விலையும் கம்மி தான்! காரும் நல்லா இருக்குது! ஆனா 60 பேர் தான் இந்த காரை வாங்கிருக்காங்க ஏன் தெரியுமா?
ஹேட்ச்பேக் கார்கள் தொடர்ந்து இந்திய வாடிக்கையாளர்களை படிப்படியாக ஈர்த்து வருகின்றன. 2025 ஜனவரியில், மாருதி சுஸூகி வேகன்ஆர் 24,000 க்கும் மேற்பட்ட கார்கள் விற்பனையுடன் இந்த பிரிவில் முன்னிலை வகித்துள்ளது. மாறாக, சிட்ரோயன் eC3 EV அதே காலகட்டத்தில் வெறும் 60 கார்கள் மட்டுமே விற்பனையாகி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த காரில் என்ன பிரச்சனை மக்கள் ஏன் இந்த காரை அதிகம் விரும்பவில்லை? இதற்கு முன்னர் இந்த காரின் விற்பனை எப்படி இருந்தது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சிட்ரோன் eC3 எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் விற்பனையில் கணிசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது, கடந்த ஆண்டை விட 67.39% விற்பனை குறைந்துள்ளது. 2024 ஜனவரி மாதம் இதே கார் 184 கார்கள் விற்பனையாகியுள்ளது. அதன் அம்சங்கள், டிரைவிங் ரேஞ்ச் மற்றும் விலை விவரங்களை இங்கே வரிவாக பார்ப்போம்

சிட்ரோயன் eC3 காரில் 10.2-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேனுவல் ஏரி மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஸ்கிரீன் உடன் வருகிறது. கூடுதலாக, இது அதன் கேபினில் கனெக்டெட் கார் தொழிற்நுட்பத்துடன் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கான ஒட்டுமொத்த டிரைவிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
இந்த எலெக்ட்ரிக் வாகனம் இந்திய வாடிக்கையாளர்களுக்காக மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது 29.2kWh பேட்டரி பேக்கை வைத்துள்ளது. இது 57bhp பவர்ரையும் அதே நேரம் 143Nm டார்க் திறனையும் வழங்குகிறது. முழு சார்ஜில் ARAI-சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் 320 கி.மீ. ஆகும். இதனால் நீண்ட தூரம் பயணிக்க ஏற்றதாக இருக்கும்.

பேட்டரியை முழுமையாக ஒரு முறை சார்ஜ் செய்ய சுமார் 10 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும், இது நிலையான 15A பிளக் பாயிண்டைப் பயன்படுத்தி சார்ஜ் ஏற்றினால் ஆகும் நேரம் ஆகும். இது இரவு நேர சார்ஜிங் ஆப்ஷன்களுடன் நாள் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றது. இரவு முழுவதும் சார்ஜ் செய்தால் பகல் நேரத்தில் பயன்படுத்த வசதியாக இருக்கும்.
சிட்ரோயன் eC3க்கான தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 12.76 லட்சத்தில் இருந்து தொடங்கி, டாப் மாடல் வேரியண்டிற்கு ரூ. 13.41 லட்சம் வரை நீண்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் மார்கெட்டில் போட்டித்தன்மையை ஏற்படுத்துகிறது. இந்த விலையில் இந்த கா்ர விற்பனையானாலும் பெரிய அளவில் விற்பனை எண்ணிக்கை உயரவில்லை.

அதன் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் போட்டி விலை இருந்தபோதிலும், சிட்ரோன் eC3 சமீபத்திய மாதங்களில் மார்கெட் பங்கை கணிசமாகப் பிடிக்க போராடி வருகிறது. இருப்பினும், அதன் ரேஞ்ச் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பான எலெக்ட்ரிக் வாகனத்தைத் தேடுபவர்களுக்கு ஒரு ஈர்க்கக்கூடிய விருப்பமாக அமைகிறது. இவ்வளவு இருந்தும் இந்த காரின் விற்பனை அதிகரிக்காமல் இருப்பது ஆச்சரியம் தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் சிறப்பாக இருந்தாலும் இந்த கார் மட்டுமல்லாமல் மற்ற கார்களின் விற்பனை எண்ணிக்கையும் பெரிய அளவில் அதிகமாகவில்லை. இதற்கு முக்கியமான காரணம் போதுமான சர்வீஸ் சென்டர்கள் இல்லாதது தான். ஷோரூம் பல இடங்களில் இல்லாததால் பலர் இந்நிறுவன கார்களை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









