கோடி ரூபா கொடுத்து வாங்கும் கார்களை கூட நம்ப முடியல! அவ்வளவு பெரிய கார் கம்பெனி இதை கூட கவனிக்கலயா?

மெர்சிடிஸ் (Mercedes) உலகளவில் பிரபலமான சொகுசு கார் நிறுவனம். இந்தியாவிலும் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் நம்பர் ஒன் நிறுவனமாக விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணம், அவ்வப்போது புது, புது லக்சரி கார்களை மெர்சிடிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வது ஆகும். இந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ-கிளாஸ் (Mercedes-AMG E-Class) அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது இந்த ஏஎம்ஜி கார் இந்தியாவில் விற்பனையில் இல்லை. ஏற்கனவே விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.

இந்த நிலையில், விற்பனை செய்யப்பட்ட மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ-கிளாஸ் காரில் சில பிரச்சனைகள் இருப்பதை தற்போது மெர்சிடிஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது. அதனை தொடர்ந்து, மெர்சிடிஸ் நிறுவனம் கையில் எடுத்துள்ள நடவடிக்கையை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுபவை அனைத்தும் விலைமிக்க கார்கள் தான்.

discontinued mercedes-amg e-class cars recalled

இருப்பினும், அவற்றை 3 விதமாக மெர்சிடிஸ் நிறுவனம் வகைப்படுத்துகிறது. மெர்சிடிஸ்-பென்ஸ், ஏஎம்ஜி மற்றும் மேபக் (Maybach) என்பன அவை மூன்று ஆகும். இதில், மேபக் ஆனது மிகவும் விலையுயர்ந்த கார்களை கொண்டுள்ளது. அந்த அளவிற்கு, மெர்சிடிஸ்-மேபக் கார்கள் அல்ட்ரா-லக்சரியாக உருவாக்கப் படுகின்றன. அதேநேரம், மெர்சிடிஸ்-பென்ஸில் உருவாக்கப்படும் கார்கள் அதன்பின் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி வெர்சனிலும் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

அவ்வாறு, 2021ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து ஜூலையில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ-கிளாஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இ53 4மேட்டிக்+ (E53 4Matic+) மற்றும் இ63 எஸ் (E63 S) என 2 விதமான வேரியண்ட்களில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ-கிளாஸ் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

discontinued mercedes-amg e-class cars recalled

ஆனால், தற்போது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ-கிளாஸ் கார்கள் விற்பனையில் இல்லை. இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 3.5 வருடங்களுக்கு பிறகு இந்த ஏஎம்ஜி காரில் ஒரு பிரச்சனை இருப்பதை தற்போது மெர்சிடிஸ் உறுதி செய்துள்ளது. அதாவது, காரை தொழிற்சாலையில் உற்பத்தி செய்த போதே அந்த பிரச்சனை உடன் மெர்சிடிஸ் நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.

அதனை தற்போது அடையாளம் கண்டுள்ள மெர்சிடிஸ் நிறுவனம், அதனை சரிச்செய்து கொடுக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக, விற்பனை செய்யப்பட்ட மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ-கிளாஸ் கார்களை திரும்ப சர்வீஸ் செண்டருக்கு கொண்டுவரும்படி மெர்சிடிஸ் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ-கிளாஸ் கார்களும் திரும்ப அழைக்கப்படுகின்றன.

discontinued mercedes-amg e-class cars recalled

2021ஆம் ஆண்டு ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் இ53 4மேட்டிக்+ வேரியண்ட்டை 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே இந்தியாவில் உற்பத்தி செய்ய மெர்சிடிஸ் நிறுவனம் ஆரம்பித்துவிட்டது. அதன்படி, 2021ஆம் ஆண்டின் ஜனவரி 21ஆம் தேதியில் இருந்து 2023 ஜனவரி 20ஆம் தேதி வரையில் இந்த 2 வருட காலக்கட்டத்தில் ஏஎம்ஜி இ-கிளாஸின் 20 இ53 4மேட்டிக்+ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

அதேபோல், 2022ஆம் ஆண்டின் செப்டம்பர் 14ஆம் தேதியில் இருந்து 2023 அக்டோபர் 12 வரையில் இந்த காரின் இ63 எஸ் வேரியண்ட்டின் 50 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆக மொத்தம், இந்த காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட 70 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன.

discontinued mercedes-amg e-class cars recalled

காரின் டிரான்ஸ்மிஷன் வயரிங்காக வழங்கப்பட்ட எலக்ட்ரிக்கல் கனெக்டர் கப்லிங் போதுமான மின்சாரத்தை ஏற்கக்கூடியதாக இல்லாததை கண்டறிந்ததை அடுத்து இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் மெர்சிடிஸ் நிறுவனம் இறங்கி உள்ளது. இந்த பிரச்சனை உள்ள கார்களில் மின்கசிவால் தீ விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரச்சனையை கருத்தில் கொண்டே கார்களை சர்வீஸ் செண்டருக்கு அழைத்து இலவசமாக பிரச்சனையை சரிச்செய்து கொடுக்க மெர்சிடிஸ் முடிவெடுத்துள்ளது. ஆனால், ஏற்கனவே வருடக்கணக்கில் இந்த காரை பயன்படுத்தி வருபவர்கள் இதனால் ஏற்கனவே பிரச்சனையை எதிர்கொண்டு இருந்தால், அதனை மெர்சிடிஸ் நிறுவனம் எவ்வாறு கையாளும் என்பதை அறிய அருகில் உள்ள மெர்சிடிஸ் டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 27, 2025, 23:27 [IST]
English summary
Discontinued mercedes amg e class cars recalled in india
மேலும்... #mercedes benz #amg #car recall #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X