யாரு சாமி நீ! இப்படி ஒரு ஐடியா எப்படி வந்திருக்கும்? நம்ம கரூரில் நடந்த சுவாரஸ்யம்!
பொதுவாக புதிதாக கார் வாங்கும் போது அதில் ஏசி என்பது ஒரு கட்டாய விஷயமாக இருக்கிறது. இன்று வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏசி அல்லாத கார்களை விற்பனையே செய்வதில்லை. அந்த அளவிற்கு ஏசி மிக முக்கியமான விஷயமாக மாறிவிட்டது. ஆனால் கனரக வாகனங்களில் இன்னும் ஏசி பொருத்தப்படுவதில்லை. இது குறித்து மத்திய அரசு சில சட்ட விதிமுறைகளை கொண்டு வந்தாலும் அது இன்னும் செல்பாட்டிற்கு வருவதில் சிக்கல் இருக்கிறது. ஆனால் சாதாரண லாரி ஒன்றில் ஏசி பொத்தப்பட்டிருக்கும் சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
பொதுவாக கனரக வாகனங்கள் தமிழ்நாட்டில் கரூர் பகுதியில் தான் அதிகம் கட்டமைக்கப்படுகின்றன. கனரக வாகனங்களை வாங்குபவ்ரகள் நேரடியாக அதை கரூர் பகுதிக்கு கொண்டு சென்று அங்கு வைத்து தான் பாடி கட்டுகிறார்கள். குறிப்பாக தென்னிந்தியாவில் ஓடும் ஏகப்பட்ட கனரக வாகனங்களில் கரூரில் பாடிகட்டப்பட்ட வாகனமாகவே இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் கரூரில் பாடி கட்டப்பட்ட லாரியின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த லாரியில் வழக்கமாக வாகனங்களில் வைக்கும் ஏசி இல்லாமல் வீடுகளில் பயன்படுத்தும் ஸ்பிளிட் ஏசியை பயன்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த ஏசி எப்படி வேலை செய்யும்? இது சட்ட ரீதியாக சரியான ஒன்றா என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த வீடியோவின்படி லாரியின் லக்கேஜ் ஏற்றும் இடத்திற்கு கீழே வழக்கமாக பேட்டரி இருக்கும் பகுதிக்கு அருகில் ஸ்பிளிட் ஏசியின் அவுட்டோர் யூனிட்டை பொருத்தியுள்ளனர். லாரியின் கேபின் பகுதியில் நடுவே மேலே ஸ்பிளிட் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமாக எப்படி வீடுகளில் ஏசி மாட்டுவோமோ அதே போல இது மாட்டப்பட்டுள்ளது.

இந்த ஏசி பொருத்தப்பட்டுள்ளதால் லாரின் ஜன்னல் மற்றும் கதவு பகுதிகள் முழுவதும் மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. ஒரு கார் எப்படி ஏசி பொருத்தப்பட்டால் வடிவமைக்கப்படுகிறதோ அதே போலவே இந்த லாரியையும் கட்டமைத்துள்ளனர். சாதாரணமாக லாரிகளில் பொருத்தப்படும். ஏசி போல அல்லாமல் வீடுகளில் பொருத்தப்படும் ஏசி இந்த லாரியில் பொருத்தப்பட்டுள்ளது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சட்டப்படி சரியான விஷயமா என்பது சரியான விபரங்கள் இல்லாததால் சொல்ல முடியாது. இது வாகனத்தின் பதிவிற்கு பிறகு செய்யப்பட்டதா அல்லது பதிவு செய்வதற்கு முன்பே செய்யப்பட்டதா என்ற தகவல் இல்லை. சட்டப்படி அனுமதிக்கப்படாத விஷயங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்தால் அந்த வாகனங்களை பதிவு செய்ய முடியாது. அதனால் குறிப்பிட்ட இந்த லாரி சட்டப்படி தான் இதை பொருத்தியுள்ளார்களா என்பதை சரியாக சொல்ல முடியாது.

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் கனரக வாகனங்களிலும் ஏசி கட்டாயம் என்ற சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இதை கொண்டு வருவதற்கான முயற்சியில் இருக்கிறது. இந்நிலையில் லாரி ஓட்டுநர்கள் இந்தியாவில் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் பல்வேறு பருவ நிலைகளில் பயணிப்பதால் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கனரக வாகனங்களில் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் வாகனங்களில் மட்டுமே தற்போது ஏசி இருக்கிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கம் வாகனங்களுக்கும் இது போன்று ஏசி பொருத்தலாம் என்ற ஐடியா அவர்களுக்கு கிடைத்திருக்கும். வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த விஷயத்தில கவனம் செலுத்தி கனரக வாகனங்களிலும் ஏசி பொருத்தினால் நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









