தோனி வந்தும் வேலைக்கு ஆகல! தமிழ்நாட்டுல இருக்க கம்பெனி இப்பவேற ஐடியா பண்ணிட்டாங்க!
சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் காலடி தடம் பதித்து சில ஆண்டுகளாகியும் பெரிய அளவில் விற்பனையை பெற முடியவில்லை. இந்நிலையில் இந்தியாவிற்கு அந்நிறுவனத்தின் யுக்தியை மாற்ற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக சிட்ரோன் நிறுவனம் செய்துள்ள யுக்தி என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் சிட்ரோன். இந்நிறுவனம் இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு முதல் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் திருவள்ளூரு் மாவட்டத்தில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் களம் இறங்கி 4 ஆண்டுகள் ஆன பிறகும் விற்பனை பெரிய அளவில் இல்லை.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் நல்ல பெயரை பெற்றாலும் மக்கள் பலர் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்க தயங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கூட இந்நிறுவனம் பிராண்ட் அம்பாஸிட்டராக நியமித்தது. இருந்தாலும் பெரிய அளவில் விற்பனை நடக்கவில்லை.
இந்நிலையில் சிட்ரோன் நிறுவனம் தனது யுக்தியை மாற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி சிட்ரோன் 2.0 என்ற புதிய யுக்தியை கையாண்டுள்ளது. இந்த யுக்தியின்படி மாடல்களை அப்டேட் செய்வது, ரீடெயில் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவது, வாடிக்கையாளர் சேவையில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட விஷயங்களை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்காக முதலில் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களை கேட்க முடிவு செய்துள்ளது. இதன்படி சிட்ரோன் பிராண்டை இன்னும் வாடிக்கையாள்களுக்கு எளிமைப்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும் மாடல்களை அப்டேட் செய்யும் முயற்சியில் சி3 ஏர்கிராஸ், மற்றும் பசால்ட் ஆகிய கார்களை அப்டேட் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த அப்டேட்கள் அல்லாம் இ்நதியாவை மையமாக கொண்டு இயங்கும் இன்ஜினியர்களை வைத்து இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இதை மாற்றியுள்ளது. இந்த வாகனத்தின் தயாரிப்பை 98 சதவீதம் உள்ளூரிலேயே செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் வாகனத்தின் விலை கணிசமாக குறையும்.

சிட்ரோன் நிறுவனம் 2021ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது 10 ஷோரூம்கள் மட்டுமே வந்தது. தற்போது 80 ஷோரூம்களுடன் செயல்பட்டு வருகிறது. இதை இந்தாண்டு இறுதிக்குள் இரு மடங்காக முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த நிறுவனத்தின் வாடிக்கையார்கள் கார் வாங்கவோ, சர்வீஸ் செய்யவோ 100 கி.மீக்கு மேல் பயணிக் கூடாது என்ற கொள்கையையும் வைத்துள்ளனர்.
இது போக சிட்ரோன் நிறுவனம் டிஜிட்டல் சர்வீஸ் மாடலையும் கொண்டு வரப்படுகிறது.இதனால் சர்வீஸ் செலவில் வெளிப்படைத்தன்மை, ரியல் டைம் சர்வீஸ் டிராக்கிங், இந்தியா முழுவதும் விற்பனைக்கு பிறகான ஒரே மாதிரியான சேவை உள்ளிட்டவைற்றை வழங்குகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் ரூ5300 கோவில் தயாரிப்பு ஆலை, ஆய்வு, மற்றும் லோகலிசேஷனிற்காக முதலீடு செய்தள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து எலெக்ட்ரிக் மற்றும் கம்பஷன் இன்ஜின் கார்களுக்காக முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்திற்கு என்னதான் நல்ல பெயர் இருந்தாலும் விற்பனை குறைவான இருப்பதற்கு சர்வீஸ் மற்றும் விற்பனை நெட்வோர்க் போதுமான அளவில் இல்லாததே காரணமாக இருக்கிறது. இதை அதிகப்படுத்தினால் விற்பனை நிச்சயம் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
