ரூ60,000 தள்ளுபடி! கம்மி விலைக்கு கார் வாங்க தீபாவளிய விட்டா வேற வழியில்ல!

மாருதி நிறுவனம் தனது அரேனா லைன்அப்களில் விற்பனையில் இருக்கும் கார்களில் குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும் தீபாவளி தள்ளுபடியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி தற்போது கார் வாங்கினால் ரூ62,100 வரை தள்ளுபடிகளை பெற முடியும். சில குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படவில்லை. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி, எப்படியான தள்ளுபடி என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஆல்டோ கே10

மாருதியின் ஆல்டோ கே10 காருக்க தான் டிமாண்ட் அதிகமாக உள்ளது. இந்த காருக்கு ரூ40,000 வரை கேஷ் தள்ளுபடி ஏஎம்டி வேரியன்ட்களுக்கும், ரூ35,000 கேஷ் தள்ளுபடி மேனுவல் வேரியன்ட்களுக்கும், ரூ25,000 கேஸ் தள்ளுபடி சிஎன்ஜி வேரியன்ட்களுக்கும் வழங்கப்படுகிறது. இது போக கூடுதலாக ரூ15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ2100 கார்பரேட் தள்ளுபடி ரூ5,000 பண்டிகை கால புக்கிங் போனஸ் வழங்கப்படுகிறது.

Diwali Discounts

இந்த கார் தற்போது மார்கெட்டில் ரூ3.99 லட்சம் முதல் ரூ5.96 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காருக்கு அதிகபட்சமாக டாப் வேரியன்டில் ரூ57,100 வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பண்டிகை கால புக்கிங் போனஸ் மட்டும் இல்லாமல் இருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காருக்க ரூ59,000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படகிறது. இந்த தள்ளுபடி நேரடியா வேரியன்டை பொருத்து ரூ10,000 முதல் ரூ35,000 வரை கேஷ் தள்ளுபடியாகவழங்கப்படுகிறது. இது போக ரூ15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது.

Diwali Discounts

மாருதி ஸ்வஃப்ட் காரை பொருத்தவரை ரூ6.49 லட்சம் முதல் ரூ9.59 லட்ம் என்ற விலையில் விற்பவனையாகி வருகிறது. இந்த காருக்கு ரூ35,000 கேஸ் தள்ளுபடி போக எக்ஸ்சேஞ்ச் போனஸ் சேர்ந்தால் ரூ50,000 வரை குறைவான விலையில் இந்த காரை வாங்க முடியும்.

மாருதி வேகன்ஆர்

மாருதி வேகன் ஆர் காருக்கு அதிகபட்சமாக ரூ57,100 வரை தள்ளுபதிகள் அறிவிக்கப்பட்டள்ளன. இதன்படி கேஸ் தள்ளுபடியாக சிஎன்ஜி வேரியன்டிற்கு ரூ25,000, 1.0 லிட்டர் பெட்ரோல் வேரியன்டிற்கு 30,000, 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் ஏஎம்டி வேரியன்ட்களுக்க ரூ35,000, 1.2 லி ஏஎம்டி வேரியன்டிற்கு ரூ40,000 தள்ளுபடிகள் டைக்கிறது.

Diwali Discounts

கூடுதலாக ரூ15,000 எக்ஸ்சேஞ்ச் போனல், ரூ2100 கார்பரேட் தள்ளுபடி, டீலர் பக்கள் தள்ளுபடியாக சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு கூடுதலாக ரூ20,000 என் வழங்கப்படுகிறது. இந்த கார் மார்கெட்டில் ரூ5.54 லட்சம் முதல் ரூ7.30 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.

மாருதி பிரெஸ்ஸா

மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா காரை பொருத்தவரை ரூ30,000 வரை தள்ளுபடிகள் றுிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த காருக்கு ரூ25,000 தள்ளுபடி தான் இருந்தது. தற்போது இது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ15,000 கேஷ் தள்ளுபடியாகவும், எக்ஸ் சேஞ்ச் போனஸ் ரூ15,000 என பிரித்து வழங்கப்படுகிறது.

இந்த கார்ரூ8.34 லட்சம் முதல் ரூ14.14 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மார்கெட்டில் விற்பனையாகி வரும் டாடா நெக்ஸான், கியாசோனட், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.

எஸ்-பிரெஸ்ஸோ

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் செலிரியோ ஆகிய கார்களுக்கு ஒரே மாதிரியான தள்ளுபடி தான் வழங்கப்படுகிறது. இதன் படி இரண்டு கார்களுக்கு ரூ57,100 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இரண்டு கார்களும் ரூ35,000 வரை கேஸ் தள்ளுபடி ஏஎம்டி வேரியன்ட்களுக்கும், ரூ30,000 வரை கேஸ் தள்ளுபடியை மேனுவல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கும் பெறுகின்றன. இது போக கூடுதலாக ரூ15,000எக்ஸ் சேஞ்ச் போனல் ரூ2100 கார்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ5000 பண்டிகை கால புக்கிங் போனஸ் கிடைக்கிறது.

டிசையர்

மாருதி டிசையர் காருகு்கு ரூ30,000 வரை பலன்களை இந்த தீபாவளிக்கு வழங்குகிறது. இதன்படி ரூ15,000 தவரை கேஸ் தள்ளுபடி மற்றும் ரூ15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இது போக ஈக்கோ காரு்கு ரூ25,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் பெட்ரோல் வேரியன்டிற்கு ரூ15,000 கேஸ் தள்ளுபடியும், சிஎன்ஜி வேரயன்டிற்கு ரூ10,000 கேஸ் தள்ளுபடியும் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ10,000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் குறிப்பிட்ட மாடல்களுக்குமட்டுமே தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான விக்டோரிஸ் காருக்கு எந்த தள்ளுபடிகளும் கிடையாது. எர்டிகா காகருக்கு வெறும் ரூ3000 மட்டுமே தள்ளுபடி, இது எல்லாம் பொதுவான தள்ளுபடி விபரங்கள் தான் உண்மையான தள்ளுபடி விபரங்கள் மாற்றங்களுக்கு உட்பட்டது. இதனால் நீங்கள் அருகில் உள்ளடீலர்ஷிப்பை தொடர்பு கொண்டு உங்களுக்கான சரியான தள்ளுபடி விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 15, 2025, 9:10 [IST]
English summary
Diwali discounts maruti suzuki arena offers 2025
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X