கருப்பு கலருக்கு நான் அடிமைனு சொல்பவரா நீங்க? உங்களுக்குனே இன்று ஒரே நாள்ல 3 கார் அறிமுகம்! தோனி வாங்கிட்டாரு!
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனம் சிட்ரோன் (Citroen). இந்த நிறுவனமே முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட கார் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. சுவாரஷ்யமாக, இன்று (ஏப்ரல் 10) ஒரே நாளில் அது மூன்று கார் மாடல்களை கருப்பு நிறத்தால் அலங்கரித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் சி3 (C3), சி3 ஏர்கிராஸ் (C3 Aircross) மற்றும் பசால்ட் (Basalt) ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இவற்றிலேயே டார்க் எடிசன் எனும் பிரத்யேக பதிப்பை சிட்ரோன் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும், இந்த கார் மாடல்களின் உயர் நிலை தேர்வுகளிலேயே டார்க் எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும். அவை, டார்க் எடிசன் சி3 (Dark Edition C3), டார்க் எடிசன் சி3 ஏர்கிராஸ் (Dark Edition C3 Aircross) மற்றும் டார்க் எடிசன் பசால்ட் (Dark Edition Basalt) என்கிற பெயர்களிலேயே விற்பனைக்குக் கிடைக்கும்.

இதில் சி3 கார் மாடலின் டார்க் எடிசன் ரூ. 8,38,300 என்கிற விலையிலும், சி3 ஏர்கிராஸ் கார் மாடலின் டார்க் எடிசன் ரூ. 13,13,300 என்கிற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதேபோல் பசால்ட் டார்க் எடிசனுக்கு ரூ. 12,80,000 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
மேலே பார்த்த அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்த மூன்று டார்க் எடிசன் கார் மாடல்களையும் சிட்ரோன் நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடரான பிரபல கிரிக்கெட் விளையாட்டு தோனி-யே அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து பசால்ட் கார் மாடலின் டார்க் எடிசனை அவருக்கு சிட்ரோன் நிறுவனம் டெலிவரி வழங்கியது.

ஆகையால், இந்தியாவில் பசால்ட் டார்க் எடிசனை வாங்கிய முதல் ஆளாக தல தோனி மாறியுள்ளார். எனவே வரும் நாட்களில் இவர் இந்த காரில் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான கூபே எஸ்யூவி (Coupe SUV) கார் மாடலாக சிட்ரோன் பசால்டு காட்சியளிக்கின்றது.
இந்த கார் மாடல் இந்தியாவில் ரூ. 8,32,000 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சற்றே குறைவான விலையாக இருந்தாலும், இதற்கு இந்தியர்கள் மத்தியில் போதிய அளவு வரவேற்புக் கிடைக்கவில்லை. இதன் காரணத்தினாலேயே இந்த கார் மாடலில் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, சிட்ரோன்.

பசால்ட் கார் மாடலின் பக்கம் மட்டுமல்ல சி3 மற்றும் சி3 ஏர்கிராஸ் ஆகிய கார் மாடல்களின் பக்கமும் கார் காதலர்களின் கவனத்தை திருப்பும் விதமாக டார்க் எடிசனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. கருப்பு நிறத்தை அதிகம் நேசிக்கக் கூடியவர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த சிறப்பு குறிப்பிட்ட சில காலம் வரை மட்டுமே விற்பனையில் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
சிட்ரோன் டார்க் எடிசனின் விலை விபரம் பட்டியலாக:
| கார் மாடல் | விலை |
| சி3 | ₹8,38,300 onwards |
| ஏர்கிராஸ் | ₹13,13,300 onwards |
| பசால்ட் | ₹12,80,000 onwards |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, தோனி ரசிகர்கள் இந்த காரை விரும்பி வாங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் மத்தியில் கருப்பு நிற விரும்பிகள் மத்தியிலும் புதிய சிட்ரோன் டார்க் எடிசன் கார்களுக்கு அமோக வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
