கையில காசு இருந்தா இதுல ஒரு காரை இப்பவே வாங்கி போடுங்க! இதெல்லாம் ரேர் பீஸ் சார்!
இந்தியாவின் மாறும் வாகனச் சூழலில், டீசல் எஸ்யூவிகள் இன்னும் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவு விரும்பும் காராக இருக்கிறது. அவற்றின் அதிகமான மைலேஜ் மற்றும் வலுவான டார்க் ஆகியவை வாடிக்கையாளர்களை இன்னும் அதிகம் ஈர்க்கிறது. குறிப்பாக ஆட்டோமேட்டிக் கியர் வசதியைத் தேடுபவர்களுக்கு இந்த பிரிவில் ஆப்ஷன்கள் குறைந்து வருகின்றன. இருந்தாலும், 25 லட்சம் ரூபாய் ரேஞ்சிற்குள் டீசல் ஆட்டோமேட்டிக் எஸ்யூவிகளின் மாறுபட்ட தேர்வாக உள்ளது. இந்த ரேஞ்சில், தொடர்ச்சியான லேடர்-ஃப்ரேம் மற்றும் சிட்டிபயன்பாட்டிற்கு மோனோகோக் சேஸிஸ் வடிவமைப்புகளை கொண்டுள்ளது. காம்பேக்ட் மற்றும் மிட் சைஸ் அளவிலான கார்களுக்கு ஏற்றது.
ஆப்ஷன்களில் முதலாவதாக, இந்தியாவில் அதிக அளவில் பொருளாதார ரீதியாக வாங்ககூடிய டீசல்-ஆட்டோமேட்டிக் எஸ்யூவியாக டாடா நெக்ஸான் கார் திகழ்கிறது, விலை ரூ.11.70 லட்சம் முதல் ரூ.15.60 லட்சம் வரை உள்ளது. இது மிட்-ஸ்பெக் பியூர்+ டிரிம் முதல் தொடங்கி 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 115hp, 1.5-லிட்டர் டீசல் இன்ஜினை கொண்டுள்ளது

அதன் டாப் வேரியன்ட்களில் பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் ஒரு பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிறா்டம் இருக்கிறது, அதேசமயத்தில் 24.08kpl என்ற மைலேஜை தரும் வகையில் இந்த கார் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நெக்ஸான் டீசல்-ஏஎம்டி காரை பொருத்தவரை தனித்துவமான அழகியலைத் தேடுபவர்களுக்கு டார்க் எடிஷனையும் வழங்குகிறது.
விலை ரேஞ்சில் சற்று அதிகமாக செல்லும், ரூ.11.79 லட்சம் முதல் ரூ.14.49 லட்சம் வரை விலை கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO, ஒரு கவர்ச்சிகரமான தேர்வாகத் இருக்கிறது. அதன் 117hp பவர், 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் மிட்-ஸ்பெக் MX3 வேரியன்டில் முதல் 6-ஸ்பீட் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

டாப்-ஸ்பெக் AX7L வேரியண்ட் இந்த டீசல்-ஏஎம்டி கட்டமைப்பில் கிடைக்காவிட்டாலும், வாகனம் 21.2kpl என சற்று குறைந்த மைலேஜை கொண்டிருந்தாலும், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல் ஸோன் ஏசி உள்ளிட்ட அம்சங்களை வழங்குகிறது.
கியா சோனெட், அதன் 116hp பவர், 1.5-லிட்டர் டீசல் என்ஜினை 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைத்து,கிளீனான டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது. மேல் HTX மற்றும் GTX+ வேரியன்ட்களில் கிடைக்கும்.
சோனெட் அதன் தொடக்க விலை நிர்ணயத்துடன் ஒரு பிரீமியத்தை கொடுக்கிறது, ஆனால் சொகுசு அம்சங்கள் மற்றும் 18.6kpl என்ற மைலேஜ் மூலம் ஈடுசெய்கிறது. அதில் ஆட்டோமேட்டிக் கியர் அதை ஏஎம்டி-பொருத்தப்பட்ட போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.

