சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்பு நடந்த அதிசயம்! டிரைவரே இல்லாமல் தானாக பார்க் செய்த மஹிந்திரா கார்
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார்களாக BE6 மற்றும் XEV 9e ஆகிய இரண்டு கார்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று இந்த கார்களுக்கான சோதனை ஓட்டம் துவங்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த இந்த சோதனை ஓட்டத்தை கொடியை செய்து துவக்கி வைத்தார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் சமீப நாட்களாக வாகன துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் எல்லாம் மக்களை பிரமிக்க வைக்கும் வகையில் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். இதனால் அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் மீது மக்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அந்நிறுவனம் BE 6 மற்றும் XEV 9e ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்களுக்கான முன்பதிவு பிப்ரவரியில் துவங்குகிறது. இந்நிலையில் சென்னையில் இந்த காருக்கான சோதனை ஓட்டத்தை துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கார்களின் சோதனை ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் தொழிற்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு பிரிவு தலைவர் வேலுசாமி கலந்து கொண்டார். மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் உடன் இருந்தார். இந்த காரின் சோதனையை ஓட்டத்தை கொடியேற்று துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் அதன்பிறகு இந்த காரில் ஏறி பயணம் செய்து இந்த கார் எப்படி இருக்கிறது என அவரும் சோதனை செய்து பார்த்தார்.

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த இரண்டு கார்களும் முற்றிலுமாக தமிழகத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கார்களாகும். மஹிந்திரா நிறுவனத்தின் பிஇ6 காரை பொறுத்தவரை அக்ரஸிவான ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட ஒரு கூபே ரக எஸ்யூவி காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. 59 கிலோ வாட் ஹவர் மற்றும் 79 கிலோ வாட் ஹவர் ஆகிய இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் இதில் இருக்கிறது. பேட்டரி ஆப்ஷன்களுக்கு ஏற்ப இந்த காரின் ரேஞ்ச் மாறுபடுகிறது. சிறிய பேட்டரி ஆப்ஷனில் முழு சார்ஜில் 535 கிலோமீட்டர் ரேஞ்சும் பெரிய பேட்டரி ஆப்ஷனில் இந்த கார் 682 கிலோமீட்டர் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமான அம்சமே இந்த காரில் உள்ள சார்ஜிங் நேரம் தான். இது டிசி ஃபாஸ்ட் சார்ஜரை சப்போர்ட் செய்யக்கூடியதாக இருக்கிறது. இது 20% முதல் 80% பேட்டரியை வெறும் 20 நிமிடத்தில் சார்ஜ் செய்து விடுகிறது. இதுவே வீட்டில் சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் முழு பேட்டரியை சார்ஜ் செய்ய 8 மணி நேரம் தேவைப்படும். அது மட்டுமில்லாமல் இந்த காரில் 455 லிட்டர் அளவு கொண்டபூட் இடவசதி இருப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக மஹிந்திரா எக்ஸ்யூவி 9e காரை பொருத்தவரை இன்குலோ ஃபிளாட்பார்மில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு கூபே ஸ்டைல் கார்தான் இந்த கார் ரூபாய் 21.90 லட்சம் முதல் ரூபாய் 30.50 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குவருகிறது.இந்த காரிலும் BE 6 காரிலும் ஒரே மாதியான பேட்டரி பேக் தான் வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் இந்த கார்களில் இருக்கும் மிக முக்கியமான அம்சம் என்றால் அது தானியங்கியாக பார்க்கிங் செய்யக்கூடிய அம்சம் தான். இந்த அம்சம் குறித்து சோதனை ஓட்ட துவக்க விழாவில் இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என செய்து காட்டப்பட்டது. இது பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.முதல்வர் ஸ்டாலின் கண் முன்பே இந்த அதிசிய நிகழ்வு நடந்தது.
மேலும் இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்ப பிரிவு தலைவர் வேலுசாமி கூறும் போது இந்த இரண்டு கார்களின் சோதனை ஓட்டங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாளை முதல் துவங்கும் என கூறியுள்ளார். இந்த காருக்கான புக்கிங் பிப்ரவரி மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் டெலிவரி குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் இந்த மார்க்கெட்டை பிடிப்பதற்காக மஹிந்திரா நிறுவனம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்கும் நிலையில் இந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் எலெக்ட்ரிக் வாகன துறையில் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









