ரூ2.67 லட்சம் விலை குறையும் காரை 2 மாசமா யாருமே வாங்கல! ஏன் தெரியுமா?

சிட்ரோன் நிறுவனத்தின் சி5 ஏர்கிராஸ் காரை பொருத்தவரை ஜிஎஸ்டிக்கு பிறகு இந்த காருக்கு ரூ2.67 லட்சம் விலை குறையும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் முக்கியமான விஷயும் என்னவென்றால் இந்த காரை கடந்த 6 மாதமாக ஒருவர் கூட வாங்கவில்லை என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களுக்கு ஜிஎஸ்டி விலை குறைப்பிற்கு பிறகான விலை விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் காரின் விலை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த கார் ரூ2.67 லட்சம் குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது. இதற்கு முன்பு இந்த கார் ரூ39.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இனி இந்த கார் ரூ37.32 லட்சம் என்ற விலையில் விற்பனையாகும்.

Citroen C5 Aircross

தற்போது விற்பனையாகும் விலையை விட ரூ6.68 சதவீதம் குறைவான விலையில் இது விற்பனைக்கு வருகிறது. இந்த காரை அந்நிறுவனம் ஒரே ஒரு வேரியன்டில் மட்டுமே விற்பனை செய்கிறது. கலர் மட்டும் சிங்கிள் மற்றும் டுயல் டோன் கலர் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த 2 மாதமாக இந்த காரை ஒருவர் கூட வாங்கவில்லை. இந்நிலையில் விலை குறைவதால் இந்த காரின் விற்பனை இந்தமாதம் நடக்க வாய்ப்புள்ளது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர், 4 சிலிண்டர் DW10FC டீசல் இன்ஜின் பொருத்தப்ப்டடுள்ளது. இது 177 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் லிட்டருக்க 17.5 கி.மீ மைலேஜை வழங்கும் என சான்றழிக்கப்பட்டுள்ளது.

Citroen C5 Aircross

இந்த கார் முன்பக்க வீல் டிரைவில் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. இதில் உட்புறத்தில் 3 தனித்துவமான அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ரிக்லைனிங் சீட்கள் உள்ளன. இந்த காரின் கேபின் வெளியில் உள்ள சத்தம் உள்ளே கேட்காத வகையில் இருக்கும். இதுமட்டுமல்ல இந்த காரில் டுயல் ஸோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆப்ஷன் இருகு்கிறுது.

மேலும் இந்த காரில் 10 இன்ச் சென்டரல் டச் ஸ்கிரீன் வயர்லெஸ் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய ஆப்ஷ்ன்கள் உள்ளன. மேலும் 12.3 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இது போக இந்த காரில் எலெக்ட்ரிக் டெயில் கேட் அம்சமும் உள்ளது. பானரோமிக் சன்ரூஃப் வசதியும் இதில் உள்ளது.

Citroen C5 Aircross

பாதுகாப்பு அம்சங்களுக்காக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் டிசெண்ட் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், ரிவர்ஸ் மற்றும் முன்பக்க கேமரா பார்க்கிங் சென்சார் பின்பக்க கேமரா யூரோ என்கேப் சோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் கார் பல சிறப்பான அம்சங்களை பெற்றள்ளது. நல்ல விமர்சனத்தை பெற்றாலும் போதி விற்பனையை பெறவில்லை. இதற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனத்திற்கு போதுமான சர்வீஸ் சென்டர் இல்லை என மக்கள் கருதுகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 11, 2025, 17:15 [IST]
English summary
Citroen c5 aircross variant prices after gst update
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X