ஒரே ஆளா 1621 பஸ்கள், 42 டிரக்குகளை வாங்கிட்டாங்க! டாடாக்கு கிடைக்கலனா வேற யாருக்கு இந்த ஆர்டர் கிடைச்சிருக்கு?
ஒரே ஆளா வந்து 1,621 பேருந்துகளுக்கும், 42 டிரக்குகளுக்கும் ஆர்டர் கொடுத்த நிகழ்வு இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. இந்த பிரமாண்ட ஆர்டரை கொடுத்திருப்பது தனி நபர் அல்ல. ஓர் மாநில அரசாங்கமே இவ்வளவு மிகப் பெரிய ஆர்டரை வழங்கி இருக்கின்றது. உத்தர பிரதேசம் மாநில அரசாங்கமே இந்த மாபெரும் ஆர்டரை வழங்கி இருக்கின்றது. மேலும், இந்த பிரமாண்ட ஆர்டரை பெற்றிருப்பது டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ஸோ அல்லது அசோக் லேலண்ட் (Ashok Leyland)-டோ கிடையாது.
ஐசர் (Eicher) நிறுவனத்திற்கே இந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர் ஜாக்பாட் போல கிடைத்து இருக்கின்றது. இந்த ஆர்டரில் ஏசி அல்லாத பேருந்துகள், ஏசி வசதிக் கொண்ட பேருந்துகள், சிஎன்ஜி பேருந்துகளின் சேஸிஸ் மற்றும் டிரக்குகள் என பல ரகங்களும் அடங்கும்.

இன்றே (பிப்ரவரி 3) இந்த பிரமாண்ட ஆர்டரை உத்தரப் பிரதேசத்தின் பொதுப் போக்குவரத்துத் துறையே ஐசர் நிறுவனத்திற்கு வழங்கி இருக்கின்றது. மாநிலத்தின் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே இவ்வளவு மிகப் பெரிய ஆர்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அம்மாநில வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
எனவே விரைவில் ஒவ்வொரு கட்டமாக கொடுக்கப்பட்டு இருக்கும் ஆர்டர்களுக்கான வாகனங்களை ஐசர் நிறுவனம் டெலிவரி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக முக்கியமாக ஐசர் நிறுவனத்தின் முன்னணி பேருந்து மாடலான ஸ்லைன் ப்ரோ 3011 (Skyline Pro 3011 L) மற்றும் ஸ்கைலைன் ப்ரோ 3010 எல் (Skyline Pro 3010 L) ஆகியவற்றிற்கும் இங்கே ஆர்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இவற்றை மட்டுமே 1,344 யூனிட்டுகள் வரை உபி அரசாங்கம் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த இரண்டும் ஏசி வசதி அல்லாத பேருந்துகள் ஆகும். குறைந்த கட்டணத்தில் சௌகரியமான பொது போக்குவரத்துச் சேவையை மக்களுக்கு வழங்க ஏதுவான பேருந்துகளே இவை ஆகும்.
இவற்றை அடுத்தே 197 யூனிட்டுகள் ஏசி பேருந்துகளுக்கும் ஆர்டர் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஐசர் ப்ரோ 6016 (Eicher Pro 6016) மாடலுக்கே ஆர்டர் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இது 12 மீட்டர் ரக ஏசி பேருந்தும் ஆகும். சௌகரியமான பயணத்தை சற்றே பிரீமியம் கட்டணத்தில் வழங்கும் நோக்கில் இந்த பேருந்திற்கு உபி போக்குவரத்துத் துறை ஆர்டர் வழங்கி இருக்கின்றது.
நீண்ட தூர பயணங்களுக்கும் உகந்த பேருந்தே இது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், மாநிலத்தின் நீண்ட தூரத்தில் இருக்கும் முக்கிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த பேருந்துகள் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமல்ல சிஎன்ஜி (CNG)-இல் இயங்கக் கூடிய பேருந்துகளுக்கான வெறும் கூடுகளுக்கும் ஆர்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஐசர் ப்ரோ 6016 சிஎன்ஜி பேருந்தின் கவுல் சேஸிஸ்க்கே ஆர்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது. சுமார் 80 யூனிட்டுகளுக்கு ஆர்டர் வழங்கப்பட்டு உள்ளது. இவற்றிற்கு மட்டுமல்ல பெரிய உருவம் கொண்ட டிரக்குகளுக்கும் ஆர்டர் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. 42 யூனிட்டுகள் ஐசர் ப்ரோ 3019 ரக டிரக்குகளுக்கே ஆர்டர் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இவை உபி போக்குவரத்துத் துறையில் முக்கிய பாகங்களை ஏற்றிச் செல்லுதல் மற்றும் லாஜிஸ்டிக் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், இன்னும் சில மாதங்களில் உபி-யின் பொது போக்குவரத்து வேற லெவலுக்கு அப்கிரேட் ஆக இருக்கின்றது என்பது இப்போதே தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்களின் தயாரிப்புகளைப் போலவே அதிக பிரீமியம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியதாக ஐசர் நிறுவனத்தின் பேருந்துகள் மற்றும் டிரக்குகள் இருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே இந்த நிறுவனத்திற்கு தன்னுடைய பிரமாண்ட ஆர்டரை உபி அரசாங்கம் ஐசர்-க்கு வழங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








