இது என்ன நவீன கால குப்பை லாரியா... கொஞ்ச நாள் போச்சுனா எங்க பார்த்தாலும் இருக்க போகுது!!

ஸ்விட்ச் மொபிலிட்டி (Switch Mobility) நிறுவனம் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சியில் அதன் ஐ.இ.வி8 (IeV8) என்கிற பெயரிலான புதிய எடை குறைவான எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனத்தை வெளியீடு செய்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம், வாங்க.

பிரபலமான ஹிந்துஜா க்ரூப் (Hinduja Group)-இன் கனரக வாகன உற்பத்தி நிறுவனமாக ஸ்விட்ச் மொபிலிட்டி விளங்குகிறது. பல்வேறு விதமான கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்யும் ஸ்விட்ச் நிறுவனத்தில் இருந்து ஐஇவி8 என்கிற எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் அதிக எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்ல முடியாது என்றாலும், 7.2 டன்கள் வரையிலான எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்லலாம்.

switch mobility unveils iev8

அதிகப்படியான பெர்ஃபார்மன்ஸ், ஆயுட்காலம் மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய வாகனமாக ஐஇவி8 -ஐ உருவாக்கி உள்ளதாக கூறும் ஸ்விட்ச் நிறுவனம், இந்த வாகனத்தில் கட்டிங்-எட்ஜ் தரத்தில் அட்வான்ஸான லித்தியம் இரும்பு பேட்டரியை வழங்கியுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 250கிமீ தொலைவிற்கு சிங்கிள்-சார்ஜில் பயணிக்கலாம் என ஸ்விட்ச் மொபிலிட்டி தெரிவித்துள்ளது.

ஸ்விட்ச் ஐஇவி8 எலக்ட்ரிக் வாகனத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பின்பக்கத்தில் பொருட்களை கொண்டு செல்லும் பகுதியை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். இந்த பகுதியை அதிகப்பட்சமாக 830 கன அடி அளவுக்கு பெரியதாக்கிக் கொள்ளலாம். இதன் மூலமாக எந்தவொரு பகுதிக்கும் கொண்டு செல்லக்கூடிய சரக்கு வாகனமாக ஸ்விட்ச் ஐஇவி8 -ஐ பயன்படுத்தலாம்.

இதற்கேற்ப வேகமாக சார்ஜ் ஆகும் திறனும் இந்த எலக்ட்ரிக் வாகனத்திற்கு உள்ளது. இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் டாப்-ஸ்பீடு 80kmph ஆகும். மேலும், இந்த வாகனத்தில் எலக்ட்ரோ-ஹைட்ராலிக் பவர் ஸ்டேரிங், ஏசி கேபின், மடக்கக்கூடிய இருக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதில், ஸ்டேரிங் சக்கரத்தை தேவைக்கேற்ப மடக்கிக் கொள்ளலாம்.

switch mobility unveils iev8

ஸ்விட்ச் ஐயன் (iON) மூலமாக இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் பழுதுகளை உடனுக்குடன் அறிய முடியும். மேலும், போக்குவரத்து நெரிசலில் மற்றும் டெலிவிரி சேவைகளில் செயல்படுவதற்கு உதவக்கூடியதாக உள்ள ஸ்விட்ச் ஐயன் மூலமாக 50க்கும் அதிகமான அட்வான்ஸ்டு வசதிகளை பெறலாம். ஐஇவி8 எலக்ட்ரிக் வாகனத்தின் அறிமுகம் குறித்து ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைவர் தீராஜ் ஹிந்துஜா கூறுகையில், "ஸ்விட்ச் ஐஇவி8 வாகனத்தின் வெளியீடு ஆனது தூய்மையான போக்குவரத்து தீர்வுகளுக்கு எங்களது நிலையான ஈடுப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இந்த வாகனம் ஆனது நவீன தளவாடங்களின் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல், பசுமையான போக்குவரத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். புதுமையான மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள தீர்வுகளை வழங்கும் எங்களது தொலைநோக்கு பார்வையை உள்ளடக்கியது. ஐஇவி8, எலக்ட்ரிக் துறையில் புதுமை மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் தனது நிலையை ஸ்விட்ச் மொபிலிட்டி மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் ஐஇவி8 எலக்ட்ரிக் வாகனம் ஆனது இந்தியாவின் பசுமையான போக்குவரத்துக்கு பெரிதும் பங்களிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. லாஸ்ட்-மைல் டெலிவிரி பணிகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், ஸ்விட்ச் மொபிலிட்டியின் புதிய ஐஇவி8 எலக்ட்ரிக் வாகனத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றே கூற வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2025, 14:19 [IST]
English summary
Delhi auto expo 2025 switch mobility unveils iev8 electric commercial vehicle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+