6 மாசம் ஆச்சு வெறும் 4,000 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! எல்லாமே நல்லா இருந்தும் பெருசா விக்கல!

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா இவி கார் 4000 கார்களுக்கு மேல் விற்பனவையாகி புதிய சாதனை மைல் கல்லை எட்டிபிடித்துள்ளது. இந்த கார் அறிமுகமானது முதல் இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த கார் மீது மக்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் இந்த விற்பனை நிகழ்ந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா இவி கார் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி இந்தியா மார்கெட்டில் முதன் முறையாக அறிமுகமாகியுள்ளது. இந்த கார் அறிமுகமாகி 6 மாதங்கள் கிட்டத்தட்ட ஆகும் நிலையில் சுமார் 4000 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் நேரடியாக டாடா நெக்ஸான் மற்றும் எம்ஜி விண்ட்ஸர் இவி ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.

Creta EV

ஹூண்டாய் நிறுவனம் மிக வேகமாக இவியை நோக்கி நகர்ந்துவரும் நிலையில் இந்த காரின் விற்பனை மிக முக்கிய அசம்சமாக இருக்கிறது. இந்த காருக்கு போட்டியாக விற்பனையாகும் டாடா நெக்ஸான் மற்றும் விண்ட்ஸர் இவி ஆகிய கார்கள் மாதம் 3000-4000 கார்கள் விற்பனையாகி வருகின்றன. ஆனால் ஹூண்டயாய் கிரெட்டா இவி 6 மாதத்தில் 4000 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

எம்ஜி விண்ட்ஸர் இவி காரின் விலையை பொருத்தவரை ரூ9.99 லட்சம் என்ற விலையில் அதன் விற்பனை துவங்குகிறது. அதே போல நெக்ஸான் இவி காரும் ரூ12.5 லட்சம் முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. ஹூ்ண்டாய் கிரெட்டா இவி கார் ரூ17.99 லட்சம் முதல் ரூ24.37 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுசற்று அதிகமான விலை தான்.

Creta EV

இந்த அதிக விலை காரணமாக இதன் விற்பனை குறைவாக இருக்கிறது. அதிக விலை கொண்ட கார் செக்மெண்டிற்குள் இந்த கார் ஒரு பிரிமியம் காராக நுழைந்துவிட்டதால் இதன் விற்பனை எண்ணிக்கை குறைவாக உள்ளது. மற்றபடி இந்த காரின் விற்பனையின் எதிர்பார்ப்பும் இந்த அளவிற்கு தான் இருந்திருக்கும்.

ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் காரின் டிசைன் மொழி தற்போது உள்ள பெட்ரோல், டீசல் காரின் டிசைன் மொழியிலேயே இருக்கிறது. இதில் 42 கிலோ வாட் ஹவர் மற்றும் 51.4 கிலோ வாட் ஹவர் என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. இது முழு சார்ஜில் 390 கி.மீ முதல் 473 கி.மீ வரை ரேஞ்சை தரும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Creta EV

இந்த காரில் ஸ்மார்ட் பானரோமிக் சன்ரூஃப், 8 பிரீமியம் சவுண்ட் ஸ்பீக்கர்கள், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் ஸ்கிரின் டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், முன்பக்கம் வென்டிலேட் செய்யப்பட்ட சீட்டுகள், டிஜிட்டல் கீ, இன் கார் பேமெண்ட் சிஸ்டம், உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா இவி கார் மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் விலை இந்த காரின் விற்பனை எண்ணிக்கயை சற்று குறைந்துள்ளது. இதனால் விரைவில் இந்த காரின் குறைந்த விலை வேரியன்டையோ அல்லது குறைந்த விலையில் மற்றொரு புதிய காரையே அந்நிறுவனம் அறிமுகப்படுத்தினால் மார்கெட்டில் கடும் போட்டி உருவாகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 8, 2025, 17:03 [IST]
English summary
Creta ev sales cross 4000 units in india since launch
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X