பந்தயம் கடைசியில் இப்படி முடியும்னு நினைச்சே பார்க்கல! மஹிந்திரா காரை சும்மாவா எல்லாரும் வாங்குவாங்க!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுவரும் எலக்ட்ரிக் கார் (Electric Car), எக்ஸ்இவி 9இ (XEV 9e) ஆகும். இதனை காட்டிலும் குறைந்த விலையில் பிஇ 6 (BE 6) எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், அதனை காட்டிலும் மக்கள் நிறைய பேர் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை தான் புக் செய்துள்ளனர் என்பது இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி பெற்று வருபவர்களின் கார்களை பார்த்தாலே தெரிகிறது.

இதனாலேயே, மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக ஹூண்டாய் கிரெட்டா இவி (Hyundai Creta EV) எலக்ட்ரிக் கார் இருக்கும் என நாம் எதிர்பார்த்த நிலையில், எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் தான் கிரெட்டா இவி-க்கு சவாலான போட்டியாக விளங்கி வருகிறது. கிரெட்டா இவி ஆனது ஹூண்டாய் நிறுவனத்தின் லேட்டஸ்ட் எலக்ட்ரிக் காராக கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

drag race between electric cars

இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ மற்றும் ஹூண்டாய் கிரெட்டா இவி எலக்ட்ரிக் கார்களின் செயல்படுதிறனை வெளிக்காட்டும் வகையில், இந்த இரு எலக்ட்ரிக் கார்களையும் இங்கு சிலர் பந்தயத்தில் உட்படுத்தி உள்ளனர். அதாவது, தற்போதைக்கு இந்தியாவில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் இரு மாடர்ன் எலக்ட்ரிக் கார்கள் வேகமாக ஓட்டி பார்க்கப்பட்டு, இலக்கை முதலில் யார் அடைவது என போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின்படி பார்க்கும்போது, இந்த பந்தயம் ஆனது டெல்லிக்கு அருகே இந்த இரு எலக்ட்ரிக் கார்களுக்கு இடையே நடத்தப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது. இதில், இந்த பந்தயத்தில் உட்படுத்தப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட கிரெட்டா இவி எலக்ட்ரிக் கார் ஆனது கிரெட்டா இவி வேரியண்ட்களிலேயே அதிக விலை கொண்ட வேரியண்ட்டிற்கு அடுத்து விலை குறைவானது ஆகும்.

அதிகப்பட்சமாக 170 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வழங்கும் இந்த கிரெட்டா இவி எலக்ட்ரிக் காரில் 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை வெறும் 7 வினாடிகளில் எட்டிவிட முடிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மறுப்பக்கம், எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் ஆனது விலையுயர்ந்த பேக்-3 வேரியண்ட் ஆகும்.

இதில், அதிகப்பட்சமாக 282 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றல் கிடைப்பதாக கூறும் அதன் உரிமையாளர், 0-இல் இருந்து 100km/h வேகத்தை 5 வினாடிகளுக்குள் எட்டிவிட முடிவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த இரு எலக்ட்ரிக் கார்களுக்கும் இடையே போட்டியை துவங்குவதற்கு முன், இரு கார்களிலும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் (Traction Control) சிஸ்டம் மற்றும் ஏசி-ஐ ஆஃப் செய்துவிட்டு, நார்மல் டிரைவிங் மோடை பயன்படுத்துமாறு பந்தயத்தை நடத்தியவர்கள் வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட முதல் சுற்று பந்தயத்தில் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் பெரிய அளவிலான முன்னிலை உடன் பந்தயத்தை வென்றது. அதன்பின், 2வது சுற்றை இரு கார்களிலும் ஸ்போர்ட்/ ரேஸ் மோட்-ஐ தேர்வு செய்து நடத்திய போதிலும், எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் தான் வெற்றி பெற்றது. 3வது சுற்றை எக்ஸ்இவி 9இ கார் டிரைவர் சில வினாடிகள் தாமதமாக துவங்கிய போதிலும், இறுதியில் அவரால் கிரெட்டா இவி காரை எளிதாக முந்த முடிந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 3 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த பந்தயத்தின் அனைத்து சுற்றுகளிலும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் எளிதாக முந்தி உள்ளது. இதில் இருந்து, கிரெட்டா இவி எலக்ட்ரிக் காரை காட்டிலும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் செயல்படுதிறன் சிறப்பாக உள்ளதை அறிய முடிகிறது. இதற்கு முக்கிய காரணம், எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரில் மஹிந்திரா நிறுவனம் வழங்கும் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் அந்த மோட்டார் வழங்கக்கூடிய அதிக இயக்க ஆற்றல் என சொன்னால் அது மிகையில்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, June 29, 2025, 5:00 [IST]
English summary
Drag race between mahindra xev 9e and hyundai creta ev electric cars
மேலும்... #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+