பவர் மற்றும் சொகுசை முன்னுரிமைப்படுத்துபவர்களுக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஒரு வலுவான போட்டியாளராக இருக்கிற. அதில் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் 185hp பவர் மற்றும் 420Nm டார்க் திறனை உருவாக்குகிறது, 25 லட்சம் ரூபாய் ரேஞ்சிற்குள் அதன் வகையிலேயே மிகவும் சக்திவாய்ந்தாகும்.
AX3 வேரியன்டிற்கு மேல், கருப்பு தீம் கொண்ட எபோனி எடிஷனை கொண்டுள்ளது, இது 16.57kpl மைலேஜ் திறனுடன் செயல்திறன் மற்றும் சௌகரியத்தின் கலவையை வாக்குறுதி அளிக்கிறது. டாப்-ஸ்பெக் AX7L வேரியன்ட்களில் ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்தை தேர்ந்தெடுப்பது அதன் ஈர்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
டாடா ஹாரியர் மற்றும் அதன் 7-சீட்டர் எதிர்பார்க்கும் டாடா சஃபாரி இரண்டும் ஃபியட்-மூலம் பெறப்பட்ட 2.0-லிட்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகின்றன, இது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு 170hp மற்றும் 350Nm ஐ வழங்குகிறது.
ரூ.19.35 லட்சம் முதல் தொடங்கும் ஹாரியர் கார் மற்றும் ரூ.19.85 லட்சம் முதல் தொடங்குகிறது சஃபாரி காரில் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், டூயல்-ஸோன் ஏசி மற்றும் ஏடிஏஎஸ் சூட் போன்ற அம்சங்களுடன் ஒரு பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. இந்த கார் முறையே 16.8kpl மற்றும் 14.1kpl மைலேஜ் திறனைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இரு மாடல்களும் ஒரு சிறப்பு டார்க் எடிஷன் லைன்அப்பில் கிடைக்கின்றன.
தனித்துவமான கார்களில், ஹூண்டாய் அல்கஸா கிரெட்டா மற்றும் சோனெட்டின் அதே 1.5-லிட்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது. ஆனால் அதன் 18.1kpl மைலேஜ் மற்றும் சொகுசு அம்சங்களால் இது வேறுபடுகிறது. டாப்-எண்ட் பிளாட்டினம் மற்றும் சிக்கரெட் வேரியன்ட்களில் கிடைக்கும்.
இது 6- மற்றும் 7-சீட்டர் கட்டமைப்புகளை, விங்ஸ் கொண்ட ஹெட்ரூம்கள் மற்றும் இரண்டாம் வரிசையில் வென்டிலேட்டட் சீட் போன்ற சிறப்பு வசதிகளை வழங்குகிறது. மேலும் மடிப்பு மேஜைகள் மற்றும் பாஸ் மோட் செயல்பாடு போன்ற புதிய வசதிகளை வழங்குகிறது. இருப்பினும், அதன் பெட்ரோல் வேரியன்ட்களில் கிடைக்கும் பனோரமிக் சன்ரூஃப் இதில் இல்லை.
டீசல் இன்ஜின் கார்கள் இன்று விற்பனையில் வெகுவாக குறைந்துவிட்டன. ஒரு காலத்தில் டீசல் இன்ஜின் கார்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருந்தது. தற்போது மாசுகட்டுப்பாடு மற்றும் அரசின் பல்வேறு விதிகள் காரணமாக வாகன தயாரிப்பு நிறுவனங்களே டீசல் இன்ஜின் தயாரிப்பை பலர் கைவிட்டுவிட்டனர். ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே தற்போது டீசல் இன்ஜின்களை தயாரித்து வருகின்றனர்.
டீசல் இன்ஜின் வந்தாலும் அதில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் என்பது மிகவும் அரிய விஷயமாக இருக்கும். ஒரு காலத்தில் இந்த கம்பினேஷன் காஸ்ட்லியான கார்களில் மட்டுமே இருந்தது. ஆனால் இன்று ரூ25 லட்சத்திற்கும் குறைவான விலையில் இத்தனை ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் மார்கெட் மக்கள் தேவையை எந்தெந்த வழிகளில் எல்லாம் பூர்த்தி செய்ய முயற்சி செய்து வருகின்றன என்பது தெரிகிறது.
ஆனால் எதிர்காலத்தில் இந்த கார்கள் எல்லாம் தொடர்ந்து விற்பனையில் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாசு கட்டுப்பாட்டிற்காக அரசு தொடர்ந்து இன்ஜின் மாசு வெளியேற்ற கட்டுப்பாட்டு விதிகளை மாற்றியமைக்க கூடும். அப்படி பார்த்தால் அந்த கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாகும் போது இந்த இன்ஜின் தயாரிப்புகள் கைவிடப்பட வாய்ப்புள்ளது. இதனால் இந்த கார்களை வாங்க நினைத்தால் இந்த காலகட்டத்திலேயே வாங்கி வைத்துக்கொள்வது தான் உங்களுக்க நல்லது. விரைவில் இந்த கார்கள் எல்லாம் விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
டிரைவ்ஸ்பா்க் கருத்து: இந்திய சந்தை 25 லட்சம் ரூபாய் ரேஞ்சுக்குள் டீசல் ஆட்டோமேட்டிக் எஸ்யூவிகளின் மாறுபட்ட லைன்அப்களை வழங்குகிறது. ஒவ்வொன்றும் தனித்துவமான விலை புள்ளிகளைக் கொண்டுள்ளது. பொருளாதாரமான டாடா நெக்ஸான் முதல் சொகுசான மஹிந்திரா எக்ஸ்யூவி700 வரை. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பங்களுக்கு மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பவர், சொகுசு மற்றும் திறன் சமநிலையை கொண்டு பலவிதமான தேர்வுகளைக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications









