காரின் விலை தெரிந்தால் உடனே வாங்கி போட தான் தோணும்! பலருக்கு இந்த கார் கம்பெனியை தெரியாது!

சிட்ரோயன் (Citroen) நிறுவனம் தனது 'X-சீரிஸ்' கார்கள் வரிசையை இந்தியாவில் புதிய 'ஏர்கிராஸ் எக்ஸ்' (Aircross X) காரை அறிமுகப்படுத்தி விரிவுப்படுத்தியுள்ளது. 'சிட்ரோயன் 2.0 - ஷிப்ட் இன்டு தி நியூ' என்ற சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய தத்துவத்தின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ள புதிய ஏர்கிராஸ் எக்ஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நவீன இந்தியக் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய ஏர்கிராஸ் எக்ஸ் எஸ்யூவி கார் ஆனது ஸ்டைல், வசதி மற்றும் புதுமையின் கலவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 'பஸல்ட் எக்ஸ்' (Basalt X) எஸ்யூவியின் வெற்றியைத் தொடர்ந்து, சிட்ரோயன் X-சீரிஸ் பிராண்டை புதிய ஏர்கிராஸ் எக்ஸ் மேலும் வலுப்படுத்துகிறது.

citroen aircross x india launches

புதிய ஏர்கிராஸ் எக்ஸ் கார் பிரீமியம் வடிவமைப்பு மற்றும் CARA போன்ற பிரிவின் முதல் புதுமைகள் உடன் உருவாக்கப்பட்டு உள்ளது. CARA என்பது, ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான, இருப்பிடம் மற்றும் சூழல் சார்ந்த உரையாடல்களை வழங்கும் தொழிற்நுட்பம் ஆகும். இது ஒவ்வொரு சிட்ரோயன் வாகனத்தையும் புத்திசாலித்தனமாகவும், உள்ளுணர்வுடனும் செயல்பட வைக்கிறது.

புதிய ஏர்கிராஸ் எக்ஸ் கார் வெறும் மேம்பாடுகளைக் கடந்து, வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் ஒரு எஸ்யூவி-யாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதன் பிரிவிலேயே சிறந்த வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) உடன், விசாலமான கேபினை வழங்குகிறது.

citroen aircross x india launches

அதிக வீல்பேஸ் மூலமாக அகலமான ஷோல்டர் ரூம், 7-சீட்டர் & 5-சீட்டர் லேஅவுட்கள் மற்றும் அதிக பொருட்களை வைத்து செல்வதற்கு ஏற்ப 511 லிட்டர் கொள்ளளவில் பெரிய அளவில் பூட் இடவசதி ஆகியவற்றை புதிய ஏர்கிராஸ் எக்ஸ் பெற்றுள்ளது. சிட்ரோயனின் தனித்துவமான 'அட்வான்ஸ்டு கம்பர்ட் சஸ்பென்ஷன்' இந்திய சாலைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டு இந்த காரில் பொருத்தப்பட்டு உள்ளது.

பிரெஞ்சு ஸ்டைல் எஸ்யூவி (SUV) கார்களுக்கே உண்டான கம்பீரமான தோற்றம், தனித்துவமான சிட்ரோயன் DRL-கள், இரட்டை கலர் ஆப்ஷன்கள் மற்றும் நேர்த்தியான தங்க நிற உட்புற அலங்காரம் ஆகியவை புதிய ஏர்கிராஸ் எக்ஸ் காருக்கு கவர்ச்சியான தோற்றத்தை அளிக்கின்றன. அதிக வீல்பேஸ் போன்று, 200 மிமீ-இல் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் (தரையில் இருந்து காரின் அடிப்பகுதியின் உயரம்) எளிதான உள்நுழைவு மற்றும் வெளியேறுதலை உறுதி செய்கிறது.

citroen aircross x india launches

அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ் உடன், ஸ்மார்ட் ஸ்டோரேஜ் தீர்வுகள் புதிய ஏர்கிராஸ் எக்ஸ் காரை நகரப் பயணங்களுக்கும், நீண்ட நெடுஞ்சாலைப் பயணங்களுக்கும் ஏற்றதாக மாற்றுகின்றன. இரண்டாம் மற்றும் மூன்றாம் இருக்கை வரிசைகளில் கூரை மீது பொருத்தப்பட்ட ஏர் கண்டிஷனிங் வென்ட்கள், அனைத்து பயணிகளுக்கும் சிறந்த கூலிங் செயல்திறனை வழங்குகின்றன.

இந்த புதிய காரின் அடர் பிரவுன் நிறத்திலான உட்புறத்தில் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் டோர் போல்ஸ்டர்களில் சாஃப்ட்-டச் லெதரெட் ஃபினிஷிங், 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, 7-இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் நேர்த்தியான தங்க நிற அலங்காரங்கள் ஆகியவை காரின் ஆடம்பர உணர்வை மேம்படுத்துகின்றன.

citroen aircross x india launches

மறுவடிவமைக்கப்பட்ட கியர் லீவர், காற்றோட்டமான லெதரெட் இருக்கைகள், மற்றும் பிரகாசமான கேபின் விளக்குகள் ஆகியவை காருக்கு வசதிகளையும் நேர்த்தியையும் சேர்க்கின்றன. இவை மட்டுமின்றி, தொடுதல் இல்லாமல் செயல்படக் கூடிய ப்ராக்ஸி-சென்ஸ்TM️ பாஸிவ் என்ட்ரி & புஷ் ஸ்டார்ட், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்பீடு லிமிட்டர், ஆட்டோ IRVM & LED புரொஜெக்டர் ஃபாக் லேம்ப்ஸ் உள்ளிட்டவையும் புதிய ஏர்கிராஸ் எக்ஸ் காரில் வழங்கப்பட்டு உள்ளன.

பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக்குகள், ESP, ஹில் ஹோல்ட், ABS (EBD உடன்), பின் பக்க பார்க்கிங் சென்சார்கள் (அனைத்து வேரியண்ட்களிலும்), 40-க்கும் மேற்பட்ட ஆக்டிவ் & பாஸிவ் பாதுகாப்பு அம்சங்கள், அதிகபட்ச பார்வைத் திறனுக்கான LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், ஃபாக் லேம்ப்ஸ் மற்றும் DRL-கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

citroen aircross x india launches

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வழக்கமான கார்களில் இருந்து சிட்ரோயனின் இவ்வாறான எக்ஸ் வரிசை கார்கள் தனித்துவம், செயல்திறன் மற்றும் அணுகக்கூடிய புதுமைகளை வலியுறுத்துகின்றன. இதன் மூலமாக, இந்த எக்ஸ் கார்கள் சிட்ரோயன் நிறுவனத்திற்கு இந்தியாவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி வருகின்றன. இந்தியாவில் ஏர்கிராஸ் காரின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லாத நிலையில், புதிய ஏர்கிராஸ் எக்ஸ் காரின் விற்பனையாவது கவனிக்கத்தக்க வகையில் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 3, 2025, 16:07 [IST]
English summary
Citroen launches aircross x suv car in india check price features all details here
மேலும்... #citroen #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X