அரபு நாடுகள் ஆட்டத்திற்கு ஆப்பு வைக்கும் ஆலையை துவக்கிய முதல்வர் ஸ்டாலின்! அதுவும் நம்ம தூத்துக்குடியில்
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வின்ஃபாஸ்ட், இந்நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரிக்க முடிவு செய்த நிலையில் தூத்துக்குடியில் தன் ஆலையை கட்டமைத்து வாகன தயாரிப்பை துவங்கவுளளது. இந்த ஆலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். இந்த ஆலையில் என்னென் செயல்பாடுகள் நடக்கிறது? இங்கு தயாரிக்கப்படும் கார்கள் மற்றும் இந்த ஆலையின் செயல்பாடு குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டது. இதற்கான இடத்தை தேர்வு செய்ய நினைத்த போது தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியை தேர்வு செய்தனர். கடந்த 2014ம் ஆண்டு தமிழக அரசுடன் தூத்துக்குடியில் ஆலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரூ16,000 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக 114 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து தூத்துக்குடியில் இந்நிறுவனம் ஆலை கட்டமைக்கும் பணியை செய்து வந்தது. இதற்கிடையில் வெளிநாட்டில் உள்ள தங்கள் கார்களை தூத்துக்குடியில் கட்டமைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தது. கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனம் தனது கார்களை காட்சிப்படுத்தியிருந்தது.
மெத்தமாக தமிழகத்தில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதில் முதல் 5 ஆண்டிற்குள் 500 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யவும், பின்பு படிப்படியாக முதலீட்டை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் ஆண்டிற்கு 1.5 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு தனது ஆலைகளை கட்டமைத்துள்ளது. முதற்கட்டமாக 50,000 வாகனங்களை மட்டுமே இந்நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிறுவனம் முதல் காராக இந்தியாவில் விஎஃப்6 மற்றும் விஎஃப் 7 ஆகிய கார்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இந்த கார்களை முதலில் உதிரி பாகங்களாக வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்து கட்டமைக்கவும், படிப்படியாக இதன் பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த கார்களை குறைந்த விலையில் இந்தியாவில் விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் இங்கு தயாரிக்கப்படும் வாகனங்களை இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் இலங்கை, நேபாளம், மொரீஸியஸ், உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா இந்நிறுவனத்தின் தயாரிப்பு மையமாக செயல்படவுள்ளது.

இந்நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்ல தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கூட தனது ஆலையை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு மட்டும் மொத்தம் 97 ஆயிரம் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது.இது அதற்கு முந்தைய ஆண்டை விட 3 மடங்கு அதிக விற்பனையாகும். இதில் 10 சதவீத விற்பனை வியட்நாம் நாட்டிற்கு வெளியே செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் தூத்துக்குடியை ஆலை அமைக்க ஏற்ற இடமாக அந்நிறுவனம் தேர்வு செய்ததற்கு முக்கியமான காரணம் அதன் ஏற்றுமதி தான்.தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு சுலபமாக ஏற்றுமதி செய்யலாம் என்பதால் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது. விரைவில் இந்த ஆலையில் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









