காஸ்ட்லி காராக தேடி தேடி வாங்கிய மக்கள்! தீபாவளிக்கு இந்த கார் தான் அதிகமா வித்திருக்குது!
இந்தியாவில் பண்டிகை காலங்களில் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும். கடந்த தீபாவளி காலத்திலும் மிக அதிகமான விற்பனை நடந்தது. இதற்கு பண்டிகை காலம் ஒரு பக்கம் இருந்தாலும், செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்புவந்தது. மற்றொரு காரணமாக இருகு்கிறது. இருக்கிறது. இந்நிலையில் இந்த விற்பனையில் கம்பேக்ட் கார்கள் தான் அதிக விற்பனையை பெற்றுள்ளது தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த தீபாவளி பண்டிகை கால விற்பனவையில் ரூ10 லட்சத்தறி்கும் குறைவான விலையில் உள்ள வாகனங்கள் தான் 78 சதவீத விற்பனையை பெற்றுள்ளன. ரூ5-10 லட்சம் விலை கொண்ட வாகனங்கள் மார்கெட்டில் ஆதிகம்க்கம் செலுத்தியுள்ளன. ரூ5 லட்சத்திற்கும் குறைந்த விலை கொண்ட வாகனங்களைவிட ரூ5-10 லட்சம் விலை கொண்ட வாகனங்கள் சிறப்பாக விற்பனையாகியுள்ளது.

இதற்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு முக்கியமான காரணமாக இருக்கிறது. ஜிஎஸ்டி வரி சிறிய மற்றும் காம்பேக்ட் ரக கார்களுக்கு குறைக்கப்பட்டது. 28 சதவீதமாக இருந்த வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்தது. இதன் பிறகு வாகன புக்கிங் 1.5 மடங்கு அதிகரித்தது.
இதனால் இந்தியா முழுவதும் சில்லறை விற்பனை அதிகரித்தது. இது போக நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக்காகவும் புக்கிங் அதிகரித்தது. இது ஷோரூமில் உள்ள ஊழியர்கள் பேப்பர் பணிகளை செய்யுவதை விட கார்கள் அதிகமாக விற்பனவையாவதாக பேச்சு கூட இருந்தது.

இந்நிலையில் சாலையில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட வாகனங்கள் 1.7 லட்சம் வாகனங்கள் கட்நத செப்டம்பர் மாதமும் 2.2 லட்சம் வாகனங்கள் அக்டோபர் மாதமும் விற்பனையாகியள்ளது. இது குறிப்பாக மெட்ரோ மற்றும் நகர்புற பகதிகளில் அதகிம் விற்பனையாகியுள்ளது. மாருதி நிறுவனம் தான் அதிக அளடவில் விற்பனையாகியுள்ளது. அந்நிறுவனம் பண்டிகை காலத்தில் மட்டும் 5 லட்சம் கார்களுக்கான புக்கிங் கிடைத்துள்ளது. குறிப்பிடத்ததக்கது.
இந்த குறிப்பிட்ட செக்மெண்டில் 16.7 சதவீத வாகனங்கள் விற்பனையாகி வந்தது.ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு 20.5 சதவீதமாக குறைந்துள்ளது. என்டரி லெவல் கார்கள் மற்றும் காம்பேக்ட் லெவலர் கார்கள் சேர்ந்து சிட்டி மற்றும் கிராப்புற விற்பவனையில் 35 சதவீத்திற்கு மேல் வளர்ச்சியடைந்துள்ளது. இது மட்டுமல்ல ரூ15-20 லட்சம் விலை கொண்ட வாகனங்களின் விற்பனையும் சராசரியாக 26 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ20 லட்சத்திற்கும் அதிகமான விலை கொண்ட வாகனங்களின் விற்பனை 40 சதவீதம் அதிகமாகியுள்ளது.

இதனால் பிரிமியம் கார்களுக்கான மார்கெட்டும் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு பெரிதாகியுள்ளுது. இந்தி கார்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. முன்பு செஸ் வரி உள்ளிட்ட வரிகள் இருந்தன. தற்போது அது எல்லாம் நீக்கப்பட்டு ஒரே வரியாக 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது. முன்பு இதைவிட அதிகமாக வரிகள் இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வாகனங்களைவிற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த பண்டிகை காலத்தில் நல்ல விற்பனவையை பெற்றுள்ளது. காம்பேக்ட் செக்மெண்ட் எதிர்பாராத வளர்ச்சியை சந்தித்துள்ளுது. இது வரும் காலங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









