசிடிவ் டச் ஸ்கிரீன் சென்டர் கன்சோல், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்டபிள் சீட், எலெக்ட்ரிக் டெயில் கேட், 580 லிட்டர் பூட் வசதி ஆகியன உள்ளன.

Citroen C5 Aircross Sales

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், காஃபி பிரேக் அலர்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ரிவர்ஸ் கேமரா, முன்பக்கமும்,பின்பக்கமும் பார்க்கிங் சென்சார், 3 பாயிண்ட் ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் மவுண்டிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிட்ரோன் தயாரிப்புகளுக்கு நல்ல பெயர் இருந்தாலும் இந்த கார் அதிக விலை கெசாண்ட செக்மெண்டில் விற்பனையாகிறது. இதில் பலர் குறிப்பிட்ட கார்களை அதிகம் விரும்புவதால் இதன் விற்பனை தள்ளாடத்தில் இருக்கிறது. இந்த கார் குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புர்வை ஏற்படுத்த வேண்டும் அல்லது காரில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 13, 2025, 17:15 [IST]
English summary
Citroen c5 aircross sold only 00 unit in november 2025
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X