பாக்குற எத்தனை பேரு ஏமாந்து போக போறாங்களோ!.. இந்த கார் வெளிநாட்டுல தயாரிச்சது இல்ல..

உலக புகழ்பெற்ற வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் டிசி (DC2). திலிப் சப்பாரியா (Dilip Chhabria) என்கிற பெயரிலும் இந்த நிறுவனம் நாட்டில் அறியப்படுகின்றது. கார்களின் உருவத்தை மாற்றுவதில் கை தேர்ந்த நிறுவனமாக இது செயல்பட்டு வருகின்றது. ஓர் சாதாரண காரைகூட மிகுந்த ஆடம்பர காராக இந்த நிறுவனம் மாற்றி தரும். அதுமட்டுமல்ல எந்த மாதிரியான வாகனத்தையும் நாம் விரும்பும் ஸ்டைல் மற்றும் தோற்றத்திலும் அவர்கள் மாற்றி தருவார்கள்.

இத்தகைய நிறுவனமே தற்போது இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலை யாராலும் அடையாளம் காண முடியாத அளவிற்கு மாற்றி வைத்திருக்கின்றது. இந்த நிறுவனம் நடப்பாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025இல் மஹிந்திரா தார் கார் மாடலை மாடிஃபை செய்து (Mercury eTanq) எனும் வாகனத்தை உருவாக்கி இருந்தது.

dc2 mercury tanq

இந்த வாகனமே தற்போது பதிவெண்ணுடன் சாலையில் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. ஆமாங்க, படத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த கார் மாடல் மஹிந்திரா தார் காரை மாடிஃபைச் செய்து உருவாக்கப்பட்ட ஓர் காராகும். கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம்ப முடியாத ஓர் ஸ்டைலில் அது உள்ளது.

இத்தகைய மாடிஃபிகேஷனுக்கு பெயர்போனவர்களே டிசி2. உரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் இந்த கார் டிசி 2 மெர்குரி டேங்க் என்கிற பெயரிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியபோதே இந்த வாகனம் பலரின் கவனத்தை ஈர்க்க தொடங்கிவிட்டது.

இந்த நிலையிலேயே அக்காரை மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் அக்காரை வாங்கி இருப்பது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் சாலையில் பதிவெண்ணுடன் அந்த கார் செல்லும் காட்சிகள் கார் காதலர்கள் மத்தியில் தீயாய் பரவிக் கொண்டிருக்கின்றது.

ஓர் பிரமாண்ட உருவம் கொண்ட எஸ்யூவி காரை டிசி2, உயரம் குறைவான சூப்பர் கார் மாடலை போல மாற்றியிருக்கின்றது. இதற்காக தார் காரின் பாடி பேனல் மற்றும் பக்கவாட்டு சேஸிஸ் என பல முழுமையாக அகற்றப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமல்ல புதிதாக சில அம்சங்களையும் அவர்கள் சேர்த்திருக்கின்றார்கள்.

வரிசையாக அடுக்கி வைத்த செவ்வக பெட்டி போன்ற டெயில் லைட், கொழுத்த உருவம் கொண்டி டயர்கள், தனித்துவமான அலாய் வீல்கள், இரண்டு டோர்கள் உள்ளிட்டவற்றை டிசி2 மெர்குரி டேங்க் தாங்கியிருப்பதை நம்மால் காண முடிகின்றது. தொடர்ந்து, காரின் முன் பக்கத்தைக் காட்டிலும் பின் பக்கம் மிகுந்த அழகானதாகக் காட்சியளிக்கின்றது.

இதற்கு தனித்துவமான உருவ அமைப்பைக் கொண்ட அந்த டெயில் லைட்டே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதேபோல், பக்கவாட்டு பகுதியும் அதிக கவர்ச்சியானதாகவேக் காட்சியளிக்கின்றது. இப்போது சாலையில் காட்சி தந்திருக்கும் இந்த வாகனம் பார்க்க மின்சார வாகனத்தைப் போல தெரியலாம், ஆனால், அது ஐசிஇ எஞ்சின் கொண்ட வாகனம் ஆகும்.

அதாவது, மஹிந்திரா தார் காரில் வழங்கப்படும் அதே எஞ்சின் அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதேநேரத்தில், டிசி2 இந்த வாகனத்தில் எலெக்ட்ரிக் ஆப்ஷனையும் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. 180 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷனுடனேயே டிசி2 மெர்குரி டேங்க் இவி மாடலில் வழங்கப்பட இருக்கின்றது.

டூயல் மோட்டார் செட்-அப், அட்வான்ஸ்டு தொழில்நுட்ப அம்சங்கள் என ஏகப்பட்ட தனிச் சிறப்புகளுடன் அதனை விற்பனைக்கு வழங்கவே டிசி2 திட்டமிட்டு இருக்கின்றது. ரூ. 50 லட்சம் என்கிற அதிகபட்ச விலையிலேயே இந்த கார் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பார்க்க துளியளவும் மஹிந்திரா தார் காரை போல இது தெரியாத காரணத்தினால், பலர் இது ஏதே புதுமுக பிராண்டின் கார் என நினைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக வேற்று கிரக ஜீவராசிகளின் வாகனத்தைப் போலவும், வெளிநாட்டு தயாரிப்பைப் போலவும் அது காட்சியளிக்கின்றது. மஹிந்திர தார் காருக்கு நல்ல டிமாண்ட் நாட்டில் நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த வாகனத்திற்கு அது கிடைக்குமா என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 16, 2025, 9:59 [IST]
English summary
Dc2 mercury tang is spotted on road with madhya pradesh registration plate
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+