காரா இல்ல கப்பலா? இரண்டு குடும்பம் கூட தாராளமா இந்த கார்ல போகலாம்!

சிட்ரோன் நிறுவனம் தனது இ-ஸ்பேஸ்டூரர் வாகனத்தை இந்தியாவில் பிரிமியம் ரக எம்பிவி காராக விற்னைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்படவுள்ளது. இந்த கார் எஃப்டிஏ அடிப்படையில் குறைந்த இறக்குமதி வரியில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களின் எண்ணிக்கை அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் சிட்ரோன் நிறுவனம் இந்த மார்கெட்டை பிடிக்க தற்போது திட்டமிட்டு வருகிறது. அதன்படி இந்நிறுவனம் சர்வதேச மார்கெட்டில் விற்பனையாகி வரும் ஸ்பேஸ்டூரர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

Citroen e-Spacetourer

ஸ்பேஸ்டூரர் காரை பொருத்தவரை டீசல் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் உள்ளன. இதில் எலெக்ட்ரிக் வெர்ஷனை மட்டுமே அந்நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த காரை வைத்து இந்திய மார்கெட்டை சோதனை செய்ய திட்டமிட்டள்ளது. இந்த கார் 5 மீட்டருக்கும் அதிகமான வீல் பேஸை கொண்டதாக இருக்கிறது. இந்த கார் நீண்ட வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது.

இந்த கார் வடிவமைப்பில் எம்ஜி நிறுவனம் விரைவில் கொண்டு வரவுள்ள எம்9 காரை போல இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 75kWh பேட்டரிபேக் வழங்கப்பட்டுள்ளது. சிங்கிள் மோட்டார் செட்டப் உடன் 136 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 348 கி.மீ ரேஞ்சை வழங்கும் திறன் கொண்தாக இருக்கிறது.

Citroen e-Spacetourer

இதே போல குறைந்த வீல் பேஸ் கொண்ட வெர்ஷன் கார் இருக்கிறது. இதில் 49kWh பேட்டரி பேக் உள்ளது. இது முறை சார்ஜ் போட்டால் 320 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவிற்கு பெரிய வீல் பேஸ் மற்றும் பெரிய பேட்டரி பேக் கொண்ட கார் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் தனித்துவமான விஷயமே அதன் பாடி ஸ்டைல் தான்.

இந்த காரில் முன்வரிசையில் அதிக இடவசதி கொண்ட கேபின் உள்ளது. மத்திய வரிசையிலும், கடைசி வரிசையிலும் கேப்டன் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளுது. இதனால் பயணிகளுக்கு வசதியான பயணம் கிடைக்கும். மத்திய வசையில் மடித்து வைக்க கூடிய டிரே ஆப்ஷன் வேறு இருக்கிறது. இதனால் பயணிகளுக்க கூடுதலாக பல வசதிகள் உள்ளன.

Citroen e-Spacetourer

சொகுசு எம்பிவி கார்கள் சமீப காலமாக சிறப்பாகவிற்பனையாகி வருகிறது. குறிப்பாக டொயோட்டா நிறுவனத்தின் வில் ஃபயர், லெக்ஸஸ் எல்எம், ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது. இந்த கார்கள் எல்லாம் ரூ1கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனையாகி வருகிறது. கியா கார்னிவெல் கார் கூட இந்த செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் நிறுவனம் சொகுசு எஸ்யூவி கார் மார்கெட்டில் தனது தடத்தை பதிக்க திட்டமிட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது. இந்த செக்மெண்ட் எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த கார் நிச்சயம் மக்களின் கவனத்தை ஈர்த்து விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Saturday, July 5, 2025, 22:16 [IST]
English summary
Citroen e spacetourer india launch under evaluation
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X