மதுரை, திருச்சி, நெல்லையிலும் வந்தாச்சு! விற்பனை, சர்வீஸ், உதிரிபாகம் என எதுவும் தடையில்லாம கிடைக்கும்!
மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி மக்களை வளைத்துப் போடும் விதமாக முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் அந்தந்த மாவட்டங்களில் புதிய ஷோரூம்களை திறந்திருக்கின்றது. ஷோரும்களை மட்டுமே அது திறக்கவில்லை. அந்தந்த மாவட்டங்களில் சர்வீஸ் மற்றும் உதிரி பாக விற்பனையும் தடையின்ற கிடைப்பதற்கான நடவடிக்கையையும் அது எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக மக்களை, குறிப்பாக, தென் மாவட்ட மக்களை வளைத்துப் போட வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த வேலையை அந்த நிறுவனம் பார்த்திருக்கின்றது.
இந்த வேலையை பார்த்திருப்பது டாடா (Tata Motors)-வோ அல்லது மாருதி சுஸுகி (Maruti Suzuki)யோ கிடையாது. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன் (Citroen) நிறுவனமே மதுரை, திருச்சி மற்றும் நெல்லையில் புதிய ஷோரூம்களைத் திறந்து அங்கு கால் தடம் பதித்திருக்கின்றது.

தமிழகத்தில் தன்னுடைய இருப்பை வலுவாக்கும் பொருட்டே இந்த நடவடிக்கையை அது மேற்கொண்டிருக்கின்றது. இந்த ஷோரூம்கள் டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் வகையில் தயார் செய்திருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. 3டி அனுபவமும் இங்கேக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், காரை வாங்க வருபவர்களுக்கு தனித்துவமான புதிய அனுபவம் இங்கே கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும், இங்கே சிட்ரோன் பிராண்டு கார்கள் மட்டுமின்றி ஜீப் (Jeep) நிறுவனத்தின் கார்களும் காட்சிப்படுத்தப்படும் என கூறப்பட்டு இருக்கின்றது. சிட்ரோன் பிராண்டின் கீழ் சி5 (C5), சி3 (C3), சி3 ஏர்கிராஸ் (C3 Aircross), பசால்டு (Basalt) மற்றும் இசி3 (eC3) ஆகிய கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இதேபோல், ஜீப் பிராண்டின்கீழ் காம்பஸ் (Compass) மற்றும் மெரிடியன் (Meridian) ஆகிய இரண்டு கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இரண்டும் சொகுசு அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல்கள் ஆகும். இவை அனைத்தும் மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் திறக்கப்பட்டு இருக்கும் புதிய ஷோரூம் வாயிலாக விற்பனைக்கு வழங்கப்படும்.
சிட்ரோன் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான வரவேற்பேக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. வரும் நாட்களில் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை நோக்கிய பயணத்தை அந்நிறுவனம் தொடங்கி இருக்கின்றது. அதாவது, எங்கெல்லாம் விற்பனையகங்கள் இல்லையோ அங்கெல்லாம் விற்பனையகம் மற்றும் சேவை மையங்களைக் கொண்டு சென்று அதன் வாயிலாக புதிய வாடிக்கையாளர்களைக் கவர நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.
இந்த நிறுவனம் சில விலை குறைவான கார் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. சி3 மற்றும் பசால்டு ஆகியவையே அவை ஆகும். பசால்டு ரூ. 8.25 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும், சி3 ரூ. 6.16 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். அதேவேளையில் இவை இரண்டும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கார் மாடலும்கூட என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிகவும் குறைவான வரவேற்பையே இந்த நிறுவனம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் அது ஷோரூம்களை விரிவாக்கம் செய்யும் பணியில் களமிறங்கி இருப்பது வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தவும், சந்தையில் சிட்ரோன் நிறுவனத்தின் இருப்பை வலுவாக்கவும் உதவும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








