இ20 பெட்ரோல் போட்டா மைலேஜ் குறையும்! இவரே சொல்லிட்டாரா? அப்ப உண்மையா தான் இருக்கும்!

இந்தியாவில் மத்திய அரசு பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பை உறுதி செய்துள்ளது. இதனால் வெளிநாடுகளிடம் நாம் கச்சா எண்ணெய்க்காக சார்ந்திருக்க வேண்டிய தேவை குறையும், உள்ளூர் கருப்பு விவசாயிகளுக்கு வருமானம் வரும், மற்றும் கார்பன் உமிழ்வு குறையும் ஆகிய காரணத்தில் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுகிறது. இதனால் வாகனம் பாதிக்கப்பவதாக கூறப்படும் நிலையில் மஹிந்திரா நிறுவனம் இதில் புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் உள்ள 90,000 ெபட்ரோல் பங்க்களில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல்கள் இ20 ரக பெட்ரோல்கள் தான். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலில் 200 மில்லி எத்தனால் தான் இருக்கிறது. மீது உள்ள 800 மில்லி தான் பெட்ரோல் இருக்கிறது. கடந்த சில மாதங்கள் முன்பு வரை இ20 பெட்ரோல் ஒரு ஆப்ஷனாகவே வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கட்டாயம் இ20 பெட்ரோல் மட்டுமே கிடைக்கிறது.

E20 Fuel Mahindra

இது இ20க்கு தகுந்தவாறு தயாரிக்கப்படாத வாகனத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இது வாகனத்தின் ஃபெர்பார்மென்ஸ், நீடித்த உழைப்பு ஆகியவற்றை பாதிக்கும் எனமக்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஆனால் இதற்கு அரசு மறுப்பு சொல்லி வருகிறது. இது மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை தான் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்த விஷயத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆட்டோமொட்டிவ் பிரிவின் தலைவர் நளினிகாந்த் இது குறித்து கூறும்போது இ20 பெட்ரோலை மஹிந்திரா வாகனங்களில் பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது என கூறியுள்ளார். இது போக இவர் வாடிக்கையாளர்கள் சிலர் மைலேஜ் குறைவது மற்றும் பிக்கப் குறைவது ஆகியவற்றையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

E20 Fuel Mahindra

இது குறித்து அவர் கூறும் போது இ20 பெட்ரோலை பயன்படுத்துவது இன்ஜினிற்கு எந்த விதமான கேடையும் ஏற்படுத்தாது. ஆனால் பெர்ஃபார்மென்ஸ் முன்புபோல் இருக்காது எனவும் தெரவித்துள்ளார். இதனால் மைலேஜ் கூட குறைய வாய்ப்பு இருக்கிறது. என அவர் கூறியுள்ளார். தற்போது இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு இ20 வாகனங்களை பழைய இ20 சப்போர்ட் இல்லாமல் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் பயன்படுத்துவது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என கூறிய நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் தரப்பில் இருந்து ஃபெர்பார்மென்ஸ், மற்றும் மைலேஜ் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரி பேசியிருப்பது தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

E20 Fuel Mahindra

இ20 பெட்ரோல்கள் ஒரு பக்கம் பெர்ஃபார்மென்ஸ், மைலேஜ் பாதிக்கிறது என்றால் மற்றொரு பக்கம் வாகனத்தின் உள்ள பாகங்கள் பாதிக்கப்படையும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பெட்ரோலை விட எத்தனால் அதிக அரிப்பு தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இதனால் அதன் பம்ப், டியூப் வால்வு பகுதிகள் விரைவாக தேய்மானம் அடைய வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் இ20 பெட்ரோலை பழைய வாகனங்களில் பயன்படுத்தினால் நிச்சயம் இதை எல்லாம் இ20 பெட்ரோலுக்கு ஏற்றவாறு மாற்றுவது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்நிலையில் இந்தியா முழுவதும் இ20 பெட்ரோல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாகனங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறுவது விவாதத்திற்கு உரியது தான். ஆனால் அரசு எடுத்துள்ள இந்த முடிவு முக்கியமானது. மாசு, வெளிநாட்டை சார்ந்திருக்க வேண்டிய தேவை குறைவது உள்ளிட்ட பல விஷயங்கள் முக்கியமானதாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 14, 2025, 14:32 [IST]
English summary
E20 fuel mahindra safe mileage performance impact
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X