ஸ்டாக்குல ஏகப்பட்ட கார் கிடக்குது! 70 கார் தான் வித்திருக்குது! கம்மி விற்பனைக்கு காரணம் இது தான்!

ஃபிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில் இந்நிறுவனம் பெரிய அளவில் விற்பனையை பெறவில்லை. கடந்த ஜூலை மாதம் அந்நிறுவனம் வெளியிட்ட விற்பனை விபரங்களில் அதிர்ச்சியூட்டிம் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.குறிப்பிட்ட கார் மாடல் மிக குறைவான விற்பனையை பதிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் சிட்ரோன். இந்நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தனது விற்பனையை இந்தியாவில் துவங்கியது. இந்நிறுவனம் தமிழகத்தில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் என்னதான் சிறந்த கார்களை விற்பனை செய்தாலும் விற்பனையில் பெரிய வெற்றி பெற முடியவில்லை. மிக குறைவான விற்பனையையே பெற்று வருகிறது.

Citroen eC3

இந்நிலையில் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அந்நிறுவனம் விற்பனை செய்யும் சி3 என்ற ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் காராக விற்பனையாகி வருகிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் வெறும் 70 பேரால் மட்டுமே வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிக குறைவான விற்பனையாகும்.

இந்த சிட்ரோன் இசி3 காரை பொருத்தவரை ஸ்டைல் மற்றும் விலையில் அந்த கார் விற்பனையாகும் செக்மெண்டிலேயே சிறந்த காராக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த காரை ஒரு முறை சார்ஜ் போட்டால் நீண்ட தூரம் டிரைவ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்டான அம்சங்கள் மற்றும் சொகுசான ரைடிங் அனுபவம் இதில் கிடைக்கிறது.

Citroen eC3

இந்த கார் பெரிய அளவில் கடந்த ஜூலை மாதம் விற்பனையாகவில்லை என்ற நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கு இந்த காருக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த காரை அந்நிறுவனம் ரூ40,000 தள்ளுபடியில் வழங்க திட்டமிட்டுள்ளது. இது எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றம் லாயலிட்டி தள்ளுபடி ஆகியவற்றை சேர்த்து வழங்கப்பட்ட தள்ளுபடியாகும். இது 2023ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பி2சி வேரியன்டிற்கு மட்டுமே பொருந்தும்.

சிட்ரோன் இசி3 காரை பொருத்தவரை ரூ12.84 லட்சம் முதல் ரூ13.54 லட்சம் என்ற விலையில் இந்திய மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 5 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகிறது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் போட்டால் ரியல் வேர்ல்டில் 218.8 கி.மீ ரேஞ்ச் தரும் என கார்வாலே நிறுவனம் தெரிவித்துள்ளது.

Citroen eC3

இந்த காரின் விற்பனை குறைவிற்கு மிக முக்கியமான காரணம் இந்த கார் குளோபல் என்கேப் சோதனையில் 0 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த காரில் முன்பக்க பயணிகள் மற்றும் டிசைவர் சீட்டிற்கான ஏர்பேக், பெல்ட் லோடு லிமிட்டர், பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 34 புள்ளிகளுக்கு 20.86 புள்ளிகளை பெற்றுள்ளது. அதே போல குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் 49க்கு 10.55 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

இந்திய மக்கள் மத்தியில் குறைவான விலையுள்ள கார்கள் மீது மக்கள் அதிக மோகமாக இருந்தாலும் சமீப காலமாக மக்கள் மத்தியில் பாதுகாப்பு விஷயத்திலும் மக்கள் கவனமாக இருக்கின்றனர். அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட கார்களை தேர்வு செய்ய துவங்கவிட்டனர். இந்நிலையில் இந்த கார் குளோபல் என்கேப் சோதனையில் 0 ஸ்டார்களை வாங்கியது. இந்த காருக்கு விற்பனையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டு மீண்டும் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் இதை விட அதிகமாக விற்பவனையாக வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் மீதான மோகம் அதிகமாக இருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் பாதுகாப்பு விஷயமும் முக்கியமான கருதப்படுகிறது. இந்த கார் விற்பனை குறைவாக இருப்பதற்கு இதன் பாதுகாப்பு ரேட்டிங் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 20, 2025, 11:00 [IST]
English summary
Citroen ec3 sold only 70 units in july 2025 india
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X