ஆட்டோ டிரைவர்களுக்கு வர பிரசாதம்... ராணிப்பேட்டையில் நடந்த தரமான சம்பவம்! இதுக்கு அப்புறம் புக்கிங் குவியும்!
க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் (Greaves Electric Mobility Limited), இந்தியாவில் நீண்ட வருடங்களாக எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துவரும் நிறுவனங்கள் ஒன்று. எலக்ட்ரிக் பை-சைக்கிள்களில் இருந்து எலக்ட்ரிக் 2-வீலர்கள் (Electric 2-Wheelers) மற்றும் எலக்ட்ரிக் 3-சக்கர ஆட்டோ ரிக்ஷாக்கள் (Auto Rickshaws) வரையில் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து ஆம்பியர் (Ampere) உள்ளிட்ட பல்வேறு விதமான பிராண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
குறிப்பாக, அதிக ரேஞ்சை வழங்கக்கூடிய எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதில் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் கைத்தேர்ந்ததாக உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் 'எல்ட்ரா சிட்டி' (Eltra City) என பெயர் கொண்ட எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா ஆனது அதிக ரேஞ்சை வழங்கக்கூடிய எலக்ட்ரிக் ஆட்டோவாக விளங்குகிறது.

இந்த நிலையில், எல்ட்ரா சிட்டியை காட்டிலும் அதிக ரேஞ்சை வழங்கக்கூடிய எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ரா (Eltra City XTRA) என்கிற எலக்ட்ரிக் 3-சக்கர ஆட்டோ ரிக்ஷாவை இந்த ஜூலை மாத துவக்கத்தில் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. எல்ட்ரா சிட்டியை போலவே, புதிய எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ராவும் பயணிகளை அழைத்துச் செல்லக்கூடிய 3-சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா ஆகும்.
இந்த எலக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகம் செய்ததோடு, இந்த எலக்ட்ரிக் ஆட்டோவில் அசத்தலான காரியத்தை தற்போது க்ரீவ்ஸ் மொபிலிட்டி நிறுவனம் நிகழ்த்தி காட்டியுள்ளது. அது என்னவென்றால்... பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் உள்ள ஆம்பியர் நிறுவனத்தின் தொழிற்சாலை வரையில் சுமார் 324கிமீ தொலைவிற்கு சிங்கிள்-சார்ஜில் புதிய எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ரா எலக்ட்ரிக் ஆட்டோவை சோதனை ஓட்டமாக ஓட்டி காண்பித்துள்ளனர்.

அதாவது, ஆட்டோவின் பேட்டரியை ஒரே ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பி 324கிமீ தொலைவிற்கு ஓட்டியுள்ளனர். இது, இந்த வாகனத்தின் அதிகப்படியான ரேஞ்சை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேலும், எலக்ட்ரிக் 3-சக்கர வாகனத்தில் சிங்கிள் சார்ஜில் அதிக தொலைவிற்கு பயணம் செய்யப்பட்ட தொலைவாகவும் எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ராவில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணம் இந்திய சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அதிகப்பட்சமாக மணிக்கு 60கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ரா வாகனத்தை 324கிமீ தொலைவிற்கு ஓட்டி இருந்தாலும், இந்த எலக்ட்ரிக் ஆட்டோவின் நிஜ உலக ரேஞ்ச் 170கிமீ என ஏற்கனவே க்ரீவ்ஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது. அதாவது, டிரைவர் மற்றும் 3 பயணிகள் உடன் திருப்பங்கள் நிறைந்த நகர்புற சாலைகளில் அதிகப்பட்சமாக 170கிமீ தொலைவிற்கு சிங்கிள்-சார்ஜில் இந்த எலக்ட்ரிக் ஆட்டோவை ஓட்டலாம்.
அதிகப்பட்சமாக 330 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லக்கூடிய எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ரா ஆட்டோ ரிக்ஷாவை 12 டிகிரி ஏறுமுகமான சாலைகளிலும் முழு எடை உடன் இயக்கலாம் என்கிறது க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் நிறுவனம். 12 இன்ச்சில் டயர்களை கொண்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் ஆட்டோவினுள் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க 6.2 இன்ச்சில் டிஜிட்டல் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 3-சக்கர ஆட்டோ ரிக்ஷாக்களை ஓட்டுபவர்களின் முதன்மையான விருப்பமே அதிக மைலேஜ் (Mileage) ஆகவே இருக்கும். ஏனெனில், அதிக மைலேஜ் கிடைத்தால்தான் அவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும். ஆதலால், அவ்வாறான ஆட்டோ டிரைவர் தொழிலில் ஈடுப்படுபவர்களுக்கு க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் நிறுவனத்தின் எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ரா போன்ற எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








