ஒரு மாசத்துல இவ்வளவு லாரி, சரக்கு ஆட்டோ விக்குதா! போன மாச ரிப்போர்ட் இது!
இந்தியாவில் கமர்ஷியல் வாகன செக்மெண்ட் படிப்படியாக வளர்ந்து வருகிறது. இந்த செக்மெண்டில் பெரிய அளவில் விற்பனவை இருக்காது என நாம் பலர் நினைத்து வரும் நிலையில் தரவுகளை பார்த்தால் வியக்க வைக்கிறது ஒரே மாத்ததில் இத்தனை ஆயிரம் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையாகிறதா என் கேள்வி எழும் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த ஜூலை மாதம் கமர்ஷியல் வாகன பிரிவை பொருத்தவரை மொத்தம் 76,439 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2024 ஜூலை மாத விபரங்களை பொருத்தவரை 76261 வாகனங்கள் விற்பனையாகியிருந்ததது. இது வெறும் 0.23 சதவீத வளர்ச்சி தான். ஆனால் கடந்த ஜூன் மாதம் 73,367 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது கடந்த ஜூலை மாதம் 4.19 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

இதில் டாடா நிறுனவம்தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 25,244 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 27,617 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. 2373 வாகனங்கள் குறைவாக விற்பனையாகி 8.59 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.
அடுத்த இடத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 20442 வாகனங்களை கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம்19039 வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 1403 வாகனங்கள் அதிகம் விற்பனையாகி 7.37 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

அடுத்த இடத்தில் அசோக் லேலேண்ட் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 14174 வாகனங்களை கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 13979 வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 195 வாகனங்கள் அதிகம் விற்பனையாகி 1.39 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
அடுத்த இடத்தில் விஇசிவி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 7125 வாகனங்களை கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 6689 வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 436 வாகனங்கள் அதிகம் விற்பனையாகி 6.52 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

அடுத்த இடத்தில் மாருதி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 3589வாகனங்களை கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 3543 வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 46 வாகனங்கள் அதிகம் விற்பனையாகி 1.30 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
அடுத்த இடத்தில் ஃபோர்ஸ் மோட்டார் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 1950 வாகனங்களை கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 1901 வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 49 வாகனங்கள் அதிகம் விற்பனையாகி 2.58 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

அடுத்த இடத்தில் இசூஸூ நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 1568 வாகனங்களை கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 1431 வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 137 வாகனங்கள் அதிகம் விற்பனையாகி 9.57 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
அடுத்த இடத்தில் டைம்லர் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 1436 வாகனங்களை கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 1581 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 14 வாகனங்கள் குறைவாக விற்பனையாகி 9.17 சதவீத வீழ்ச்சியை பெற்றுள்ளது.
மற்ற நிறுவனங்கள் இணைந்து 911 வாகனங்களை கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 481 வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 430 வாகனங்கள் அதிகம் விற்பனையாகி 89.40 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஒட்டு மொத்த விற்பனை பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்றாலும் மொத்தம் உள்ள பட்டியலில் பெரும்பாலான நிறுவனங்கள் வளர்ச்சியை சந்தித்துள்ளன. தொடர்ந்து பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் இதன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









