டாடா, டாடானு போனவங்க எல்லாரும் இப்போ எம்ஜி பக்கம்!! எலக்ட்ரிக் கார்களை விற்பதில் டாடாவுக்கு தண்ணி காட்டுறாங்க

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த வேகம் மிக மெதுவாகவே உள்ளது. எந்த அளவிற்கு மெதுவான வேகம் என்பதை வெளிக்காட்டும் வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் மெதுவாக விரிவடைந்து வருகிறது. கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 7 ஆயிரத்து 777 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரலில் 12 ஆயிரத்து 319 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2025 april electric cars sales

இந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது 58.40% அதிகரித்துள்ளது. அதாவது, 2024 ஏப்ரலில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களில் பாதிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) வழக்கம்போல் முன்னிலை வகிக்கிறது. இது கடந்த ஏப்ரல் மாத விற்பனையிலும் தொடர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 461 எலக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த எலக்ட்ரிக் கார்கள் விற்பனை அதிகரித்து இருப்பினும், டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது கணிசமாக குறைந்துள்ளது. டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை எண்ணிக்கை கடந்த 2024ஆம் ஆண்டு முழுவதுமே குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பதை ஏற்கனவே பார்த்திருந்தோம்.

2025 april electric cars sales

அது இன்னமும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. 2024 ஏப்ரலில் 5 ஆயிரத்து 172 எலக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து இருந்தது. டாடாவுக்கு அடுத்து 2வது இடத்தை எம்ஜி மோட்டார் (MG Motor) பிடித்துள்ளது. டாடா நிறுவனத்தின் சறுக்கல், எம்ஜி மோட்டாரின் வளர்ச்சியாக அமைந்துள்ளது. குறிப்பாக, எம்ஜி மோட்டாரின் புதிய விண்ட்சர் இவி (Windsor EV) ஆனது எலக்ட்ரிக் கார் மார்கெட்டில் புதிய புரட்சியை நிகழ்த்தி வருகிறது.

இதன் மூலமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 488 எலக்ட்ரிக் கார்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. அதுவே, 2024 ஏப்ரலில் வெறும் ஆயிரத்து 268 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது 175% அதிகரித்துள்ளது.

2வது இடத்தில் உள்ள எம்ஜி மோட்டாரின் விற்பனை ஆனது 175 சதவீதம் தான் அதிகரித்துள்ளது, அதுவே 3வது இடத்தில் உள்ள மஹிந்திரா (Mahindra) சுமார் 348% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2024 ஏப்ரலில் வெறும் 670 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த மஹிந்திரா இந்த ஆண்டு ஏப்ரலில் சுமார் 3 ஆயிரத்து 2 எலக்ட்ரிக் கார்களை விற்றுள்ளது.

இவற்றிற்கு அடுத்து 4வது இடத்தில் ஹூண்டாய் (Hyundai) இருந்தாலும், ஹூண்டாயின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை எண்ணிக்கை மிகவும் பின்தங்கி உள்ளது. அதாவது, மஹிந்திராவுக்கும், ஹூண்டாய்க்கும் இடையே விற்பனை எண்ணிக்கையில் பெரிய அளவிலான வித்தியாசம் உள்ளது. கடந்த ஏப்ரலில் ஹூண்டாய் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 686 ஆகும். 2024 ஏப்ரலில் வெறும் 91 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, பிஒய்டி, பிஎம்டபிள்யூ உள்பட இன்னும் பல நிறுவனங்களில் இருந்தும் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் பெரும்பாலான நிறுவனங்களின் விற்பனை ஆனது ஒவ்வொரு மாதமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதேநேரம், போர்ஷே, ஆடி போன்ற லக்சரி கார் நிறுவனங்களின் விற்பனை குறைந்துக் கொண்டே வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 7, 2025, 10:59 [IST]
English summary
Electric cars sales crossed 12000 in april 2025 check all details here
மேலும்... #electric car #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+