10 லட்சம் பேர் இதை நம்பி வாங்கிட்டாங்க! இன்னும் நீங்க யோசிட்டே இருக்க போறீங்களா?
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி வரும் நிலையில் 6 மாதத்திலேயே 10 லட்சம் பேர் எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வானகங்களை மக்கள் விரும்ப துவங்கிவிட்டனர். குறிப்பாக டூவீலர் செக்மெண்டில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாகனங்கள் விற்பனையாகி வருகிறது. கார்களை பொருத்தவரை எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இருந்தாலும், அதிக ரேஞ்ச் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதால் பலர் வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் ஒரளவிற்கு விற்பனைதான் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரை மொத்தம் 11 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனவையாகியுள்ளதாக வாகன் தளத்தில் பதிவாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு முதல் பாதி நதியாண்டில் மொத்தம் 8.95 லட்சாம் வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்பேஆது 2.05 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இது 22.9 சதவீத வளர்ச்சியாகும்.
இந்தியாவில் கடந்த செப் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்க வந்தது. இதனால் பெட்ரோல், மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. 28 சதவீதம் மற்றும்செஸ் வரியாக இருந்தது. சிறிய கார்களுக்கு 18 சதவீதமும், பெரிய கார்களுக்கு 40 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதே 5 சதவீத வரி தான். முன்பு பெட்ரோல் வானகங்களுக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் இடையே 23 சதவீத வரி வித்தியாசம் இருந்தது. தற்போது இது 13 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சற்று குறைந்துள்ளது. 1.82 லட்சம் கார்கள்கடந்த மாதம் மட்டும் விற்பனையாகியுள்ளது. இதுவே ஆகஸ்ட் மாதம் 1.88 லட்சம் கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 3.3 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.
இதில் காரை பொருத்தவரை கடந்த ஆஸ்ட் மாதம் 18,290 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியிருந்தது. இதுவே கடந்த செப்டம்பர் மாதம் வெறும் 15,100 கார்கள் தான் விற்பனையாகியுள்ளது. இந்த விற்பனை 17.4 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் ஆகும் கார் விற்பனையில் 4-5 சதவீதம் வரை எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி மாற்றத்தால் கார் விற்பனை குறைவானது. ஆனால் எலெக்ட்ரிக் டூவீர் விற்பனவையில் மாற்றங்கள் இல்லை. கடந்த ஆகஸ்ட்மாதம் 1.05 லட்சம் எலெகட்ரிக் டூவீலர்கள் விற்பனையாகியிருந்தது. இதுவே செப்டம்பர் மாதம் 1.04 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்கள் விற்பனையாகியிருந்தது. வெறும் 1000 டூவீலர்கள் விற்பனை தான் குறைந்துள்ளது. டூவீலர் விற்பனையில் பெரிய பாதிப்பில்லை. ஆனால் கார் விற்பனையில் மிகப்பெரிய விற்பனை குறைவு ஏற்பட்டுள்ளது.
வருங்காலங்களில் இந்த விற்பனை குறைவு சரி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் வாகன விற்பனை என்பது தற்போது பெரும் புரட்சியே செய்து வருகிறது. இதனால் இந்தாண்டு இறுதிக்குள் விற்பனை மிகப்பெரிய அளவு அதிகரிக்கும். சார்ஜிங் கட்டுமானம், மற்றும் நீண்ட தூர ரேஞ்ச் கொண்ட பேட்டரி, விரைவாக சார்ஜ் ஏற்றும் சார்ஜர்கள் எல்லாம் வந்தால் பெட்ரோல், டீசல் காரை பின்னுக்கு தள்ளி அதிகமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகமாகி வருகிறது.மக்கள் பலர் இந்த எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதனால் இந்த நிதியாண்டு முடிவதற்குள் 20 லட்சம் வாகனங்கள் விற்பவனையாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









