இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டொயோட்டா அர்பன் க்ரூஸர் இ-காரா இது! உள் பக்கம் எப்படி இருக்கு? வீடியோ வெளியானது!..

டொயோட்டா (Toyota) நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலை வெகுவிரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் இவி (Toyota Urban Cruiser EV) என்கிற பெயரிலேயே இந்த மின்சார கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்த பிரிவை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor), இந்த இரண்டு நிறுவனங்களே ஆட்சிச் செய்துக் கொண்டிருக்கின்றன.

இவர்கள் இருவருக்கும் டொயோட்டா நிறுவனம் தயாரித்திருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடல் மிகப் பெரிய அளவில் சவால் விடக் கூடியதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இதற்கேற்ப, கவர்ச்சியான தோற்றம், அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பிரீமியம் அம்சங்களை மிக அதிக அளவில் தாங்கியதாகவே டொயோட்டா எலெக்ட்ரிக் கார் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Inside look at toyota s urban cruiser ev

இந்த மாதிரியான சூழலிலேயே டொயோட்டா நிறுவனத்தின் அந்த எலெக்ட்ரிக் கார் மாடலின் உள் மற்றும் வெளிப்பக்கத்தை தெள்ளத் தெளிவாகக் காண்பிக்கக் கூடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இதுபற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

வீடியோவில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் டொயோட்டா அர்பன் க்ரூஸர் இவி காரின் சிறப்புகளை எடுத்துரைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதை வைத்து இது வெளிநாட்டுக்காக வெளிநாடுகளில் வைத்து தயாரிக்கப்பட்ட கார் என நினைத்துவிட வேண்டாம். இந்த கார் மாடலை டொயோட்டா நிறுவனம் சுஸுகிக்கு சொந்தமான குஜராத் ஆலையில் வைத்தே தயாரித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா மற்றும் சுஸுகி இவர்கள் இருவரின் கூட்டணியிலேயே அர்பன் க்ரூஸர் இவி தயாரிக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கூட்டணியின் அடிப்படையிலேயே இந்த காரின் உற்பத்தி பணிகளும் இந்தியாவில் உள்ள சுஸுகி கார் உற்பத்தி ஆலையில் வைத்து தயாரிக்கப்படுகின்றன. முற்றிலும் தனித்துவமான ஸ்டைலிலேயே இந்த காரை டொயோட்டாவும், சுஸுகியும் தயார் செய்திருக்கின்றது.

இதற்கு சான்றாக அதன் லைட்டிங் அமைப்பைக் கூறலாம். சிறிய சிறிய புள்ளிகளை போன்ற அமைப்பைக் கொண்ட லைட்டுகள் காரின் முன் பக்கத்தில் வழங்கி இருக்கின்றனர். இது பகல்நேரத்தில் ஒளிரும் லைட்டுகளாக செயல்படும். இத்துடன், இந்த காருக்கு பெட்ரோல், டீசல் கார்களின் லுக்கை வழங்குகின்ற விதமான பம்பர் மற்றும் மூக்கு பகுதி வழங்கப்பட்டு இருக்கின்றன.

Toyota s urban cruiser ev interior

ஆகையால், இதை அவ்வளவு எளிதில் மின்சார கார் என கண்டுபிடித்துவிட முடியாது. இதேபோல், காரின் அழகிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக 19 அங்குல அலாய் வீல்கள், கிளாடிங் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை பார்த்தவை அனைத்தும் வெளிப்புற சிறப்பைப் பற்றியதாகும். உள்பக்கம் இதைவிட பிரம்மிப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கும்.

இதையும் இந்த வீடியோவில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். மிதக்கின்ற மாதிரியான சென்டர் கன்சோல், பொத்தான்களைக் கொண்ட ஏசி கன்ட்ரோல், கைகளுக்கு வைப்பதற்கு போதுமான இடம், டிரைவர் சீட்டை எலெக்ட்ரிக்காக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, இரட்டை ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் பன்முக கன்ட்ரோல்களுடன் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த காரின் அனைத்து இருக்கைகளும் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இது பிரீமியத்திற்கு கூடுதல் பிரீமியம் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது. இதுமட்டுமல்ல ஆம்பியன்ட் லைட், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், லெவல் 2 அடாஸ் அம்சம் போன்ற அம்சங்களையும் இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையிலும் இதே அம்சங்களுடனேயே அர்பன் க்ரூஸர் இவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் வருகை பற்றிய விபரங்கள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 12, 2025, 11:39 [IST]
English summary
Discover the interiors of the made in india toyota urban cruiser ev
மேலும்... #toyota #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X