ஐபிஎல் முடியுறதுக்குள்ள தோனியை வளைச்சு போட்ட டிராக்டர் கம்பெனி! முகத்தை காட்டினாலே கோடி கோடியாய் கிடைக்கும்!

எம்.எஸ் தோனி (MS Dhoni), இந்த பெயருக்கு அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். அதிலிலும் தற்போது ஐபிஎல் (IPL) நடைபெற்று வருவதால், திரும்பும் பக்கம் எல்லாம் தோனி பெயர் தான் கேட்கிறது. அந்த அளவிற்கு, சர்வதேச கிரிக்கெட் (Cricket)-இல் இருந்து ஓய்வு பெற்று பல வருடங்களாகி விட்ட போதிலும், மகேந்திர சிங் தோனியின் பெயர் இப்போதும் மைதானங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஐபிஎல் மூலம் கிடைக்கும் வருவாய் உடன் சேர்த்து மற்றொரு வழியிலும் தோனிக்கு வருவாய் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட்டில் முழு மூச்சாக இருந்த காலக்கட்டத்திலேயே தனது பிரபலத்தை பயன்படுத்தி வேறு வழிகளிலும் பணத்தை ஈட்டியதை பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதாவது, தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிப்பது, நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறியதன் மூலம் தோனி கூடுதல் வருவாயை ஈட்டினார்.

dhoni joined with swaraj tractors

இன்னும் சொல்லப்போனால், கிரிக்கெட்டுக்கு இணையாக இந்த வழிகளில் தோனிக்கு அதிக வருவாய் கிடைத்தது. கடந்த 2024ஆம் ஆண்டின் மத்தியில் கூட, பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோன் (Citroen)-இன் இந்தியாவிற்கான பிராண்ட் அம்பாசடார் (Brand Ambassador) ஆக எம்.எஸ் தோனி நியமிக்கப்பட்டதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இந்த நிலையில், தற்போது ஸ்வராஜ் டிராக்டர்ஸ் (Swaraj Tractors) நிறுவனத்தின் பிராண்ட் தூதராகவும் எம்.எஸ் தோனி நியமிக்கப்பட்டு உள்ளார். இந்தியாவின் முன்னணி டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஸ்வராஜ் டிராக்டர்ஸ் ஆனது மஹிந்திரா க்ரூப் (Mahidra Group)-இன் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகிறது.

dhoni joined with swaraj tractors

இத்தகைய டிராக்டர் உற்பத்தி நிறுவனம் கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனியை பிராண்ட் அம்பாசடாராக பார்ப்பது மட்டுமின்றி, தோனியை தங்களது நிறுவனத்தின் வாடிக்கையாளராகவும், எல்லாத்தையும் விட முக்கியமாக விவசாயியாகவும் பார்க்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ஸ்வராஜ் டிராக்டர்ஸ் நிறுவனத்துடன் எம்.எஸ் தோனி நெருங்கிய பிணைப்பில் இருந்து வருகிறார்.

தோனியின் அன்றாட வாழ்வியலும், விவசாய பணிகள் தொடர்பான தேவைகளும் ஸ்வராஜ் டிராக்டர்ஸ் நிறுவனத்துடன் அவரை கடந்த 2 வருடங்களில் பல விதங்களில் நெருக்கமுற செய்துள்ளன. அதன் மூலமாக ஏற்பட்டுள்ள இந்த கூட்டணியின் மூலம் எம்.எஸ் தோனியின் முகத்தை பார்த்து பல விவசாயிகள் மற்றும் இளம் தலைமுறையினர் தங்களது கஸ்டமர்களாக மாறுவர் என ஸ்வராஜ் டிராக்டர்ஸ் நம்புகிறது.

dhoni joined with swaraj tractors

எம்.எஸ் தோனி உடனான கூட்டணியினால், இனி வரும் காலங்களில் ஸ்வராஜ் டிராக்டர்களை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் தோனியின் பங்களிப்பும் இருக்கும். மேலும், தோனியை மையப்படுத்தி விவசாயிகள் சார்ந்த சலுகைகளும் ஸ்வராஜ் டிராக்டர்ஸ் நிறுவனத்தில் இருந்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாவற்றிலும் தோனியின் பரிந்துரைப்புகளும் நிச்சயம் இருக்கும்.

ஸ்வராஜ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் கிட்டத்தட்ட சுமார் 40 விதமான டிராக்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அளவிற்கு பிரம்மாண்ட டிராக்டர் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் ஸ்வராஜ் டிராக்டர்ஸின் சிஇஓ ககன்ஜோத் சிங் கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி உடனான கூட்டணி குறித்து கூறுகையில், "வேளாண் கண்டுப்பிடிப்புகளை முன்னெடுத்து செல்லும் ஸ்வராஜின் நோக்கத்துடன் ஆழமாக ஒத்துப் போகும் எம்.எஸ் தோனி உடனான எங்கள் கூட்டணியை தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

dhoni joined with swaraj tractors

தோனியின் இந்த ஆதரவு ஆனது விவசாயிகளை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது மற்றும் அடுத்த தலைமுறையினர் மேம்பட்ட இயந்திரமயமாக்கல் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது" என்றார். ஸ்வராஜ் உடனான கூட்டணி குறித்து தோனி கூறுகையில், "விவசாயம் என்பது எனக்கு வெறும் ஆர்வம் மட்டுமல்ல - அது ஒரு வாழ்க்கை முறை. ஸ்வராஜ் எனது விவசாய பயணத்தில் நம்பகமான துணையாக இருந்து, சவால்களை நம்பிக்கையுடன் சமாளிக்க எனக்கு உதவினர்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரிக்கெட்டை விட்டு கிட்டத்தட்ட முழுவதுமாக பிரிந்துவிட்ட போதிலும் எம்.எஸ் தோனி உடன் கூட்டணியில் இருக்கும் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த வருடங்களில் பலமுறை தோனி ஸ்வராஜ் நிறுவனத்தின் டிராக்டர்களை ஓட்டும்போது காட்சி தந்துள்ளார். இருப்பினும், ஸ்வராஜ் டிராக்டர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 8, 2025, 23:59 [IST]
English summary
Dhoni joined with swaraj tractors a leading tractor manufacturer in india
மேலும்... #tractor #dhoni #brand ambassador #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X