எல்லாமே மத்திய அரசால் தான்... இன்னும் கொஞ்ச வருஷத்தில் சாலையெங்கும் ஓட போகும் எலக்ட்ரிக் கார்கள்!!

ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025), பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 17 முதல் ஜனவரி 22ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் துவார்கா என்கிற பகுதியில் நடைபெறும் இந்த மோட்டார் கண்காட்சியை ஜனவரி 19ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு பொதுமக்கள் நேரில் பார்வையிடலாம். இவ்வாறு, நேரடியாக மக்களின் பார்வைப்பட உள்ளதால், இந்த முறை ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சிக்கு பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கவுள்ளன. போதாக்குறைக்கு, இந்த வருட ஆட்டோ எக்ஸ்போ ஆனது மத்திய அரசின் நேரடி பார்வையின்கீழ் நடைபெறவுள்ளது.

மத்திய அரசாங்கம் கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், 2025 ஆட்டோ எக்ஸ்போவில் நிறைய எலக்ட்ரிக் வாகனங்களை எதிர்பார்க்கிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 5 எலக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

electric cars at auto expo

ஹூண்டாய் கிரெட்டா இவி (Hyundai Creta EV): இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி கார்களுள் ஹூண்டாய் கிரெட்டாவும் ஒன்றாகும். அந்த அளவிற்கு பிரபலமான ஹூண்டாய் காரான கிரெட்டா ஆனது எலக்ட்ரிக் மோட்டார் உடன் வருகிறது எனும்போது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், 2025 ஆட்டோ எக்ஸ்போவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வாகனங்களுள் கிரெட்டா இவி ஒன்றாகும்.

electric cars at auto expo

மாருதி சுஸுகி இ-விட்டாரா (Maruti Suzuki e-Vitara): ஹூண்டாய் கிரெட்டா இவி-க்கு போட்டியாக மாருதி சுஸுகி களமிறக்கும் எலக்ட்ரிக் கார் இதுவாகும். இதைவிட நாம் கவனிக்க வேண்டியது, இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் கார் இ-விட்டாரா ஆகும். இருப்பினும், இந்த மாருதி எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் எனவும், ஆட்டோ எக்ஸ்போவில் இதன் சில விபரங்கள் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

electric cars at auto expo

டாடா ஹெரியர் இவி (Tata Harrier EV): இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் கிட்டத்தட்ட கடந்த 5 வருடங்களாக ஈடுப்பட்டுவரும் அனுபவமிக்க டாடா மோட்டார்ஸில் இருந்து அடுத்ததாக வெளிவரவுள்ள எலக்ட்ரிக் கார் ஹெரியர் இவி ஆகும். 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரின் கான்செப்ட்டை, அதாவது இந்த கார் இப்படித்தான் இருக்கும் என்பதை டாடா மோட்டார்ஸ் வெளிக்காட்டி இருந்தது.

electric cars at auto expo

பி.ஒய்.டி சீ லயன் 7 (BYD SeaLion 7): இந்தியாவில் சீன எலக்ட்ரிக் கார் நிறுவனமான பிஒய்டி-இன் 4வது எலக்ட்ரிக் கார் இதுவாகும். இங்கு ஏற்கனவே விற்பனையில் உள்ள பிஒய்டி சீல் இவி எலக்ட்ரிக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக புதிய சீ லயன் 7 உள்ளது. 2025 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு செய்யப்பட்டு, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த கார் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

electric cars at auto expo

எம்ஜி எம்9 (MG M9): இந்தியாவில் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் மூலமாக வெற்றியை ருசித்துக் கொண்டிருக்கும் எம்ஜி மோட்டார் நிறுவனம் அடுத்ததாக விற்பனைக்கு கொண்டுவர உள்ள எலக்ட்ரிக் கார் எம்9 ஆகும். விண்ட்சர் இவி காரை காட்டிலும் அளவில் பெரியதாக உருவாக்கப்படும் இந்த எலக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவுக்கு பிறகு இந்த ஆண்டு மே மாதத்தில் விலைகள் உடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா உள்பட உலகம் மொத்தமே எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றன. உலகின் மிக பெரும் ஆட்டோமொபைல் சந்தைகளுள் ஒன்றாக விளங்கும் நம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவது 2025 ஆட்டோ எக்ஸ்போவுக்கு பின் பெரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு, மேற்கூறப்பட்ட 5 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களுள் ஒன்று முக்கியமான காரணமாக கூட எதிர்காலத்தில் இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 14, 2025, 8:00 [IST]
English summary
Electric cars that expected at auto expo 2025 motor show
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X