5 கார் இருந்தும் 100க்கு 70 பேர் இந்த ஒரு காரை தான் வாங்குறாங்க!

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாத விற்பனவை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதில் அந்நிறுவனம் 5 கார்களை இந்தியாவில் விற்பனவை செய்தாலும் ஒரு காருக்கு மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருப்பது தெரியவந்துள்ளது. 100 கார்கள் விற்பனையானால் 70 பேர் அந்தஒரு காரை மட்டுமே வாங்குகிறார்கள் என தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் சிட்ரோன் இந்நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை பதித்து தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தரமான தயாரிப்புகளை விற்பனை செய்தாலும் போதுமான ஷோரூம்கள் இல்லை என்பதால் இந்நிறுவனம் குறைவான விற்பனையையே பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாத விற்பனை விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Citroen Sales Nov 2025

சிட்ரோன் நிறுடவனம் கடந்த நவம் மாதம் மொத்தம் 1224 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் 1426 கார்களை விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும் போது நவம்பர் மாத விற்பனை குறைவு தான் ஆனால் அக்டோபர் மாதம் தசரா, தீபாவளி என வரிசையாக பண்டிகை காலம் என்பதால் இந்த காரின் விற்பனை கணிசமாக குறைவாக உள்ளது.

இந்நிறுவனம் சி3, பசால்ட் கூபே, சி3 ஏர்கிராஸ், இசி3, சி5 ஏர்கிராஸ் ஆகிய 5 கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் கடந்த நவம்பர் மாதம் 861 சி3 கார்கள் 139 பசால்ட் கூபே கார்கள், 208 சி3 ஏர்கிராஸ் கார்கள், 16 இசி3 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஒரு சி5 ஏர்கிராஸ் கூட விற்பனையாகவில்லை.

Citroen Sales Nov 2025

இதுவே கடந்த அக்டோபர் மாதம் 897 சி3 கார்கள், 217 பசால்ட் கூபே கார்கள், 227 சி3 ஏர்கிராஸ் கார்கள், இசி3 கார்கள் 83, 2 சி5 ஏர்கிராஸ் ஆகிய கார்கள் விற்பனையாகியுள்ளன. இதில் அதிகம் விற்பனையாவது சி3 கார் தான். இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 80 பிஎச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்படுகிறது. அடுத்த ஆப்ஷனாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல்இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இந்த இன்ஜின் 6 ஸ்ப்ீடு மேவல் கியரில் 108 பிஎச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும், ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷனில் 108 பிஎச்பி பவர் மற்றும் 205 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென் கன்சோல், பவர் விண்டோ ஸ்விட்ச்கள், உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 3981 மிமீ நீளம், 1733 மிமீ அகலம், 1604 மிமீ உயரம், 2450 மிமீ வீல் பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

Citroen Sales Nov 2025

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 100க்கு 70 பேர் ஒரு நிறுவனத்தின் ஒரே காரை வாங்குகிறார்கள் என்றால் நிச்சயம் மார்கெட்டில் அந்த கார் ஹிட்தான். ஆனால் மற்ற கார்கள் ஏன் விற்பனையாவில்லை என அந்நிறுவனம் யோசிக்க வேண்டும். பெரும்பாலும் சிட்டி பகுதிகளை கவனத்தில் கொள்வதால் விற்பனை குறைவாக உள்ளது. மற்ற பகுதிகளிலும் ஷோரூம்கள் வந்தால் நிச்சயம் விற்பனை அதிகமாகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 14, 2025, 14:50 [IST]
English summary
Citroen sales nov 2025 model wise breakup
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X