எலக்ட்ரிக் கார் வாங்க ஷோரூமில் கூட்டம் குறையுது! மக்கள் உஷார் ஆகிட்டாங்களா என்ன?

எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-க்கு இந்தியாவில் சமீப காலமாகவே மக்கள் மத்தியில் நல்ல தேவை உருவாகி வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, கார் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு புது, புது எலக்ட்ரிக் கார்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. இதனாலேயே எலக்ட்ரிக் கார்கள் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்துவரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்களை வாங்கவே கஸ்டமர்கள் அதிகம் பேர் தயாராக உள்ளனர். அதுவே, எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை சற்று மெதுவாகவே முன்னேற்றம் கண்டு வருகிறது. எப்படியோ முன்னேற்றம் கண்டால் போதும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கையில், நடந்து முடிந்த 2025 பிப்ரவரி மாத விற்பனையில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது.

electric cars sales report

வழக்கமாக, ஒரு மாதத்தில் ஏறக்குறைய 10 ஆயிரம் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படும். ஆனால், கடந்த மாதத்தில் வெறும் 8 ஆயிரத்து 968 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, வழக்கமாக விற்பனையாக கூடியவற்றை விட ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரம் எலக்ட்ரிக் கார்கள் குறைவாக விற்பனை ஆகியுள்ளன.

வழக்கம்போல், கடந்த மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் டாடாவில் இருந்து 3,825 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே பிப்ரவரி மாதத்தில் 5,143 எலக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.

electric cars sales report

இந்த 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இதனை காட்டிலும் அதிகமாக 5,245 டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டாடாவுக்கு அடுத்து 2வது இடத்தில் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் 3,271 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெறும் ஆயிரத்து 96 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே எம்ஜி மோட்டார் விற்பனை செய்திருந்தது என கூறினாலும், இந்த ஆண்டு ஜனவரியில் 4,470 எலக்ட்ரிக் கார்கள் எம்ஜி மோட்டாரில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 3வது இடத்தை ஆச்சிரியப்படுத்தும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் பிடித்துள்ளது.

electric cars sales report

ஹூண்டாயில் இருந்து கடந்த மாதத்தில் 738 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த ஆண்டு பிப்ரவரியிலும் சரி இந்த ஆண்டு ஜனவரியிலும் சரி 350 எலக்ட்ரிக் கார்களை கூட ஹூண்டாய் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடியவில்லை. வழக்கமாக இந்த 3வது இடத்தை பிடிக்கும் மஹிந்திரா நிறுவனம் இந்த முறை 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மஹிந்திராவில் இருந்து கடந்த மாதத்தில் 424 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் பிஒய்டி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் இருந்து கடந்த மாதத்தில் முறையே 254 மற்றும் 219 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7வது இடத்தில் 67 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் மெர்சிடிஸ்-பென்ஸும், 8வது இடத்தில் 59 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் சிட்ரோனும் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, கடந்த மாதத்தில் 21 வால்வோ எலக்ட்ரிக் கார்களும், 19 கியா எலக்ட்ரிக் கார்களும், 7 ஆடி எலக்ட்ரிக் கார்களும், 2 போர்ஷே எலக்ட்ரிக் கார்களும் மற்றும் ஒரேயொரு ரோல்ஸ்-ராய்ஸ் எலக்ட்ரிக் காரும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மற்ற அனைத்து எலக்ட்ரிக் கார் நிறுவனங்களின் விற்பனை குறைந்துவரும் வேளையில், ஹூண்டாயின் விற்பனை மட்டும் அதிகரித்து இருப்பதற்கு காரணம், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா எலக்ட்ரிக் கார் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 10, 2025, 11:57 [IST]
English summary
Electric cars sales report 2025 february all details here
மேலும்... #electric car #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X