கார் & பைக்குக்கு ஜிஎஸ்டியை குறைத்தால் இப்படி நடக்கும்னு மத்திய அரசுக்கு யோசிக்கலயா? மானியம் எல்லாம் வீண்தானே!

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த அக்டோபரில் 0.25% ஆகவும், நவம்பரில் 0.71% ஆகவும் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட கணிசமான சரிவானது இந்த பணவீக்கக் குறைவுக்கு முக்கியக் காரணம். மேலும், பண்டிகை காலச் செலவினங்கள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதக் குறைப்புகளும் அக்டோபர் மாதத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பங்களித்தன.

கடந்த அக்டோபர் ஆனது திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் முழுமையாக அமலுக்கு வந்த முதல் மாதமாகும். இதன் விளைவாக, குறிப்பாக பயணிகள் வாகன விற்பனை அதிகரித்தது. இருப்பினும், மற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை குறித்த தெளிவான தரவுகள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. 2025 அக்டோபரில், மொத்த பணவீக்கத்திற்கான தொகுப்பில் அடங்கிய பொருட்களில் 40% விலை குறைந்துள்ளது.

ev demand shifts to ice cars in india

இது 2014 முதல் சேகரிக்கப்படும் விபரங்களில் மிக உயர்ந்த எண்ணிக்கை ஆகும். பொதுவாக, ஒரு மாதத்தில் அதிகப்பட்சமாக சுமார் 20% பொருட்களின் விலைகள் மட்டுமே குறையும். ஜிஎஸ்டி கவுன்சில் செப்டம்பர் 22 முதல் சுமார் 400 பொருட்களுக்கான மறைமுக வரி விகிதங்களைக் குறைத்தது. சிறிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் 28- 31%-இல் இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டன.

இந்த வரி குறைப்பின் பலனாக கார் & பைக்குகளின் விற்பனை அதிகரித்தது. புள்ளியியல் அமைச்சகத்தின் பணவீக்கத் தரவுகளின்படி, அக்டோபரில் 299 பொருட்களில், மோட்டார் கார்கள் மற்றும் ஜீப்களின் விலைகள் 6.8% சரிந்தன, இது ஒட்டுமொத்த பொருட்களிலேயே மிக அதிக விலை சரிவாகும். இருசக்கர வாகனங்கள் 4.5% சரிவைக் கண்டன.

ev demand shifts to ice cars in india

ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளின் தாக்கம் நவம்பரிலும் தொடர்ந்தாலும், தாக்கத்தின் அளவு கணிசமாகக் குறைந்தது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி வரிக் குறைப்புகள் கார் வாங்குபவர்களுக்குப் பெரும் ஊக்கமளித்த அதே வேளையில், எதிர்பாராத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்கள் (EVs) மீதான ஆர்வம் குறைந்துள்ளது.

எலெக்ட்ரிக் கார்களின் ஸ்டாக்குகள் விற்காமல் இருப்பதால், டீலர்கள் தற்போது ஷோரூம் அளவிலான தள்ளுபடியை அறிவித்து வருகின்றனர். எலெக்ட்ரிக் பயணிகள் கார்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors), ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India), மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) ஆகியவை முக்கிய பங்களிப்பாளர்கள் ஆகும்.

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி நிறுவனம் 'மிட்நைட் கார்னிவல்' என்கிற பெயரில் சலுகைகளை வழங்கியது. இதன் கீழ் எம்ஜி இசட்.எஸ் இவி (ZS EV) எலெக்ட்ரிக் காருக்கு ரூ.1.25 லட்சம் வரையும், கோமெட் இவி (Comet EV) காருக்கு ரூ.1 லட்சம் வரையும் சலுகைகள் கிடைத்தன. இந்த டிசம்பரில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தள்ளுபடிகள் கடந்த ஆண்டை விட கணிசமாக உயர்ந்து ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளன.

மாறாக, உள் எரிபொருள் எஞ்சின் (ICE) கார்களுக்கான பெரிய தள்ளுபடிகள் சில மெதுவாக விற்பனையாகும் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதே அன்றி, பரந்த அளவில் இல்லை. இந்தத் தாக்கம், டாடா பன்ச் இவி (Tata Punch EV), நெக்ஸான் இவி (Nexon EV), ஹூண்டாய் கிரெட்டா இவி (Hyundai Creta EV), எம்ஜி இசட்.எஸ் இவி (MG ZS EV) போன்ற பெட்ரோல்/ டீசல் என்ஜின் வெர்சன்கள் உடனும் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களில் தெளிவாகத் தெரிகிறது.

ev demand shifts to ice cars in india

எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையின் இந்த நிதானமான போக்கு, கார் உற்பத்தியாளர்கள் வலுவான பண்டிகை காலத் தேவையை எதிர்பார்த்து உற்பத்தியையும் கையிருப்பையும் பெருக்கியதால் ஏற்பட்ட விநியோகக் குவிப்பிற்கு ஏற்றதாக இல்லாமல், சிக்கலை உருவாக்கியுள்ளன. எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்படுவது தேவையை விட அதிகமாக இருப்பதற்கு தற்போதைய தள்ளுபடிகளே ஆதாரம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஆனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பெட்ரோல்/ஹைப்ரிட் கார்களுக்கும் இடையேயான மொத்த உரிமைச் செலவு (TCO) இடைவெளியைக் குறைத்து, மின்சார வாகனங்களை குறைந்த கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது. இதற்கு நேர்மாறாக ஷோரூம்களில் எலெக்ட்ரிக் கார் & 2-வீலர்களின் ஸ்டாக்குகளை அதிகரித்தது தற்போதைய தள்ளுபடிகளுக்கு முக்கிய காரணங்களாகும்.

இதற்கிடையில், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கடந்த நவம்பரில் 'எக்ஸ்இவி 9எஸ்' (XEV 9S) என்கிற ஏழு இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ரூ.19.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியது. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற அதிகளவில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இதுகுறித்து இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆண்டின் மந்தமான தொடக்கத்திற்குப் பிறகு, பயணிகள் கார்கள் சந்தை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வலுவான உத்வேகத்தைப் பெற்றுள்ளது. செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்த திருத்தப்பட்ட வரிக் கட்டமைப்பு இதற்கு முக்கிய காரணமாகும். இது 4 மீட்டருக்கும் குறைவான கார்களுக்கான ஜிஎஸ்டியை 28%-இல் இருந்து 18% ஆகக் குறைத்து, இழப்பீட்டு வரியையும் நீக்கியது. இதன் மூலம் பெட்ரோல், ஹைப்ரிட், எல்பிஜி, சிஎன்ஜி, டீசல் கார்களின் விலைகள் கணிசமாகக் குறைந்தன.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 16, 2025, 17:01 [IST]
English summary
Ev demand shifts to ice cars in india through gst cuts boost check all details here
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X