4 மாதமாக யாருமே வாங்காத காரை திடீரென வாங்கிய 2 பேர்! என்ன கார் தெரியுமா?

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 1426 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் இந்நிறுவனத்தின் என்ட்ரி லெவல் காரான சி3 கார் தான் சிறப்பாக விற்பனையாதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரம் குறைவான எண்ணிக்கையில் சி5 ஏர்கிராஸ் காரும் விற்பனையாகியுள்ளது.

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்ய திண்டாடி வருகிறது. போட்டி தயாரிப்புகளுக்கு இணையாக கார்களை தயாரித்தும் இந்நிறுவனத்தால் பெரிய விற்பனையை பெற முடியவில்லை. இதற்கு முக்கியமான காரணம் போதுமான ஷோரூம்கள் இல்லை என்பது தான். இந்நிலையில் இந்நிறுவனம் கடந்த அக்டோர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது.

Citroen C5 Sales October 2025

அதன்படி கடந்த அக்டோர் மாதம் 1426 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் இந்நிறுவனத்தின் சி3 கார் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. அதன்படி மொத்தம் 897 சி3 கார்கள் விற்பவனையாகியுள்ளது. மிகவும் குறைவான எண்ணிக்கையில் விற்பனையானது சி5 ஏர்கிராஸ் கார் தான். இந்த காரை வெறும் 2 நபர்கள் மட்டுமே 9வாங்கியுள்ளனர். இது அந்நிறவனத்திற்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

வெறும் 2 நபர்கள் வாங்கியதற்கு மகிழ்ச்சியா என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் கடந்த 4 மாதங்களாக இந்த காரை யாருமே வாங்கவில்லை ஒரு கார் கூட விற்பனையாகவில்லை 4 மாதங்களுக்கு பிறகு 2 கார்கள் விற்பவனையாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பில் இந்த காரின் விலை ரூ2.67 லட்சம் ஆகும். இந்த கார் எக்ஸ் ஷோரூம் விலையில் ரூ39.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது. தற்போது இது ரூ37.32 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

Citroen C5 Sales October 2025

இந்த சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் காரில் 1997 சிசி டிடபிள்யூ10எஃப்சி 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 177 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 52.5 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது. இந்த கார் லிட்டருக்கு 17.5 கி.மீ மைலேஜை வழங்கிறது.

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4500 மிமீ நீளம், 1969 மிமீ அகலம், 1710 மிமி உயரம் 2730 மிமீ வீல் பேஸ் உள்ளது. மேலும் இந்த காரில் எல்இடி விஷன் புரோஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடிடிஆர்எல், எல்இடி பின்பக்க லைட்டுகள், எல்இடி இன்டிகேட்டர்கள், உள்ளன. காரின் உள்ளே 31.24 செ.மீ அளவுள்ள டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் 25.4 செ.மீ கொண்ட கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் ஆகிய அம்சங்கள் உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ, அல்லது ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்கள் இதில் உள்ளது.

Citroen C5 Sales October 2025

இது போக இந்த காரில் கையை பயன்படுத்தாமலேயே திறக்ககூடிய டெயில் கேட், 580 லிட்டர் பூட் வசதி, பின்பக்க சீட்டை மடிக்கும் வசதி, பின்பக்க சீட்டை மடித்தால் 720 லிட்டர் அளவிற்கு பூட் கொள்ளவு அதிகமாகிறது. இந்த காரின் உட்புறம் முழுவதும் மெட்ரோபாலிடன் பிளாக் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் பானரோமிக் சன்ரூப் வசதி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் விற்பனையாகும் விலை பிரிவில் மற்ற நிறுவனங்களின் கார்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அதே நேரம் வாடிக்கையாளர்கள் குறைவாக உள்ளார்கள். இதனால் அதையும் மீறி இந்த கார் விற்பனையாவது சற்று சிரமம் தான். இந்த காரின் லுக்கை வாடிக்கையாளர்களின் விருப்பதற்திற்கு ஏற்ப மாற்றினால் ஒரளவிற்கு விற்பனையாக வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 14, 2025, 10:55 [IST]
English summary
Citroen c5 sales october 2025 only 2 units sold
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X