கழிவு நீரில் ஓடும் கார் கண்டுபிடிப்பு.. இனி வீட்டுல பாத்திரம் கழுவினது, பாத்ரூம் தண்ணீனு எதையும் வீணாக்காதீங்க

கழிவு நீரில் இயங்கும் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. இங்கிலாந்து நாட்டில் செயல்பட்டு வரும் வார்விக் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி எஞ்சினியர் மாணவர்களே கழிவு நீரில் இயங்கக் கூடிய வாகனத்தைக் கண்டுபிடித்து இருக்கின்றனர். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன உலகத்தையும் திரும்பி பார்க்கச் செய்யும் வகையில் அமைந்து உள்ளது. குறிப்பாக, எதிர்காலத்தில் வாகன இயக்கத்திற்கு பெட்ரோல், டீசலை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை என்கிற கருத்தையும் பலரின் மனத்தில் இந்த தகவல் விதைத்திருக்கின்றது.

அதேவேளையில், தமிழகத்தைச் சேர்ந்த ராமர் பிள்ளையின் கண்டுபிடிப்பை போல இது நசுக்கி விடப்படக்கூடாது என்பதும் பலரின் எதிர்பார்ப்பாக மாறி இருக்கின்றது. ஸ்போர்ட்ஸ் காரையே கழிவு நீரில் இயங்கும் வகையில் மாணவர்கள் தயார் செய்திருக்கின்றனர். கழிவு நீரில் இயங்கும் வாகனம் என்ற உடன் கழிவு நீரை நேரடியாக வாகனத்தில் செலுத்துவார்களோ என நினைத்துக் கொள்ள வேண்டும்.

Sports car powered by sewage

கச்சா எண்ணெயில் இருந்து எப்படி பெட்ரோல், டீசல் பிரித்தெடுக்கப்படுகின்றது. அதைப் போலவே கழிவு நீரில் இருந்து வாகனத்தை இயக்குவதற்கான வேதிப் பொருளே உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக வாகனத்தை இயக்கி இருக்கின்றனர். இதனைக் கண்டுபிடித்ததன் வாயிலாகவே தற்போது வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தற்போது தலைப்பு செய்தியாக மாற தொடங்கி இருக்கின்றனர்.

கழிவு நீரில் இருந்து ஹைட்ரஜனையே அவர்கள் உருவாக்கி இருக்கின்றனர். இதையே வாகனத்தை இயக்கவும் அவர்கள் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். உலகின் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் ஏற்கனவே ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களை உருவாக்கத் தொடங்கிவிட்டனர். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவில்கூட ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என நம்பப்படுகின்றது.

அரசுகூட ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான பணிகளில் களமிறங்கி இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் கழிவு நீரில் இருந்து ஹைட்ரஜனை உருவாக்கி, அதன் வாயிலாக ஸ்போர்ட்ஸ் காரையும் அவர்கள் இயக்கிக் காண்பித்திருக்கின்றனர்.

ஆகையால், ஹைட்ரஜன் தயாரிக்கும் முறை மேலும் சுலபமாக மாறியிருக்கின்றது. இந்த குழு கழிவுநீரில் இருந்து ஹைட்ரஜனை உருவாக்கும் புதிய நுண்ணுயிர் மின்னாற்பகுப்பு செல்களையே உருவாக்கி இருக்கின்றனர். இது இருக்கும் களன் வாயிலாக கழிவு நீர் செல்லும்போது கார்பன் அடி மூலக்கூறில் இருக்கும் நுண்ணுயிர்கள் கழிவுநீரையும், கழிவையும் உட்கொண்டு ஹைட்ரஜனை உற்பத்திச் செய்யும்.

Hydrogen producing plant

வாகன இயக்கத்தை நிலைத் தன்மைக் கொண்டதாக மாற்றும் ஓர் முயற்சியாகவே இந்த கண்டுபிடிப்பை ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். ஹைட்ரஜனை பயன்படுத்துவதனால் காற்று மாசும் குறையக் கூடும். சொல்லப்போனால் காற்று மாசு என்பதே இதில் இருந்து வெளி வராது. எனவேதான் ஹைட்ரஜன் பவர்டு வாகனத்தை தயாரிக்கும் பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைட்ரஜனை இயக்க ஆற்றலாக மாற்றும்போது நீராவி மட்டுமே வெளியேறும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதனால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறப்படுகின்றது. டொயோட்டா போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2025, 16:25 [IST]
English summary
Engineers develop sports car powered by sewage derived hydrogen for sustainable racing
மேலும்... #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X