டாடாவின் கோட்டையில் ஓட்டையை போட்ட 2 நிறுவனங்கள்! ஒட்டு மொத்தமா தரைமட்டமாக்க போறாங்க!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன மார்கெட் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது தற்போது வரை தாடாட நிறுவனம் தான் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது அதன் சாம்ராஜ்ஜியத்தை அழிக்க 2 நிறுவனங்கள் உருவெடுத்துள்ளது கடந்த ஜூன் மாத விற்பனை பார்க்கும் போது இது நமக்கு தெளிவாக தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த ஜூன் மாதம் மட்டும் இந்தியாவில் 13,033 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த வாகனங்கள் கடந்தாண்டு ஜூன் மாத விற்பனையை விட 78 சதவீதம் அளவிற்கு அதிகரித்த விற்பனையாகும். கடந்த ஜூன்மாதம் நடந்த ஒட்டு மொத்த விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மட்டும் 4 சதவீதமான உள்ளது. மெல்ல மெல்ல மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகரத்து துவங்கிவிட்டனர் என்பது இதன் மூலம் தெரிகிறது.

EV Sales June 2025

இதில் டாடா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 4664 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் 4590 கார்களை விற்பனை செய்திருந்தது. இது 2 சதவீத விற்பனை உயர்வாகும். கடந்த மே மாதம் 4599 கார்களை விற்பனை செய்திருந்தது. 1 சதவீத விற்பனை உயர்வாகும்.

அடுத்த இடத்தில் எம்ஜி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 3945 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் 1476 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 167 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். கடந்த மே மாதம் 4054 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் 3 சதவீத விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.

EV Sales June 2025

அடுத்த இடத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 2979 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் வெறும் 487 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 512 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். கடந்த மே மாதம் 2833 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் 5 சதவீத விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அடுத்த இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 509 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் வெறும் 63 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 708 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். கடந்த மே மாதம் 639 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் 20 சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

EV Sales June 2025

அடுத்த இடத்தில் பிஒய்டி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 461 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் 243 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 90 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். கடந்த மே மாதம் 516 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் 11 சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அடுத்த இடத்தில் கியா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 41 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் 16 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 156 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். கடந்த மே மாதம் 30 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் 37 சதவீத விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடைசி இடத்தில் சிட்ரோன் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 80 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் 238 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 66 சதவீத விற்பனை வீழச்சியாகும். கடந்த மே மாதம் 123 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் 35 சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதை வைத்து பார்க்கும் போது டாடா நிறுவனம் தான் குறைவான வளர்ச்சியை சந்தித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள மஹிந்திரா மற்றும் எம்ஜி ஆகிய நிறுவனங்கள் சேர்த்து 53 சதவீத மார்கெட் பங்கை பிடித்தததால். இவ்வளவு காலம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் தனி சாம்ராஜ்ஜியத்தை நடத்திய டாடாவின் கோட்டையில் இந்த நிறுவனங்கள் ஓட்டையை போட துவங்கிவிட்டது தெளிவாக தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 3, 2025, 8:30 [IST]
English summary
Ev sales june 2025 mahindra mg contribute 53 percent
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X