இனி 5 ஸ்டார் ரேட்டிங் வாங்குறது ரெம்ப கஷ்டம்! வருகிறது புதிய அப்டேட்!

உலகம் முழுவதும் பாதுகாப்பான வாகனங்களுக்கான சோதனை மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதில் வரும் முடிவுகள் நேரடியாக வாகனத்தின் விற்பனையில் பிரதிபலிக்கிறது. அதிக ரேட்டிங் கொண்ட வாகனங்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இது ஐரோப்பாவிலும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவிற்கு எப்படி பாரத் என்கேப் சோதனை உள்ளதோ அதே போல ஐரோப்பாவிற்கு யூரோ என்கேப் சோதனை நடத்தப்படுகிறது.

இந்த யூரோ என்கேப் சோதனை வரும் 2026ம் ஆண்டு முதல் மேலும் கடினமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் இனி 5 ஸ்டார் ரேட்டிங்கை பெறுவது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யூரோ என்கேப் சோதனையில் 2026ம் ஆண்டு புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளுது. இது பல்வேறு விதமான பாதுகாப்புகளை பயணிகளுக்கு வழங்கும் வகையில் தனது சோதனை முறையில் கொண்டு வருகிறது.

Euro NCAP 2026 Update

இதில் அடாஸ் தொழிற்நுட்பத்தை கட்டாயமாக்குகிறது. இது சாலையில் வாகனம் பயணிக்கும்போது சிறப்பான பாதுகாப்பைவழங்கும். இந்நிலையில் புதிய வரையறை ஒன்று கார்களில் வழங்கப்படும் ஃபிசிக்கல் பட்டன்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் இது வாகன ஒட்டிகளுக்கு கவன சிதறல் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கார்களில் நவீன தொழிற்நுட்பத்தை கொண்டு வருகிறோம் என்ற பெயரில் பல செயல்பாடுகள் டிஜிட்டல் கண்ட்ரோலுக்கு சென்றுவிட்டன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு எந்த கண்ட்ரோல் எங்கு இருக்கிறது என்ற குழப்பம் வருகிறது. அவசர காலத்தில் இந்த கண்ட்ரோல்களை எளிதாக அவர்களால் பயன்படுத்த முடியவில்லை.

Euro NCAP 2026 Update

உதாரணமாக ஹாரன், டர்ன் சிக்னல், ஹசார்டு லைட்டுகள், விண்ட் ஷில்டு வைப்பர், எமர்ஜென்ஸி எஸ்ஓஎஸ்ஆகியவற்றை டிஜிட்டல் கண்டரோல் இல்லாமல் பட்டன் மூலமே கண்ட்ரோல்களை வைக்க வேண்டும் எதுவும் எளிதாக பயன்படுத்தும்இடத்திலும் சுலபமாக தெரியும் இடத்திலும் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிரைவ் விண்ட்ஷிண்டிலிருந்து தனது கவனத்தை திசை திருப்ப கூடாது.

சமீபத்தி்ல வெளியான ஒரு ஆய்வில் வாகனம் ஓட்டும் போது 2 நொடிகள் ஒரு ஓடுநர் தனது கவனத்தை திசை திருப்பினாலோ கார் விபத்தில் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும், வாகனங்களில்உள்ள டச் ஸ்கிரீன் சிஸ்டம் விபத்தை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்ப்டடிருந்தது. டச்ஸ்கிரீன் சி்டம் 5 முதல் 40 நொடிகள் வர ஒரு டாஸ்கிற்கு எடுத்து கொள்கிறது. இது விபத்து ஏற்படுத்தவழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கவனசிதறலால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டிற்கு பிறகு 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Euro NCAP 2026 Update

இதனால் யூரோ என்கேப் சோதனையில் இந்த கருவிகள் எல்லாம் ஃபிசிக்கல் பட்டன் மூலம் இயங்கும் வகையில் கார்கள் வடிவமைக்கப்படும். வாகன தயாரிப்புநிறுவனங்கள் கிஸ்டர்கள் குறைவாக அல்லது இல்லாதவகையில் தங்கள் உட்புற கட்டமைப்பை மாற்றி வருகின்றனர். குறைந்த அளவிலான ஃபிசிக்கல் பட்டன்கள் மட்டுமே இருக்க வேண்டும் என வடிவமைக்கின்றார்கள். இதனால் பல கண்ட்ரோல்களை டச்ஸ்கிரீனிற்கு மாற்றுகின்றனர்.

இந்த நிலையில் ஃபிசிக்கல் பட்டன்கள் பொருத்துவது ஹார்டுவேரிலேயே மறுவடிவமைப்பு செய்ப்படவேண்டும். இதற்கான சப்ளை செயினில் மாற்றம் ஏற்படும். இதனால் வாகனங்களின் தயாரிப்பு செலவு அதிகமாகும்.

இது மட்டுமல்லாமல் யூரோ என்கேப் அப்டேட்டில் டிரைவர்களுக்கு சில முக்கியமான தகவல்கள் குறிப்பிட்ட ஆங்கிளில் டிஸ்பிளே ஆக வேண்டும் என குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக கலைட் வேகம், அசிஸ்டென்ஸ் சிஸ்டம் தகவல்கள் இப்படியாக டிஸ்பிளே ஆகு வேண்டும். இதனால் டிரைவரின் கவன சிதறல் குறையும் என்பதால் இந்த அப்டேட்டை கொண்டு வரகிறார். இது எல்லாம் இருந்தால் தான் சில சோதனைகளில் கார்கள் பாஸ் ஆகும்.

இதற்கு முன்னர் காரில் டிரைவர் தூக்குகிறாரா என்பதை கண்காணிக்க இருக்கும் கருவிக்கு 2 புள்ளிகள் தான் வழங்கப்பட்டன. புதிய அப்டேட்டில் 25 புள்ளிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்து. இதனால் இனி யூரோ என்கேப் சோதனையில் ஒரு கார் 5 ஸ்டார் ரேட்டிங் பெறுவது கடினம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்புக்காக சில விஷயங்களை அப்டேட் செய்ய எடுக்கப்பட்ட முடிவு நிச்சயம் வரவேற்கதக்கதுதான். நிச்சயம் இந்த தயாரிப்புகள் பலரது கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம். இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 22, 2025, 12:30 [IST]
English summary
Euro ncap 2026 update cars lose points without physical buttons
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X