நவம்பரில் பலத்த அடி! நம்பர் 1 இடத்தில் டாடா! மாருதி லிஸ்ட்லயே இல்ல!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் மீதான மோகம் அதிகமாக இருக்கிறது. மக்கள் பலர் எலெக்ட்ரிக் கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூட எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க துவங்கிவிட்டனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளனர் என்ற விபரங்களை காணலாம் வாருங்கள். இது வாகன் தளத்திலிருந்துபெறப்பட்ட தகவல் ஆகும்.

இந்த பட்டியலில் 6 வது இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் இருக்கிறது. பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இன்னும் இவி வாகன தயாரிப்பிற்குள் நுழையாததால் இந்த பட்டியலில் குறைவான வாகன தயாரிப்பு நிறுவனங்களே உள்ளன. இதன்படி ஹூண்டாய் நிறுவனம் 370 வாகனங்களை கடந்த நவம்பர் மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் 437 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

Electric Car Sales Nov 2025

பட்டியலில் 5வது இடத்தில் பிஒய்டி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 417 வாகனங்களை கடந்த நவம்பர் மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் 562 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

பட்டியலில் 4வதுஇடத்தில் கியா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மொத்தமே 463 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 636 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. கடந்த நவம்பரில் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

Electric Car Sales Nov 2025

3வதுஇடத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது.இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 2920 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.இதுவே கடந்த அக்டோபர் மாதம் 3989 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்த நிறுவனமும் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது.

2வதுஇடத்தில் எம்ஜி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 3658 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் 4744 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.இந்நிறுவனமும் விற்பனையில் கடந்த மாதம் சரிவை சந்தித்துள்ளது.

Electric Car Sales Nov 2025

முதல் இடத்தில் வழக்கம் போல டாடா நிறுவனம் தான் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 6,096 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதம் 7363 கார்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும் போது இந்த நிறுவனமும் சரிவை சந்தித்துள்ளது.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் கடந்த அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை சரிவை சந்தித்துள்ளன. ஆனால் இதில் பெரியதாக கவலைப்பட ஒன்றும் இல்லை. அக்டோபர் மாதம் பண்டிகை காலம் இருந்ததால் விற்பனை அதிகமாக இருந்தது. அதிலிருந்து ஒரளவிற்கு தான் விற்பனை நவம்பர் மாதம் குறைந்துள்ளது. டிசம்பரில் வருட கடைசி, புத்தாண்டு கிறிஸ்துமஸ் காரணமாக விற்பனை அதிகமாகலாம்.

இதன் காரணமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாதம் விற்பனையை அதிகரிக்க திட்டமிடுவார்கள். இந்த டிசம்பர் மாதம் பலர் ஸ்டாக்கில் உள்ள கார்களை காலியாக்க அதிக தள்ளுபடிகளை வழங்குவார்கள். 2026 பிறந்துவிட்டால் 2025ல் வாங்கப்பட்ட கார் ஒரு வருட பழைய காராகிவிடும் என்பதால் இதை செய்வார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை சந்தித்தாலும் நடந்த நவம்பர் மாதம் சற்று விற்பவனை குறைவு தான் ஆனால் இதை மீண்டெடுத்து இந்த டிசம்பரில் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 3, 2025, 10:05 [IST]
English summary
Electric car sales nov 2025 tata mahindra hyundai mg kia byd
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X