ரூ45 லட்சம் வரியை வேணாம்னு சொல்லிட்டாங்க! பணக்காரங்களுக்குன்னே வரியை குறைச்சிட்டாங்களா?

வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வரியை குறைத்ததன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி எலக்ட்ரிக் காரை வாங்கினால்பல லட்ச ரூபாய் வரியை சேமிக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசு கணிசமான அளவு வரியை குறைத்துள்ளது. இதன் மூலம் சொகுசு காரர்கள் எல்லாம் எவ்வளவு விலை குறைகின்றன என்ற விவரங்களை விரிவாக காணலாம் வாருங்கள்.

பொதுவாக வாகனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வரிகளை விதிக்கின்றன. வாகனங்கள் அதிக விலையில் இருந்தால் அதிக வரிகள் விதிக்கப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள வரி சட்டத்தின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. வாகனங்கள் விற்பனை மூலம் அரசு வரியில் மிகப்பெரிய அளவு வருமானம் ஈட்டி வருகிறது. இதனால் தான் காஸ்ட்லியான கார்கள் எல்லாம் அதிக விலையில் விற்பனையாகி வருகின்றன.

EV Tax Exemption

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக சொகுசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரியை தற்போது குறைத்துள்ளது. கூடுதலாக விதிக்கப்படும் 6 சதவீத வரியை தற்போது மாநில அரசு நீக்கி உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநில அரசு சார்பில் கூடுதலாக ஆறு சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது இந்த வரி தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இது எவ்வளவு தூரம் சேமிக்கும் என்றால் நீங்கள் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஸ்பெக்டெடர் காரை வாங்க வேண்டும் என்றால் அதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 7.5 கோடி ஆகும். இதை நீங்கள் மும்பையில் வாங்க வேண்டும் என்றால் கூடுதல் 6 சதவீத வரி இல்லாமல் ஆன்ரோடு விலை 7.8 கோடியை செலுத்த வேண்டியது இருக்கும். இதுபோக தற்போது வரை இந்த காரை வாங்குவதற்கு கூடுதலாக 6சதவீத வரி சேர்த்து ரூ 8.2 கோடி ஆண்டோடு விலையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து உள்ளது.

EV Tax Exemption

தற்போது அந்த 6 சதவீத வரியை குறைத்ததன் மூலம் சுமார் ரூ 45 லட்சம் வரை ஆன் ரோடு விலை குறைகிறது. இதனால் இந்த காரை வெறும் ரூபாய் 7.8 கோடியிலேயே தற்போது வாங்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மற்றொரு உதாரணம் என்றால் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐஎக்ஸ்1 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எடுத்துக் கொள்வோம். இந்த கார் ஷோரூம் விலையாக ₹49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காருக்கு கூடுதல் வரியாக 2.9 லட்சம் வரை செலுத்த வேண்டியது இருந்தது. தற்போது இந்த வரி குறைக்கப்பட்டுள்ளதால் இந்த காரின் விலை குறைந்தது. இதனால் இந்த கார் அதன் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன் விலையை விட குறைவான விலையில் இந்தியாவில் விற்பனை ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்காக மாநில அரசு எடுத்துள்ள முயற்சிகளில் இது முக்கியமான முயற்சியாகும். இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும் அதனால் விற்பனை அதிகரித்து எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள். இதனால் காற்று மாசு வெகுவாக குறையும் என நாம் மாநில அரசு திட்டமிட்டு இந்த வரி குறைப்பை செய்துள்ளது.

EV Tax Exemption

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையை அதிகரிக்க வேண்டிய தேவை பலருக்கு இருக்கிறது. இது பல வழிகளில் இந்தியாவிற்கு நன்மை பயக்கும் என்பதால் இந்த விற்பனையை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அதில் மகாராஷ்டிரா மாநிலம் இப்படியான முக்கியமான திட்டத்தை முன்னெடுத்து மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக மாறி உள்ளது. இதனால் மற்ற மாநிலங்களும் இந்த நடவடிக்கையை எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்தியா தற்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகன மார்க்கெட்டாக மாறி உள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது
அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ள நிலையில் தற்போது விற்பனையாகும் ஒட்டுமொத்த வாகன எண்ணிக்கையில் இரண்டு சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கிறது. 2030 ஆம் ஆண்டிற்குள் இதை 30 சதவீதமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்றால் போதுமான அளவு சார்ஜிங் ஸ்டேஷன் இல்லை மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைவான ரேஞ்சை தருவதுதான் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இதுபோக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் அதிகமாக இருக்கிறது. இதில் விலை பிரச்சினையை சரி செய்யவே வரி குறைப்பை அரசு கையில் எடுத்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. டாடா நிறுவனம் தான் அதிக அளவிலான காரங்களை தற்போது வரை விற்பனை செய்து வருகிறது. மஹிந்திரா நிறுவனம் மெல்ல மெல்ல அதன் விற்பனையை அதிகரித்து அதிக மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இது எதிர்காலத்தில் அந்நிறுவனமும் சிறப்பான விற்பனையை பெறும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனையாக ஒட்டுமொத்த வாகன எண்ணிக்கையில் 10% வாகனங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே விற்பனை ஆகிறது. இதனால் மகாராஷ்டிரா மாநிலம் வாகன விற்பனையில் மிக முக்கியமான மாநிலமாக இருக்கும் என்பதால் இந்த மாநிலத்தில் இப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகன விற்பனையை அதிகரிக்கும் குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி அதிகமாக விற்பனையாக வாய்ப்புகள் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை குறி வைத்து தற்போது வெளிநாட்டு எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களும் தங்கள் ஆலையை இந்தியாவில் நிறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் தனது காலடிதடத்தை எடுத்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கு ஒரு படி மேலே போய் வின்ஃபாஸ்ட் என்ற வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனமும் இந்தியாவில் தனது ஆலையை கட்டமைத்து வருகிறது. விரைவில் அங்கு தயாரிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வரி குலைப்பு மூலம் மகாராஷ்டிரா மாநிலம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் மிக முக்கியமான மாநிலமாக மாறுவதற்கான முயற்சியை கையில் எடுத்துள்ளது என்ன சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 28, 2025, 21:00 [IST]
English summary
Ev tax exemption in maharastra save upto 45 lakhs
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X