பழைய ஸ்டாக்கை காலி பண்ண ரூ1.75 லட்சம் தள்ளுபடி! மார்ச் 31 வரை மட்டும தள்ளுபடி கிடைக்கும்!
சிட்ரோன் இந்தியா நிறுவனம் தனது ஒரே எலெக்ட்ரிக் வாகனமான eC3 மீது குறிப்பிடத்தக்க தள்ளுபடியை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் 2024 மாடலில் ரூ. 80,000 வரை சேமிக்கலாம். இந்த காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 11.99 லட்சம் ஆகும். இந்த சலுகை மார்ச் 31 வரை அல்லது ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்திய மார்கெட்டில் போட்டியாளர் மாடல்களில் டாடா டியாகோ EV, டாடா பஞ்ச் EV மற்றும் MG காமெட் EV ஆகிய கார்களுக்கு எதிராக இந்த கார் விற்பனையாகி வருகிறது
சிட்ரோன் eC3 காரை பொருத்தவரை ஒரு முழு சார்ஜில் 320 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது. இருப்பினும், ரியல் வேல்டு சோதனைகள் வேறு ரேஞ்சை வெளிப்படுத்துகின்றன. முழு சார்ஜ் செய்த பிறகு, கண்டிப்பாக 228 கிமீ ரேஞ்ச் கிடைக்கிறது. 54.3 கிமீ தூரம் பயணித்த பிறகு, பேட்டரி 25% வரை குறைந்து, 171 கிமீ மீதமுள்ள ரேஞ்ச் என காட்டுகிறது. இதை வைத்து இந்த 228 கி.மீ கணக்கீடை செய்கிறோம்.

இந்த சோதனையில், 114.4 கிமீ தூரம் பயணித்ததில், பேட்டரி பாதியளவுக்கு குறைந்துவிட்டது, 118 கிமீ மீதமுள்ள ரேஞ்ச் எனக் காட்டியது. 173 கிமீ தூரம் பயணித்ததும், பேட்டரி 25%க்கு குறைந்து, இன்னும் 51 கிமீ பயணிக்க முடியும் காட்டியது. கார் முழுமையாக சார்ஜ் தீரும் போது இறுதியாக 218.8 கிமீ மொத்த தூரம் பயணிக்க முடிந்தது.
இந்த, eC3 கா் முக்கியமாக நகர்ப்புற சூழலில் (75%) மற்றும் நெடுஞ்சாலைகளில் (25%) இயக்கப்பட்டது. ஏசி மேனுவல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி 21 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை இந்த பயணத்தின் போது வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, பேட்டரி அளவு 5% ஆக குறைந்தபோது, ஏசி ஆஃப் செய்யப்பட்டது; 2% பேட்டரி பேட்டரி இருக்கும் போ, வேகம் 10 கிமீ/மணிக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.

eC3 இன் வடிவமைப்பு அதன் பெட்ரோல் இன்ஜின் கார் போலவே உள்ளது C3, சிறிய வேறுபாடுகளுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது, ஒரு வெற்று கிரில் மற்றும் முன் பக்க சார்ஜிங் பிளாக் போன்றவை வடிவமைப்பின் சிறப்பம்சம் ஆகும். இந்த காரின் உள்ளே, இது ஒரு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் துணி சீட்களுடன் கூடிய பல்வேறு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரில் ஒரு இரட்டை-டோன் டேஷ் போர்டு இருக்கிறது.
இந்த காரின் ஒரு தனித்துவமான அம்சம் என்பது வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 10.2-இன்ச் டிஸ்ப்ளே ஆகும். பாதுகாப்பு ரீதியாக, இது டுயல் முன்பக்க ஏர்பேக்குகள் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகிய அம்சங்கள் உள்ளடக்கியது, ஆனால் குளோபல் என்கேப் சோதனையில் குறைந்த பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. பெரியவர்களுக்கு 0 ஸ்டார் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு ஸ்டார் ரேட்டிங் கிடைத்துள்ளது.

இந்த காருக்கான ஆஃபர் சிட்ரோன் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல் ஆகும். இது கிடைக்கம் ஸ்டாக் மற்றும் டீலர் ஷிப்களை பொருத்து மாறுபடலாம். அதனால் நீங்கள் இந்த ஆஃபரில் கார் வாங்க நினைத்தால் உடனடியாக அருகில் உள்ள டீலர் ஷிப்பை தொடர்பு கொண்டு இந்த ஆஃபர் இருப்பதை உறுதி செய்து பின்னர் கார் வாங்கும் முடிவை எடுப்பது தான் சிறந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடிகளை உள்ளூர் ரீதியாக சரிபார்க்க வேண்டும், ஏனெனில் அவை நகரம் அல்லது டீலர் மூலம் மாறுபடலாம். இந்த ஆஃபர் விரைவிலேயே முடிவடைய கூட வாய்ப்புள்ளது. அதனால்இந்த ஆஃபரை பெற உடனடியாக அருகில் உள்ள டீலர் ஷிப்பை தொடர்பு கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications









