இந்த வசதி உள்ள காரை வாங்குனா ஊரே உங்களை தான் திரும்பி பார்க்கும்!

ஆட்டோமொபைல் துறையில் துறையில் தொழிற்நுட்பங்கள் மிகவேகமாக வளர்ந்து வருகிறது. எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்றால் நீங்கள் கையில் கட்டியிருக்கம் வாட்சை வைத்து உங்கள் காரை கண்ட்ரோல் செய்யும் ஆப்ஷன் எல்லாம் கூட வாகனங்களில் வர துவங்கிவிட்டன. இந்நிலையில் தற்போது ஸ்மார்ட் வாட்ச் தற்போதைய நவீன கார்களில் எப்படி பயன்படுகிறது என்பதை காணலாம் வாருங்கள்.

இன்றைய காலகட்டத்தில் கேட்ஜெட்கள் அதிகம் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. அதை வைத்து மக்கள் தங்கள் வாழ்வை சுலபமாக்கி கொள்கின்றனர். இதன் ஒரு பங்காக தான் ஸ்மார்ட் வாட்ச்கள் இருக்கின்றன. இன்று ஏகப்பட்ட மக்கள் ஸ்மார்ட் வாட்ச்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். ஸ்மார்ட் வாட்ச்கள் இன்று கார்களை கண்ட்ரோல் செய்யும் வகையில் முன்னேறியுள்ளது.

SmartWatch in Cars

முக்கியமாக கியா நிறுவனம் கியா டிஜிட்டல் கீ 2.0 என்ற பெயரில் புதிய தொழிற்நுட்பம் ஒன்றை தங்கள் கார்களில் பொருத்தியுள்ளது. இதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாட்சை உங்கள் காரின் டிஜிட்டல் கீயாக பயன்படுத்த முடியும். இதை வைத்து காரன் லாக் செய்வது அன்லாக் செய்வது ஏன் காரை ஸ்டார்ம் செய்ய கூட முடியும். இந்த வசதி போன்களில் வந்துவிட்டாலும், எல்லா நேரங்களிலும் நாம் போனை கையில் எடுத்து செல்ல மாட்டோம். ஆனால் ஸ்மார்ட் வாட்ச் எல்லா நேரங்களில் நம் கையில் தான் இருக்கும்.

சுஸூகி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சுஸூகி கனெக்ட் என்ற ஆப்பை வழங்குகிறது. இந்த ஆப்பை ஸ்மார்ட் வாட்ச் மூலம் கண்ட்ரோல் செய்ய முடியும். மாருதி சுஸூகி நெக்ஸா ஷோரூம் மூலம் விற்பனை செய்யப்படும் கார்களுக்கே இ்நத வசதி வழங்கப்படுகிறது. இதில் காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் வரும் பல்வேறு விஷயங்கள் டிஸ்பிளேவில் வரும். குறிப்பாக இன்ஜின் ஆன்/ஆஃப் நிலை, எரிபொருள் அளவு, ரேஞ்ச், ஹெட்லைட் அலர்ட், பஸர் லைட் ஆன், ஆஃப், அதிக வேக அலர்ட், உள்ளிட்ட கூடுதல் வசதிகள் உள்ளது.

SmartWatch in Cars

அடாஸ் தொழிற்நுட்பத்திலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் அதிகம் பயன்படுகிறது. மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் ஆடாஸ் தொழிற்நுட்பத்தை ஸ்மார்ட் வாட்ச் வரை பயன்படுத்துகிறது. இந்த அடாஸ் தொழிற்நுட்பங்களை இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் கண்காணிக்கிறது. இதுவும் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது.

இது போக வழக்கமாக உள்ளது. போல ஜிபிஎஸ் நேவிகேஷன், பயணிக்க வேண்டிய தூரம், பாதை, உள்ளிட்ட விபரங்களையும் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பெற முடிகிறது. இதனால் இன்று ஸ்மார்ட்வாட்ச் மூலம் கிடைக்கும் வசதிகள் இன்றியமையாதததாக உள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முடிந்தளவிற்கு அதிக வசதிகளை உரிய பாதுகாப்போடு ஸ்மார்ட் வாட்ச்களில் கண்ட்ரோல் செய்யும் வகையில் வைத்துள்ளனர்.

SmartWatch in Cars

டாடா நிறுவனம் கூட ஸ்மார்ட் வாட்ச் மூலம் வாகனத்தை கண்டரோல் செய்ய முடியும் ஆப்ஷனை வழங்குகிறது. முக்கியமாக டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ் போன்ற பிரிமியம் ரக கார்களில் இந்த ஆப்ஷனை வழங்குகிறது. ஸ்மார்ட்ச் வாட்ச்கள் கனெக்டிவிட்டி இன்று ஆட்டோமொபைல் துறையில் பிரிமியம் ரக அம்சமாக இருந்தாலும் இது அத்தியாவசிய தேவையாக விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களில் தொழிற்நுட்பங்களை அதிகப்படுத்தி வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் ஸ்மார்ட் வாட்ச் கார்களை கண்ட்ரோல் செய்யும் மிக முக்கியமான ஒரு சாதனமாக இருக்கும். நீங்கள் எதிர்காலத்தில் வாகனம் வாங்கினால் இந்த வசதி இருக்கும் வாகனங்களை வாங்கினால் நீங்கள் தான் செம கெத்தான ஆளாக இருப்பீர்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 19, 2025, 11:50 [IST]
English summary
Control your car with a smartwatch here s what s possible in 2025
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X