காரை ஹேக் செய்வது இவ்வளவு ஈஸியா? கனெக்டெட் கார் இருந்தா இவ்வளவு பிரச்சனை வருமா?

இந்தியாவில் சமீப காலங்களிலங் தயாரிக்கப்படும் கார்களில் கனெக்டெட் கார் தொழிற்நுட்பம் பொருத்தப்படுகிறது. இந்த தொழிற்நுட்பம் மக்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தும் என்றும், அதே நேரம் மக்களுக்கான வசதியை அதிகப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் இது ஒரு தேவையில்லாத விஷயம் என பலர் கருதுகின்றனர். உண்மையில் கனெக்டெட் கார்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்பதை காணலாம்.

முன்னர் கார் என்றால் காருக்கள் ஏறி அமரும்போது தான் நமக்கும் காருக்கும் ஒரு கனெக்ஷன் கிடைக்கும். ஆனால் இன்று நீங்கள் கையில் வைத்திருக்கும் செல்போன் உடன் கார் எப்பொழதும் கனெக்டில் இருக்கும்படி தொழிற்நுட்பங்கள் அப்டேட்டாகி விட்டது. இப்படி தொழிற்நுட்பங்கள் அப்டேட்டானது ஒரு வகையில் வாகன ஓட்டிகளுக்கு நன்மையாக இருந்தாலும் சிலர் இது தேவையில்லாதது என கருதுகின்றனர். உண்மையில் எந்த எந்தவிற்கு இது தேவை, தேவையில்லை என்பதை பார்ப்போம்.

5 2

மார்கெட் தேவை

மார்கெட்டில் போட்டி காரணமாக ஒரு காரிலிருந்து மற்றொரு கார் எப்படி வேறுபடுகிறது என காட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த தொழிற்நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்றன. மார்கெட்டில் புதிதாக ஏதாவது தனது காரில் இருக்க வேண்டும் என மக்கள் மத்தியில் இருக்கும் தேவைகளே இப்படியான தொழிற்நுட்ப உட்புகுத்தலுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.

வாடிக்கையாளர்கள் தேவை

உண்மையில் அதிகமாக வாகனம் பயன்படுத்துபவர்களின் தேவையை அறிந்து சில தொழிற்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வாகன உரிமையாளர் அருகில் வரும் போது தானாக கார் அன்லாக்காவது, காருக்குள் ஏறும் முன்பே ஏசியை ஆன் செய்வது, கார்களில் சில அலர்ட்களை போன் மூலம் பெறுவது, ரியல் டைமில் வார்னிங் உள்ளிட்ட அம்சங்கள் தற்போது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

5 2

வருமானம்

இந்த கனெக்டெட் கார் தொழிற்நுட்பத்திற்காக வாகன தயாரிப்பு நிறுனங்கள் சப்ஸ்கிரிப்ஷன் திட்டங்களை வைத்துள்ளன. இதன் மூலம் விற்பனைக்கு பிறகும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சர்வீஸ் மட்டுமல்லாமல் இந்த முறையிலும் வருமானத்தை ஈட்டி வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு சில வசதிகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களும் இதை செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள்.

தொழிற்நுட்ப முன்னேற்றங்கள்

5ஜி தொழிற்நுட்பம், ஏஐ, ஐஓடி மற்றும் ஆக்யூமென்டட் ரியாலிட்டி போன்ற தொழிற்நுட்பங்கள் கார்களில் பயன்படுத்தப்படுகிறது. இது கார்களில் மேலும் வசதிகளை அறிமுகப்படுத்துகிறது. மக்களுக்கு தொழிற்நுட்ப முன்னேற்றங்களுன் கார் வடிவமைக்கப்படுகிறது.

5 2

பாதுகாப்பு அதிகரிக்கிறதா?

இன்றைய கனெக்டெட் கார் தொழிற்நுட்பங்களில் வி2எக்ஸ் தொழிற்நுட்பம் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டாலும் இது ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. இது முழுமையாக செயல்பாட்டிற்கு வர மேலும் சில ஆண்டுகள் ஆகும். தற்போது மிக குறைவான பாதுகாப்பையே இந்த தொழிற்நுட்பம் வழங்குகிறது. இது நாளடைவில் பல இடங்களில் பொருத்தப்படும் பட்சத்தில் இது நிச்சயம் தேவைப்படும்.

போக்குவரத்து மேம்படுமா?

எதிர்காலத்தில் டிராஃபிக் ஃப்ளோ, பல்வேறு வாகனங்களை ஒன்றாக மேனேஜ் செய்வது சுற்றுசூழலுக்கு ஏற்படும் ஆபத்துக்களை ஆராய்வது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தொழிற்நுட்பம் இன்னும் அப்டேட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

கார் ஹாக்கிங் ஆபத்து

தற்போது உள்ள கனெக்டெட் கார் தொழிற்நுட்பத்தில் தகவல் பாதுகாப்பு மிக பெரிய பிரச்சனையாக பேசப்படுகிறது. அதே நேரம் ஹேக்கர்கள் கனெக்டெட் கார் தொழிற்நுட்பம் மூலம் வாகனங்களை ஆக்ஸஸ் செய்ய முடியும் என்ற நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கனெக்ட்டட் கார் தொழிற்நுட்பத்தில் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றனர். இது தற்போது பெரிய அளவில் பயனில்லாமல் இருந்தாலும், வருங்காலங்களில் இது மிகபபெரிய வளர்ச்சி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த தொழிற்நுட்பத்தை புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 27, 2025, 17:50 [IST]
English summary
Connected cars hype or real know full details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X