வெறும் ரூ.6.44 லட்சத்தில் கொடுப்பதற்கு பெரிய மனசு வேண்டும்!! சாலையில் உங்க கார் மட்டும் தனியா தெரியும்!

சிட்ரோன் (Citroen), பிரெஞ்சு நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் நீண்ட வருட ஆலோசனைகளுக்கு பிறகு கடந்த 2022ஆம் ஆண்டில் இந்திய மார்க்கெட்டில் சிட்ரோன் நுழைந்தது. முதல் சிட்ரோன் காராக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சி5 ஏர்கிராஸ் (C5 Aircross) அதிகப்படியான விலையினால், இந்திய மக்களை பெரிதாக கவரவில்லை என்றதும், குறைந்த விலையில் சி3 (C3) என்கிற ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரை சிட்ரோன் நிறுவனம் களமிறக்கியது. இருப்பினும், சிட்ரோன் சி3 கார்களின் விற்பனையும் பெரிய அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இருப்பினும், சி3 காரில் புது, புது வேரியண்ட்களை அவ்வப்போது கொண்டுவரும் சிட்ரோன் நிறுவனம், அந்த வரிசையில் தற்போது சி3 லிமிடெட் ஸ்போர்ட் எடிசன் (Limited Sport Edition) காரை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.44 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

citroen c3 limited sport edition

இது, சி3 காரின் வழக்கமான விலைகளை காட்டிலும் ரூ.21,000 அதிகம் ஆகும். வழக்கமான சிட்ரோன் சி3 கார்களுடன் ஒப்பிடுகையில், புதிய லிமிடெட் எடிசன் ஆனது தோற்றத்தில் நிறைய வித்தியாசங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், காருக்குள் கேபினின் டிசைனிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றாலும், காரின் என்ஜின் சிஸ்டம் உள்பட மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை.

புதிய லிமிடெட் ஸ்போர்ட் எடிசனின் மூலமாக புதிய கார்னெட் ரெட் பெயிண்ட் ஆப்ஷன் சிட்ரோன் சி3 காரில் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிசன் என்பதை குறிக்கும் வகையில், 'SPORT' என்கிற முத்திரைகள் காரை சுற்றிலும் கதவுகள் மற்றும் பாடி பேனல்களில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், புதிய சி3 லிமிடெட் ஸ்போர்ட் எடிசனில் கேபினை சுற்றிலும் விளக்குகள் மற்றும் பிரஷ் செய்யப்பட்ட உலோகங்களினால் ஆன பெடல்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

இவற்றிற்கு ஏற்ப, சீட் கவர்கள், தரைப்பாய்கள் மற்றும் சீட் பெல்ட் குஷின்களின் டிசைன் புதியவைகளாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், புதிய சி3 லிமிடெட் ஸ்போர்ட் எடிசனின் உட்புற கேபின் முழுவதுமாக கருமை மற்றும் வெண்மை என இரண்டும் கலந்த கலவையான நிறத்தில் உள்ளது. மேலும், கூடுதலாக ரூ.15,000 செலுத்தி கூடுதலான ஆக்ஸஸரீகளையும் பெறலாம்.

இந்த கூடுதலான ஆக்ஸஸரீகளில், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் டேஸ்போர்டு கேமரா உள்ளிட்டவை கிடைக்கும். இவற்றை தவிர்த்து, ஏற்கனவே கூறியதுபோல் சி3 லிமிடெட் ஸ்போர்ட் எடிசனின் மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வகையில், 1.2 லிட்டர் 3-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் புதிய லிமிடெட் ஸ்போர்ட் எடிசனிலும் தொடரப்பட்டுள்ளது. இந்த ஒரேயொரு என்ஜின் ஆப்ஷன் தான் சி3 காரில் வழங்கப்படுகிறது.

இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 110 பிஎஸ் மற்றும் 205 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. டர்போ என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளிட்டவற்றின் மூலமாக 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 10 வினாடிகளில் இந்த காரில் எட்டிவிடலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிட்ரோன் சி3 காரின் விலையில் விற்பனை செய்யப்படும் மற்ற ஹேட்ச்பேக் கார்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், சி3 காரில் பக்காவான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமின்றி, சி3 கார் ஆனது ஸ்டைலிஷான கார் ஆகும். அப்படிப்பட்ட காரை இன்னும் ஸ்டைலானதாக வாங்க விரும்புபவர்கள் புதிய லிமிடெட் ஸ்போர்ட் எடிசனை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 16, 2025, 22:59 [IST]
English summary
Citroen india launched new c3 limited sport edition check price features all details here
மேலும்... #citroen #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+