ஒரே வருசத்துல ரூ1.25 லட்சம் டீசல் செலவு மிச்சமாகும்! 1000 கிலோவை ஏற்றி செல்லும் எலெக்ட்ரிக் ஆட்டோ வந்தாச்சு!

யூலர் மோட்டார்ஸ் நிறுவனம் டர்போ இவி 1000 என்ற புதிய எலெக்ட்ரிக் மினி டிரக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ5.99 லட்சம் பட்ஜெட்டில் இது அறிமுகமாகியுள்ளது. லாஸ்ட் மைல் டெலிவரி மற்றும் சிறிய பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்று சிட்டி பகுதிக்குள்ளும், நெருக்கடியான பகுதிக்குள் இருக்கும் கடைகளுக்கு சரக்குகளை எடுத்து செல்ல மினிடிரக் வாகனம் தேவையாக இருக்கிறது. குறிப்பாக லாஸ்ட் மைல் டெலிவரி தொழிலில் இது மிக முக்கிய பங்குவககிக்கிறது. இந்நிலையில் இதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாகி வருகிறது. அதன்படி யூலர் நிறுவனம் டர்போ இவி 1000 என்ற வாகனத்தை விற்பனைக்காக அறிமுகப்டுத்தியுள்ளது.

Euler Motors Turbo EV 1000

டீசல் வாகனத்தை பயன்படுத்துவதை விட இந்த எலெக்ட்ரிக் வாகனத்தை பயன்படுத்தினால் ஆண்டிற்கு ரூ1.25 லட்சம் மிச்சமாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சார்ஜ் போட ஆகும் செலவும், டீசலுக்கு ஆகும் செலவையும் கணக்கிட்டு இதை தெரிவித்துள்ளது. மேலும் இதில் பாராமரிப்பு செலவு குறைவு இதனால் இது லாபமாக இருகு்கும். என தெரவித்துள்ளது.

இந்த வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கி.மீ சிட்டி டிராஃபிக்கிலும், 170 கி.மீ சப் அர்பன் ரூட்டில் பயன்படுத்தினால் ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 140 என்எம் டார்க் திறனை வெளியிடும் மோட்டாரை கொண்டுள்ளது. இந்த வாகனத்தில் 1000 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும். அதிகபட்சம் 70 கி.மீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

இது தண்டர் மோடில் மட்டுமே சாத்தியம். இதில் டிரைவ்மோடுகள் ஃபெர்பார்மென்ஸ் மற்றும் பேட்டரி பயன்பாட்டை குறைவாக பயன்படுத்த ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. இதில் சிசிஎஸ்2 ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதில் 15 நிமிடம் சார்ஜ் போட்டாலே 50 கி.மீ பயணிக்க கூடிய வகையில் சார்ஜ் ஏறிவிடும்.

இதனால் டிரிப்பிக்கு இடையில் சார்ஜ் போட தேவையான நேரம் வெகுவாக குறையும். இதில் 3.3 KW ஏசி சார்ஜர் உள்ளது. அதை பயன்படுத்தினால் முழுமையாக சார்ஜ் ஏற 4-5.5 மணி நேரம் ஆகும். இதை இரவு நேரம் சார்ஜ் போட பயன்படுத்தலாம். இந்த வாகனத்தின் பேஸ் சிட்டி வேரியன்ட் ரூ5.99 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது. இதில் 76.8வோல்ட் சிஸ்டம் மற்றும் 15.36kWh பேட்டரி உள்ளது.

ஃபாஸ்ட் சார்ஜ் மாடல் ரூ7.19லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது. இதில் 320வோல்ட் சிறா்டம், ரேப்பிட் சார்ஜிங்கிற்காக வழங்கப்பட்டுள்ளது.டாப் மேக்ஸ் வேரியன்ட் ரூ8.19 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது. இதில் 19.2 kWhலிக்யூட் கூல்டு பேட்டரி பேக் வழங்கப்ப்டடுள்ளது. இது அதிக ரேஞ்ச் மற்றும் சிறந்த பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் 13 இன்ச் வீல் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இது டிரம் பிரேக்கை விட சிறப்பாக செயல்படும். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. இதனால் டயர் தேய்மானம் குறையும். இந்த டிரேக் ஐபி67 ரேட்டிங், தூசு மற்றும் வாட்டர் ரெஸ்டன்ஸ் சான்று பெற்றது.

இந்த வாகனத்திற்கு ஃபைனான்ஸிங் ஆப்ஷன் உள்ளது. இதை வெறும் ரூ49,999 முன்பணத்தில் வாங்க முடியும். மாதம் ரூ10,000 இஎம்ஐ செலுத்தினால் போதும். இதனால் சிறிய தொழில் நடத்துபவர்கள் பலர் சரக்கு வாகனங்களுக்கு எலெக்ட்ரிக்கை நோக்கி வருவார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று பல நகரங்களில் டீசல் வாகனங்களுக்கு தடை வருகிறது. இதனால் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். 1 டன் எடை கொண்ட பிரிவில் இவி வாகனங்கள் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. இதனால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 22, 2025, 19:16 [IST]
English summary
Euler motors turbo ev 1000 1 tonne electric truck launch price
மேலும்... #commercial vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+