5-ஸ்டார் ரேட்டிங் சும்மா தூக்கி கொடுத்திடல... அதிகமா யாரும் வாங்காத காரில் இந்த அளவுக்கு பாதுகாப்பா!!

தற்போது நாடு முழுவதும் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், சிட்ரோயன் ஏர்கிராஸ் (Citroen Aircross) கார் பாரத் என்சிஏபி (Bharat NCAP) கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த சோதனைகளில் உட்படுத்தப்பட்டது ஏர்கிராஸ் காரின் 5எஸ் வேரியண்ட் ஆகும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில், ஸ்மார்ட்டான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும் நோக்கத்தில் செயல்படும் சிட்ரோயன் நிறுவனத்தின் பயணத்தில் இது ஒரு முக்கிய படியாகும். சிட்ரோயன் 2.0 (Citroën 2.0) உத்தியின் கீழ் சிட்ரோயன் நிறுவனத்தின் தயாரிப்பு தத்துவத்தில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியை இந்த சாதனை பிரதிபலிக்கிறது.

citroen aircross at bharat ncap crash test

இது கவர்ச்சிகரமான வடிவமைப்புடன் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் வசதியை இணைக்கும் வாகனங்களை வழங்குவதில் சிட்ரோயன் கவனம் செலுத்துகிறது என்பதை காட்டுகிறது. இந்தியாவில் கடந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஏர்கிராஸ் கார் அதன் சவாரி தரம் மற்றும் வசதிக்காக வாடிக்கையாளர்களால் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது. இருப்பினும், ஏர்கிராஸ் காரின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை என்பது வேறு கதை.

சிட்ரோயன் ஏர்கிராஸ் அதன் உயர்தர பாதுகாப்புத் தகுதிகளுடன், பல்துறைத்திறன் மற்றும் சவுகரியமான பயணம் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முழுமையான தொகுப்பாக திகழ்கிறது. இதன் மூலம், பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்களுக்கான பாதுகாப்பு (AOP), குழந்தைகளுக்கான பாதுகாப்பு (COP) மற்றும் பாதுகாப்பு உதவி தொழில்நுட்பங்கள் (SAT) உட்பட அனைத்து விபத்து சோதனைகளிலும் சிறந்த செயல்திறனை ஏர்கிராஸ் வெளிப்படுத்தியுள்ளது.

citroen aircross at bharat ncap crash test

இதன் மூலமாக, பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பீடு இந்த சிட்ரோயன் காருக்கு வழங்கப்பட்டு உள்ளது. முன்பக்க மற்றும் பக்கவாட்டு மோதல்களை திறம்பட கையாளவும், மோதலின்போது கேபின் நசுக்கப்படுவதை குறைக்கவும் மேம்பட்ட உயர் வலிமை எஃகு (AHSS) மற்றும் அதி உயர் வலிமை எஃகு (UHSS) ஆகியவற்றைப் பயன்படுத்தி ஏர்கிராஸ் உருவாக்கப்படுகிறது.

சிட்ரோயன் ஏர்கிராஸ் விரிவான பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. இதில் ஆறு ஏர்பேக்குகள், ஐஎஸ்ஓஃபிக்ஸ் (ISOFIX) குழந்தை இருக்கை நங்கூரங்கள் மற்றும் மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு (Electronic Stability Control), டயர்களில் காற்றழுத்தத்தை கண்காணிப்பு அமைப்பு (Tyre Pressure Monitoring System) மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் (Hill-hold Assist) போன்ற 40-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன.

citroen aircross at bharat ncap crash test

இவற்றுடன் ஏர்கிராஸ் கார் வசதி, பயன்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்தும் பல அம்சங்களையும் வழங்குகிறது. மேம்பட்ட பார்வைக்கு எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், க்ளைமேட் கண்ட்ரோலுடன் கூடிய தானியங்கி ஏர் கண்டிஷனிங் மற்றும் எலக்ட்ரிக் பவர் மூலம் மடக்கக்கூடிய பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் (ORVMs) ஆகியவற்றை அவற்றுள் முக்கியமானவைகளாக கூறலாம்.

உட்புறத்தில், சாஃப்ட்-டச் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், கிராப் ஹேண்டில்கள், பின்பக்க ஏசி வென்ட்கள் மற்றும் எளிதாக அணுகுவதற்கு கதவுகளில் மறுசீரமைக்கப்பட்ட பவர் விண்டோ சுவிட்சுகள் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. ஏர்கிராஸ் எஸ்யூவி, 1.2 லிட்டர் ஜென் 3 பியூர்டெக் (PURETECH) 110 டர்போ மற்றும் பியூர்டெக் 82 (PURETECH 82) என்ஜின்கள் என இரண்டு என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

citroen aircross at bharat ncap crash test

இந்த என்ஜின் ஆப்ஷன்கள் உடன் 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்யலாம். 5 இருக்கைகள் மற்றும் 5+2 இருக்கைகள் என இரு விதமான சீட் ஆப்ஷன்களில் கிடைக்கும் சிட்ரோயன் ஏர்கிராஸ் காரில் புதியதாக ஏர்கிராஸ் எக்ஸ் (AIRCROSS X) காரை வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிட்ரோயன் அறிமுகம் செய்ய உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏர்கிராஸ் காரின் உயர்மட்ட மதிப்பீடு, பாதுகாப்பு, புதுமை மற்றும் பொறியியல் சிறப்பிற்கான சிட்ரோயன் நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இன்றைய காலத்தில் புதியதாக கார் வாங்கும்போது காரின் பாதுகாப்பு மதிப்பெண்களை கவனமாக பார்ப்பவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் மாதங்களில் சிட்ரோயன் ஏர்கிராஸ் காரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 29, 2025, 22:42 [IST]
English summary
Citroen receives 5 star rating for aircross at bharat ncap crash test check all details here
மேலும்... #citroen #crash test #ncap #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X