இந்த கார்கள பராமரிப்பது மிகவும் சுலபம்.. அதுமட்டுமல்ல செலவும் மிக குறைவாகவே ஆகும்.. எள் உருண்ட மாதிரியான கார்!

'ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை' என சொல்லும் அளவிற்கு பராமரிக்க மிகவும் சுலபமான மற்றும் குறைவான செலவை வழங்கக் கூடிய கார் மாடல்கள் சிலவற்றின் லிஸ்ட்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். குறிப்பாக, அவை என்ன விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன?, என்ன மாதிரியான எஞ்சின் ஆப்ஷனில் அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன? மற்றும் அந்த கார்களின் சிறப்புகள் என்ன என்பது போன்ற முக்கிய விபரங்களையே பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக குறைவான விலைக் கொண்ட கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இதன் ஆரம்ப விலையே ரூ. 4.09 லட்சம் மட்டுமே ஆகும். விலையில் மட்டுமல்ல பராமரிப்பிலும் மிகவும் சுலபமான காராக இது காட்சியளிக்கின்றது.

5 cars that are easy and affordable to maintain

இதன் குட்டியான தோற்றம் மற்றும் எளிமையான தோற்றத்தின் காரணமாக இந்த காரை சுத்தம் செய்வதுகூட மிகவும் சுலபமானதாகக் காட்சியளிக்கின்றது. அதுமட்டுமல்ல நேரமும் மிகவும் குறைவாகவே அதற்கு தேவைப்படும். மேலும், ஒரு சில ஆயிரம் ரூபாயே இந்த காரை பராமரிக்கத் தேவைப்படுகின்றது. சொல்லப்போனால் ஓர் பைக்கிற்கு ஆகக் கூடிய செலவே இதற்கு ஆகும்.

இதனால்தான் பலரும் இந்த காரை விரும்பி வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் அதிகம் மைலேஜைத் தரக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றன. 1.0 லிட்டர் ட்யூவல்-ஜெட் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

Maruti alto k10

டாடா டியாகோ (Tata Tiago): இந்த கார் இந்தியாவில் பெட்ரோல், எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி என பன்முக அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பதிலேயே மிக மிக விலை குறைவான கார் மாடல் இதுவாகும். அதேவேளையில், அதிக பாதுகாப்பு திறன்மிக்க காராகவும் காட்சியளிக்கின்றது.

இந்த காரை 20 ஆயிரம் கிமீ அல்லது 24 மாதங்கள் வரை பயன்படுத்தினாலே சர்வீஸுக்கு ரூ. 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே செலவாகும் என கூறப்படுகின்றது. இதேபோல், இதன் ஆரம்ப விலையும் ரூ. 4.99 லட்சம் மட்டுமாகவே இருக்கின்றது. விலையில் மட்டுமல்ல இதை பராமரிப்பதற்கு ஆகும் செலவும் மிகக் குறைவாகவே ஆகும். 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டாரே இந்த காரை பராமரிப்பதை மிகவும் சுலபமாக மாற்றி இருக்கின்றது.

மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR): இந்தியர்களின் பிரியமான கார் மாடல் இதுவாகும். இது ஓர் ஹேட்ச்பேக் வகை கார் மாடல் ஆகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாகவும் இதுவே இருக்கின்றது. இதற்கு இந்த காரின் அதிக இட வசதியும், அதன் டால் பாய் தோற்றமே காரணமாக இருக்கின்றது.

இதுமட்டுமல்ல பராமரிப்பு செலவும் மிகவும் குறைவு என்பதாலும் நல்ல வரவேற்பு இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ரூ. 5.64 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே வேகன்ஆர் தற்போது நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதிலும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மேலும், 1.0 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டார் மற்றும் 1.2 லிட்டர் மோட்டார் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

ஹோண்டா அமேஸ் (Honda Amaze): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கார் மாடல் இதுவாகும். இந்த கார் ரூ. 8.09 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.2லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டாரே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இந்த காருக்கு முதல் சர்வீஸ் இலவசம். இரண்டாவது சர்வீஸுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவாகும் என்பது கவனிக்கத்தகுந்தது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 Nios): ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 Nios): இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 5.98 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். 1.2 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷனே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இதில் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. இந்த காரை பராமரிக்க முதல் ஐந்து சர்வீஸ்களுக்கே ரூ. 15 ஆயிரம் வரை மட்டுமே செலவாகும் என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைவான பராமரிப்பு செலவு மற்றும் பராமரிக்க சுலபமான காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்க ஏற்ற கார் மாடலாக மேலே பார்த்தவை இருக்கின்றன. இவற்றின் விலையும் குறைவு என்பதால் அனைத்து தரப்பு மக்களாலும் இந்த கார்களை வாங்கி பயன்படுத்த முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2025, 11:47 [IST]
English summary
Discover the top 5 cars that are easy and affordable to maintain
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+