பெட்ரோல், டீசல்ல ஓட்ற அத்தன வண்டிகளையும் தடை பண்ண போறாங்களா! பண மதிப்பிழப்பு மாரி திடீர் அறிவிப்பு வர போகுது?
உலகின் பல்வேறு நாடுகளிலும், குறிப்பாக இந்தியா உள்பட ஆசிய கண்டத்தை சேர்ந்த நாடுகளில், காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதற்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்கள்தான் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட பகுதிகளின் அரசுகள் எடுத்து வருகின்றன. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பானவையாக கருதப்படுவதுதான் இதற்கு காரணம்.
இந்தியாவின் மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்றுதான் விரும்புகின்றன. இதன் மூலம் மோசடைந்து கொண்டுள்ள காற்றின் தரத்தை மேம்படுத்த முடியும் என மத்திய அரசும், மாநில அரசுகளும் கருதுகின்றன.

இந்த சூழலில் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லியில் (Delhi) தீவிரமான நடவடிக்கை ஒன்றை எடுக்க முடிவு செய்திருப்பதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்க பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
அதாவது 15 ஆண்டுகள் ஆன பெட்ரோல் வாகனங்களையும், 10 ஆண்டுகள் ஆன டீசல் வாகனங்களையும் டெல்லியில் இயக்க முடியாது. அத்துடன் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் எனப்படும் ஏக்யூஐ (Air Quality Index - AQI) மோசமடையும் சமயங்களில் எல்லாம், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை இயக்குவதற்கு இன்னும் பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்படும்.

இந்த வரிசையில் அடுத்தகட்டமாக டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை முற்றிலுமாக தடை செய்வது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அமலுக்கு வந்தால், டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்கள், சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்.
புதிய பெட்ரோல், டீசல் வாகனங்கள் பதிவு செய்யப்படாது. டூவீலர், கார் மற்றும் வர்த்தக வாகனங்கள் என அனைத்து வகையான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கும் முழுமையாக தடை விதிப்பது குறித்து டெல்லி அரசு தற்போது ஆலோசனை செய்து வருகிறது. ஆனால் தற்போதைய நிலையில் இந்த விஷயம் ஆலோசனை அளவில் மட்டுமே உள்ளது.
இந்த உத்தரவு எப்போது அமலுக்கு வரும்? என்பது குறித்து அதிகாரப்பூர்வமான உத்தரவுகள் எதுவும் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முற்றிலுமாக தடை என்பது உண்மையிலேயே மிகவும் பெரிய அளவிலான நடவடிக்கையாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
எனவே டெல்லி அரசு உடனடியாக இந்த உத்தரவை பிறப்பிக்கும் என நாங்கள் கருதவில்லை. இருப்பினும் வரும் ஆண்டுகளில் இந்த உத்தரவு அங்கு பிறப்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஒருவேளை இந்த உத்தரவு அமலுக்கு வந்தால், அனைத்து வகையான புதிய பெட்ரோல், டீசல் வாகனங்களை பதிவு செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டு விடும்.
அப்படியானால் ஏற்கனவே சாலையில் ஓடி கொண்டுள்ள பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மட்டுமே அங்கு பயன்பாட்டில் இருக்கும். அவை நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட 15 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் விதிமுறையால் படிப்படியாக பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டு விடும். இதன் மூலம் டெல்லியில் காற்றின் தரம் மேம்படும் என அரசு கருதுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், காற்று மாசுபாடு பிரச்னைக்கு முடிவு கட்டுவோம் என பாஜக (BJP) வாக்குறுதி அளித்திருந்தது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அங்கு பாஜக வெற்றி பெற்றதையடுத்து, காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக டெல்லியில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








